ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்தனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
Published on

மதுரை

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஓ.சி.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 63 பேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி பருவத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை கூறி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதில் சிலர் தொழில் அதிபர்களாகவும், சுய தொழில் செய்பவர்களா கவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவர், வெளிநாட்டில் பணி பொறியாளராகவும் பணி யாற்றி வருகின்றனர். மேலும் தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பள்ளிப் பரு வத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியு டன் காணப்பட்டனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com