search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meet"

    • வலங்கொண்டான் விடுதி, வெள்ளாள விடுதியில் எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா பொதுமக்களை சந்தித்து மனு பெற்றுக்கொண்டார்
    • அதிகாரிகளை உடன் அழைத்து சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட வலங்கொண்டான் விடுதி ஊராட்சி மற்றும் வெள்ளாள விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடன் வருகை புரிந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்மணி, சிவகாமி, ரெங்கசாமி, பழனிதுரை, சந்திரசேகர், பவுல்ராஜ், மதியழகன், சீனிவாசன், வெள்ளாள விடுதி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புனவாசல் அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • கல்வி போதித்த ஆசிரியருக்கு தங்க மோதிரம் பரிசு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,ஆசிரியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.படிக்கும் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களை அழைத்து சிறப்பு செய்தனர்.அதனை தொடர்ந்து சுப்பிரமணியன் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தி அவருக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தனர்.அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று கூடி செல்பி எடுத்துக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாது முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவு வூட்டி தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி கொண்டனர். முன்னாள் மாணவர்கள் நடத்திய நிகழ்வானது காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ இளங்கோ
    • பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடையில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வையாபுரிநகர் கிளை வங்கி சேமிப்பு கணக்கு சிறப்பு முகாமில் குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விற்பனையாளர் கௌசல்யா என்பவர் அதிக அளவிலான புதிய சேமிப்பு கணக்கு துவங்கியதைத் தொடர்ந்து பதிவாளர் அவர்களின் அறிவுரைப்படி ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வீதம் 207 விண்ணப்பத்திற்கு ரூ.1035 ஊக்கத்தொகை மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வழங்கினார்.மேலும், இந்த முகாமில் மகளிருக்கு உடனுக்குடன் சேமிப்பு கணக்கு துவக்கிட விண்ணப்பம் அளித்து உடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டது.இந்நிகழ்வில் துணைப்பதிவாளர் அபிராமி , வங்கி துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • திருச்சி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி சந்திப்பு
    • இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

    திருச்சி,

    திருச்சி டவுன் ரெயில் நிலையம்அருகே யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1996-98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12-ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமை ஆசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்:து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி தொடங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரூர்அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது
    • 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1999-2002ம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து உரை யாடியதோடு, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில், கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் தாசில்தார், வழக்கறிஞர் போன்ற பதவிகளில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    • 2009ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தவர்கள்
    • தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்

    திருச்சி,

    திருச்சி சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2004-2009 ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.இதில் தற்போது நீதிமன்ற நடுவர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவர்களான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் பழைய நினைவுகள் மற்றும் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், மணிவண்ண பாரதி, ஜீவானந்தம், அஸ்வின் குமார், இக்பால் நாசின் , கோபிநாத், சாகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்தனர்
    • அச்சுறுத்தல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் பாஸ்கரன், மூர்த்தி மற்றும் தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.இதே போல் திருச்சி தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் திவ்யநாதன், பெரம்பலூர் அஸ்வின்ஸ் தொழிற்சாலை மற்றும் கம்பெனிகள், ஓட்டல்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம், பணிபுரியும் இடத்தில் குறைபாடு மற்றும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.அப்போது அவர்களிடம் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை வாட்ஸ்-அப் மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்துங்கள். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இதில் 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் செய்யது மசூது சாகிப், சித்திக், சாகுல்கமீது, சகீர், அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமில் வரவேற்றார். பேச்சியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ஆசிரியர் இப்ராஹிம், டாக்டர் சஞ்சீவி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமீன், முன்னாள் ஆசிரியர் முகைதீன், அக்பர் அலி, முன்னாள் மாணவர் ஜமால் ஆகியோர் பேசினர். இதில் சுமார் 60 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பைசல், உபைதுல்லா, சாகுல், மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் இஸ்மாயில் நன்றி கூறினார்.

    • 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை படித்த மாணவ - மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தங்களுக்கு பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

    பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் பீரோ, மின்விசிறி மற்றும் பல பொருள்களை பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கினர். 18 ஆண்டுகளுக்கு முன் 5½ ஏக்கர் நிலத்தை பெருமாநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பால சமுத்திரத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர் ரத்தினசாமி நினைவுகூர்ந்து அவரது மகன் முரளிகுமரேசனை கவுரவப்படுத்தினர்.

    இந்த சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. 47 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    பின்பு நடந்த அறிமுக விழாவிற்கு முன்னாள் மாணவர் அதிசய ஜாண் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும் கோவா தொழில் அதிபருமான பால்ராஜ், பள்ளி தாளாளர் ஜேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரும், பள்ளி முன்னாள் மாணவியுமான கலாவதி மணிமாறன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் சுவிஷேச முத்து, டாரதி சுவிஷேச முத்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் தங்கவேல், அல்வாரில், ஜேசு டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர் ஜெபதாமஸ் நன்றி கூறினார்.

    • திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடத்தப்பட உள்ளது.
    • திருநங்கைகள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் சென்றடையும் நோக்கில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் வருகிற 5-ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் அனைவரும் காலை 11 மணிக்கு தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    • வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1989 - 1990 -ஆம் ஆண்டு பிளஸ் 2 கலைப்பிரிவு பயின்ற மாணவ மாணவிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அப்போதைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அருண் மற்றும் பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினர். தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பெரும்பாலனோர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்குத் தேவையான 2 பேட்டரிகள் முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை சங்கரசுப்பிரமணியன், முத்துராஜ், வழக்கறிஞர் செந்தில், சாகுல் ஹமீது, இசக்கிராஜா, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×