திருச்சி சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

2009ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தவர்கள் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்
திருச்சி சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Published on

திருச்சி,

திருச்சி சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2004-2009 ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.இதில் தற்போது நீதிமன்ற நடுவர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது முன்னாள் மாணவர்களான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் பழைய நினைவுகள் மற்றும் தற்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், மணிவண்ண பாரதி, ஜீவானந்தம், அஸ்வின் குமார், இக்பால் நாசின் , கோபிநாத், சாகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com