முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கரூர்அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்டனர்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

கரூர்,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1999-2002ம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து உரை யாடியதோடு, பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில், கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் தாசில்தார், வழக்கறிஞர் போன்ற பதவிகளில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com