அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்த எம்.எல்.ஏ.,

வலங்கொண்டான் விடுதி, வெள்ளாள விடுதியில் எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா பொதுமக்களை சந்தித்து மனு பெற்றுக்கொண்டார்அதிகாரிகளை உடன் அழைத்து சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்த எம்.எல்.ஏ.,
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட வலங்கொண்டான் விடுதி ஊராட்சி மற்றும் வெள்ளாள விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடன் வருகை புரிந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்மணி, சிவகாமி, ரெங்கசாமி, பழனிதுரை, சந்திரசேகர், பவுல்ராஜ், மதியழகன், சீனிவாசன், வெள்ளாள விடுதி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com