search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ANNUAL CELEBRATION"

    • ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500 பரிசாக வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் 54-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பட்ட போட்டிகளில் வென்ற வர்களுக்கு பரிச ளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாரா யணராஜன் முன்னிலை வகித்தார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.

    முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையருமான இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பயின்றோர் கழக இணை செயலாளர் தர்மபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பொருளாளர் பகவதி பாண்டியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

    பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல், கதிரேசன், முனைவர் பட்டம் பெற்ற கோகிலா, திருச்செல்வன், சிறப்பு விருது பெற்ற முனைவர் லிங்கத்துரை ஆகியோர் கவுரவிக்கப்பட்ட னர்.

    பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி யில் முதலிடம் பிடித்த காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி நஜிபா ஹில்மியா வுக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தலட்சுமிக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்து சபுராவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது.

    கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த மாணவி வினிஷாவுக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த மாணவர் தமிழரசுவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24, 27 ஆகிய தேதிகளில் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'தொழில் முனைவு- ஒரு வெற்றிகர மான தொழில் விருப்பம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், சேவியர் கல்லூரி பேராசிரியர்கள் முருகேசன், பிரின்ஸ், ஸ்டெல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    • அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் சி.பி.எஸ்.சி. பப்ளிக் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், அறிவியல் விஞ்ஞானி இங்கர்சால் செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வாசித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா செய்திருந்தார்.

    கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், ஜீவரத்தினம், வாசன் பள்ளியின் தாளாளர் வாசன், புது நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜவேலுச்சாமி, அரசு வழக்கறிஞர் கேசவன், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிவகிரி வட்டக் கிளையின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகிரி:

    சிவகிரியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சிவகிரி வட்ட கிளையின் சார்பாக 26-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி வட்டக் கிளையின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர்கள் சேதுராமலிங்கம், குருசாமி, வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தின் செயலாளர் உலகநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். இணைச் செயலாளர் கடற்கரை வரவேற்றார். பொருளாளர் ராமர் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாடசாமி நலநிதி அறிக்கை வாசித்தார். அருணாசலம் அமரர் நிதி அறிக்கை வாசித்தார். பாலசுப்ரமணியன் இரங்கல் அறிக்கை வாசித்தார். அமைப்பின் மாநில துணைத்தலைவர் சிவதிருமேனிநாதன் இயக்கக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களைப் போல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவு பெற்றவுடன் 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விளையாட்டு போட்டிகளை பழைய மாணவர் பாலஸ்ராஜன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜேகர் முன்னிலை வகித்தார். சேகரகுரு பர்னபாஸ் ஜெபம் செய்தார்.

    திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான், ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்பு சிவமதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர். விழா மலரை வில்சன் ஆனந்தராஜ் வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார். சங்க பொதுச்செயலாளர் சாமுவேல் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஜெபதாமஸ் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் சாத்ராக்ஞானதாசன் வரவேற்று பேசினார். விழாவில் திரளான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா பெற்றது.
    • மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    பெரம்பலூர்:

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்கியது.

    இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடந்தது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது.

    பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா ரெங்கராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனுப்பிரியா செந்திலக், அனுசுயா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×