என் மலர்
நீங்கள் தேடியது "Sivagiri"
- புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள் எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
சிவகிரி:
புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள், எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர். பெண்கள் பிரிவில் வட்டார அளவில் 29 புள்ளிகள் எடுத்து, 2-வது இடத்தையும் பெற்று கோப்பை வென்றது. மாவட்ட அளவில் 6 மாணவிகளும் தேர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவ - மாணவிகளுக்கு வழங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர அறிவுரைகள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வி குழு உறுப்பினர்கள், அறப்பணி குழு உறுப்பினர்கள், வீரகுமார், காசிராஜன், மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.
- மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
- நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகிரி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டும், சிவகிரி பேரூராட்சி சார்பில் 76 மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடகோபு வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சிவகிரி தாசில்தார் ஆனந்த், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சிவகிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராம சுகாசினி, சித்த மருத்துவர் ஜெயந்தி, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா, வனவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
விழாவில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு உறுப்பினர்கள் செந்தில்வேல், ரத்தினராஜ், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வேட்டை தடுப்பு காவலர் மாரியப்பன், தலைமை எழுத்தர் தங்கராஜ், வரிவசூலர் முத்துப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சித்தா மருந்தாளுநர் தனகேஸ்வரி நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
- சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
- அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 50 கிலோ பைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி வரி தண்ட லர்கள் முத்துப் பாண்டி, நாராயணன், துப்புரவு மேற்பார் வையாளர், இசக்கிராஜ் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உடன் இருந்தனர்.
- விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- ராயகிரி, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின்விநியோகம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. எனவே மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டது.
சிவகிரி:
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழகம் ஆகியவைகளின் சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பாக நகர செயலாளர் குருசாமி தலைமையில், நகர தலைவர் பழனி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமான முறையில் தொடர்ந்து சுத்தமான குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யப்பன், அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் ஆயூப்கான், அகில இந்திய பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பிச்சைமணி ஆகியோர் பேசினர்.
இதனைத்தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட வேண்டும் அவற்றின் மூலம் ஏழை- எளிய மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபுவிடம் அளித்து, இக்கோரிக்கையை சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களின் நலன் வாழ்விற்காக செயல்படுத்த வலியுறுத்தித்தினர்.
- வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
- மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
சிவகிரி:
சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலா ளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், ராயகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் குருசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருத ப்பன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் வர வேற்று பேசினார். மாவட்ட மாணவரணி துணை அமை ப்பாளர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் மருது பாண்டியன், வக்கீல் அணி மாவட்ட துணைச்செ யலாளர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாசு. ஒன்றிய நிர்வாகிகள், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள், சிவகிரி வார்டு செயலா ளர்கள், முன்னாள் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை மாநில மருத்துவர் அணி துணைச் செயலா ளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம் செய்திருந்தார்.
- தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் உள்ளிட்ட பலர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்து லட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனக ஜோதி, முத்துமாரி மற்றும் அலு வலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- எஸ்.எஸ்.அமுதன் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.
சிவகிரி:
தாய்லாந்து நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் எஸ்.எஸ்.அமுதன் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரம்பரிய யோகாசன போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவரை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் செயலாளரும், எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தாளாளருமான எஸ்.டி.முருகேசன் பாராட்டினார்.
- பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
- இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் தவமணி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பாசிரியை சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.