search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodumudi"

    • இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று 4-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று முன்தினம் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 69. 20 மில்லி மீட்டர் அதாவது 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் அம்மாபேட்டை, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுபள்ளம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் நள்ளிரவில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 4 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனினும் காலை நேரம் வெயில் வழக்கும் போல் வாட்டி எடுத்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-69.20, அம்மாபேட்டை-27.40, சென்னிமலை-27, பெருந்துறை-26, வரட்டுபள்ளம்-19.40, ஈரோடு-5, கவுந்தப்பாடி-4.80, பவானி-4, நம்பியூர் பவானிசாகர் கொடிவேரி பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    கொடுமுடி, கணபதி பாளையம், சிவகிரி, நடுபாளையம், ஈங்கூர் துணை மின் நிலையங்களில் பரா மரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப் புதூர், குப்பம் பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல் பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், சோளக்காளி பாளையம், நாகமநாய்க்கன் பாளையம்.

    சிவகிரி, வேட்டுவபாளை யம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழ மங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங் காட்டு வலசு, எலலக்கடை, குல விளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாைளயம், பாரப்பாளை யம், விளக்கேத்தி, குட்டப் பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுக பட்டி, 24 வேலம் பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப் புதூர், ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தை யன் வலசு, கருக்கம் பாளை யம், ஊஞ்சலூர், ஒததக்கடை, வடக்கு புதுப்பாளையம்.

    ஈஞ்சம்பள்ளி, முத்து கவுண்டன் பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ராக்கியா பாளையம், மடத்துப்பாளையம், கணபதி பாளையம், பச்சாம் பாளை யம், பழனி கவுண்டன்பாளை யம், பஞ்சலிங்க புரம், காங்கேயம் பாளையம், சாானார் பாளையம், குமரன் பாளையம்.

    நடுப்பாளையம், தாமரை பாளையம் மலையம் பாளை யம், கொம்பனை புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம் பள்ளி, கொளாநல்லி, கரு மாண்டாம் பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், எம்.கே. புதூர், காளிபாளையம், கொளத்து பாளையம், செம் மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

    பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப் பாளையம், மு.பிடாரியூர், வேலாயுதம் பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை, ஆர்.எஸ்., ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வாளர் தேன்மொழி முன்னிலையில் 20 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.

    திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் குழுவினர், சென்னிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    • போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் நல்லசாமி (வயது 35). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அப்போது அவர் போலீஸ் சீருடையில் மது அருந்திவிட்டு ஒரு டீ கடையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சிறுவல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு செல்வதற்குள் நல்லசாமி அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். போலீசார் ஒருவர் மது போதையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    • மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

    ஈரோடு:

    மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.

    இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

    வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொங்கியது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையுடன் தொங்கியது.

    இதனையொட்டி வீரநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் காலையில் ஸ்ரீ சுதர்சன் ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொடங்கியது.

    கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் மற்றும் ராஜா ஆகியோர் தலைமையில் வேத விற்பன்னர்களை கொண்டு லட்சார்சனை நடத்தப்பட்டது. வருகின்ற 1-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் அன்று காலை லட்சார்ச்சனை விழா நிறைவு பெறுகின்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுகுமார் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது. சிறந்த பரிகார தலமாகவும் உள்ளது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து திதி, தர்ப்பணம் மற்றும் திருமண தோஷம் நீக்கும் பரிகாரங்கள் செய்து வருகிறார்கள்.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும். மேலும் ஆடி பிறப்பு மற்றும் ஆடி 18 நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அம்மாபேட்டை, பவானி, ஈரோடு மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கொடு முடி காவிரி ஆற்றில் குளிக்கும் இடத்தில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதனால் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடுமுடி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் கொடுமுடி காவிரி ஆற்றின் அருகே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தகரம் அமைத்து அதில் ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து பக்தர்கள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த சூளை கல்பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). லோகநாதன் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையை சொந்தமாக மிஷின் வைத்து வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி அருகே ஆசிரியர் வீட்டில் புகுந்து 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்றார்.

    இன்று காலை குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்ச அடைந்தார். வீட்டின் கதவு பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    பதட்டத்துடன் உள்ளே சென்றனர். அங்கு பீரோவும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் மேல்பகுதியில் உள்ள ‘‘கபோர்ட்டை’’ திறந்து பார்த்து உள்ளனர். அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்று உள்ளனர்.

    வீட்டில் பழங்கால கடிகாரம் மற்றும் பழங்கால பொருட்கள் இருந்தது. அதனையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்தார். வீட்டில் சி.சி.டி.வி கேமிரா இருந்திருந்தால் கொள்ளையர்கள் உடனே அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லை. எனினும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து கொத்தாக மைனா குருவிகள் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. #Sparrows
    கொடுமுடி:

    சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் டவர்களால் பறவைகள் குறிப்பாக சிட்டு குருவிகள் இறந்து விழுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு செல்போன் டவர்களால் பறவைகள் இனமே அழிந்து வருவதாகவும், வருங்காலத்தில் இதை குறைக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

    அந்த படத்தில் வந்த காட்சி போன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கொடுமுடி அடுத்த சாலை புதூர் சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக வேப்பமரம், புளியமரம், புங்கை மரம் என பலவகை மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் குறிப்பாக மைனா குருவிகள் அதிக அளவில் கூடுகள் கட்டி வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மரங்களில் இருந்து மைனா குருவிகள் கொத்து...கொத்தாக இறந்து விழுந்தன. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


    சிலர் இறந்து விழுந்த மைனா குருவிகளை சாக்கு பைகளில் அள்ளிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மைனா குருவிகள் இறந்து விழுந்த பகுதிக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் செல்போன் டவர்கள் உள்ளன. அந்த செல்போன் டவர்களால்தான் மைனாக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விழுகின்றன’’ என்று புகார் கூறினார்கள்.

    இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #Sparrows
    ×