என் மலர்
நீங்கள் தேடியது "பயிற்சி"
- அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குப்பதேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேதுபா வாசத்தி ரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.
வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்கு மார் பயிற்சி குறித்து விவசாயிகளிடம் பேசியதா வது, நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறை குறித்தும், சொட்டுநீர் பாசன கருவிகளான வடிகட்டி, அழுத்தமானி, சொட்டுநீர் பாசன குழாய்கள், வெஞ்சுரி (உரம் செலுத்தும் கருவி) ஆகியவற்றின் பராமரிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்ப டும் ஆவணங்கள்.
அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுக ளை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திரு ந்தனர்.
முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரம ணியன் நன்றி கூறினார்.
- பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
- ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மையத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் வெள்ளாடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவுசெய்து இலவசமாக பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
- 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தஞ்சாவூர்:
உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.
இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கொழுப்பை கரைக்க பல வகையில் முட்டுக்கட்டை போடும்.
- உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.
நீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய்துவந்தால், உடலுக்கு நல்லதுதான். ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிம் போகும்போது நீங்கள் கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்:
ஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் உடல் "கொழுப்பு சேமிக்கும் கிடங்காக" பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உடல் பயிற்சி செய்யத்தொடங்கிய சில வாரங்களுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத் தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும்.
அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம். உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.
வெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் இரு கைகளை போன்றது. பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.
- அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கம்
- கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனர்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை சார்பில் ஆத்மா திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு மாநிலஅளவிலான சிறுதானிய பயிர்களின் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் கடினமாலா, அரக்கோடு பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு சிறுதானிய பயிர்களான தினை, சாமை, கேழ்வரகு அங்ககமுறை சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் தினை, சாமை மதிப்பு கூட்டுதல், அங்கக முறையில் காபி சாகுபடி மற்றும் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
- திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன.
- புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது.
திருப்பூர்
திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன் , பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளில் சாயமிடுவதில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தரமாக சாயமிடுவதற்காக உப்பும் பயன்படுத்தப்படுகிறது. சாயம், ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதால் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே அப்பணிகளை செய்ய முடிகிறது.
இதேபோல் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு பிரிவிலும், தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மற்ற தொழில்களை போல் சாய ஆலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. நீண்ட நாள் பணி செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அதற்காக பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை அதற்கான பயிற்சி மையம் திருப்பூரில் இல்லை.
இந்நிலையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் (சிட்ரா) இணைந்து திருப்பூரிலேயே சாயமிடும் தொழில்நுட்பம் குறித்த தொழிற்பயிற்சி மையம் அமைக்க திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சிட்ராவின் தர பரிசோதனை கூடமும் சங்க வளாகத்தில் இயங்கி வருகிறது.
- வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
- ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில்:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடக்கு மாங்குடி பகுதி விவசாயி களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்பட பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் அட்மா திட்ட உதவி மேலாளர் மங்களேஸ்வரி நன்றி கூறினார்.
- கே.ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது
- இயற்கை இடர்பாடுகளின் போது செயல்பட வேண்டியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், இயற்கை இடர்பாடுகளின் போது செயல்பட வேண்டியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
- சோலார் மின்வேலி குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன
- வனப்பணியாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட்
குனியமுத்தூர்,
கோவை வனக்கோட்டம் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சரக அலுவலர் சந்தியா தலைமையில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கரடிமடை, மங்கலப்பாளையம், பச்சனாம்பதி, வாசவி பார்ம் பகுதி, தீத்திபாளையம், கரடிபாளையம், மத்திப்பாளையம், மோலப்பாளையம், காளியமங்கலம், பெரு மாள்கோவில்பதி, நாதேகவுண்டம்புதூர், நல்லூர்வயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சோலார் மின் வேலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குரோவ்ன் சோலார் பவர் பென்சிங் நிர்வாக இயக்குனர் ஜெயந்த் விவசாயிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் மதுக்கரை வனச்சரக பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆலந்துறை கிழக்கு மின் பணியாளர்கள், ஆலந்துறை பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் வன அதிகாரிகள் பதிலளித்தனர்.
தொடர்ந்து வனச்சரக அலுவலர் சந்தியா விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு பயன்படும் டார்ச் லைட்டுகளை வழங்கினார். வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மழை-குளிரை தாங்கும் மழை கோட் வழங்கப்பட்டது.
- 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
- 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.
இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.
முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.