என் மலர்

  நீங்கள் தேடியது "Child Care"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
  • கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.

  அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும் போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.

  விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள்.

  ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும் போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

  கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.

  அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.

  அடித்தல், இழுத்தல், பட்டப் பெயர் வைத்து அழைப்பது, அச்சுறுதல், மிரட்டிப் பணம் கறத்தல் அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.

  குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.

  இன்றைய காலத்தில் குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.

  'பள்ளிப் பிள்ளைகள் தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள் தானே' என அலட்சியப்படுத்தக் கூடாது.

  ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தைகள் முன் பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது.
  • ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம்.

  குழந்தைகளோடு கூடிக்களிப்பது தான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பது போய், குழந்தைகளை விட்டு ஒரு மணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

  இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.

  அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் பார்த்து பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம் வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.

  இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகளால் இன்னும் பெரிய பிரச்சனைகள்.

  குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார் செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

  குழந்தைகள் முன் பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள்.
  • உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.

  ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் மனோபாவம் நமக்குள் வளர்வதை 'தாழ்வு மனப்பான்மை' என்கிறோம். ஒரு குழந்தை வளரும்போது, தன்னை சுற்றியுள்ளவர்களைப் போல தானும் ஆக வேண்டும் என்று விரும்பும். அந்த இடத்தில் இருந்தே தாழ்வு மனப்பான்மை ஆரம்பிக்கிறது. அது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

  உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் 'தாழ்வு மனப்பான்மை' ஏற்படும். இது அதிகமாகும்போது, 'வெற்றி அடைவோம்' என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று, மனதளவில் விரக்தி அடையச்செய்யும். இதன் மூலம், தொடர்ந்து தோல்வியும், முயற்சி செய்ய விரும்பாத மன நிலையும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மீதான பாசம் குறையும். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை ஓடும். இதில் இருந்து மீள்வதற்கு கீழ் உள்ளவற்றை செய்யலாம்.

  உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். ஒரே தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் அழகு, நிறம், படிப்பு, உடல் தோற்றம் போன்றவற்றில் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது, உங்கள் நிறைகளை பார்க்க முடியாமல் செய்துவிடும்.

  உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள். மற்றவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய இயல்பான தன்மையை நேசியுங்கள். எந்த விஷயத்திற்காக நீங்கள், உடன்பிறந்தவர்களுடன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறீர்கள் என்று நிதானமாக யோசித்து எழுதுங்கள்.

  அவர்களை விட, நீங்கள் எவற்றில் எல்லாம் உயர்வாக இருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். ஒவ்வொருவரும் நேர்மறை பண்புகள் மற்றும் குறைபாடுகளின் வெவ்வேறு கலவையாகும். இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, உங்களை யதார்த்தமாக யோசிக்க வைக்கும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

  கடந்த கால தவறுகளைப் பற்றி சிந்திப்பதற்கோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கோ இடம்கொடு்க்காமல், தற்போதைய தருணத்திற்கு உங்களை மீண்டும் கொண்டு வர தியானம் உதவும். இதனால் உங்கள் தாழ்வு மனப்பான்மை குறையும். உங்களுடைய தனித்திறமை எதுவெனக் கண்டுபிடியுங்கள். அவற்றை வளர்த்து வாழ்வில் முன்னேறும்போது, உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவிடுகின்றனர்.
  • சிறுவர்கள் புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான்.

  ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.

  உலகம் முழுவதும் இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன்களிலும், கார்ட்டூன்களைக் காண்பதிலும் செலவிடுகின்றனர். இது இரண்டும் இல்லாமல் ஒரு சிறுவரையோ அல்லது சிறுமியையோ காண்பது அரிது. அதேசமயம் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களே கூட புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான். நிலைமை இப்படி இருக்க, 9 வயதில் அதிக புத்தகங்களை வாசித்ததுடன், ஒரு நூலகத்தையும் அமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒரு சிறுவன்.

  கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அல்லினி எரிக் லால். இவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்லு என்று அழைப்பது வழக்கம். இந்தச் சிறுவன் தனது பெரும்பாலான நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதற்குச் செலவிட்டு வந்தார். கொரோனா ஊரடங்கு இவரது புத்தக வாசிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், தான் படித்த புத்தகங்கள் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் சேகரித்த புத்தகங்களைக்கொண்டு ஒரு நூலகத்தை அல்லு தொடங்கிவிட்டார்.

  கடந்த ஜூன் மாதம் இந்த நூலகத்தை சிறுவர்கள் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ரெனி அந்தோணி திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்த நூலகம் செயல்படும். 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனைதான். அல்லுவின் நூலகத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால் ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.

  இந்தச் சிறுவயதில் அல்லு சமூகத்திற்குச் சொல்லும் பாடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சிறுவர்கள் நாட்டில் அதிகரித்தால் அது இயற்கைக்கும், எதிர்கால இந்தியாவுக்கும் பெரும் பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.
  • பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.

  இதயப் பாதுகாப்பிற்குப் புகைபிடித்தலைத் தவிர்க்கச் சொல்வது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.

  பொதுவாகத் திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். பொதுவாகப் பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

  பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் ஆக்னே எனப்படும் பிளாக் ஹெட்ஸ் போன்றவற்றை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ரெடினாய்க் அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். இக்கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன.

  திருமணத்திற்கு முன்னர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

  இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இக்கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களைத் தவிர்த்தல் சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

  இக்காலத்தில் ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளைத் தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும், விந்துவைப் பாதிப்பதில்லை.

  குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். முன்னர்ச் சொன்னது போல் கரு உருவாகும் காலத்தில் முதல் இரு மாதங்களில் ரெடினாய்க் அமிலம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தி இருந்தால், இதயப் பாதிப்பு அதிகமாகும். தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.

  கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர்க் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.

  பொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மருந்து, மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இக்காய்ச்சல் டார்ச்- TORCH என்ற வைரஸ், கூட்டமாகத் தாயைத் தாக்குவதால் ஏற்படலாம். இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல், கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை 'ருபெல்லா சிண்ட்ரோம்' என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரியமுள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும்.

  கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தைகளை பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது.

  ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியை பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். இன்றைக்கு எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாக பிரித்து நடத்துகிறார்கள்.

  விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாக காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்து விடுகிறது. பெரியவர்கள் பாராட்டும்போது தங்களை திறமைசாலி, அறிவாளி என்று மன மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு, எதிலாவது தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து விடுகின்றனர்.

  சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.

  ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ, கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமை காட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும், பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்து கொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையை போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்து விடும்.

  குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.

  தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்து திருத்தும் நாம், பாராட்டும்போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாக செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோருக்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
  • குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.

  நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.

  கோமண்டர் (Komondor)

  இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

  மால்தீஸ் (Maltese)

  மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.

  பூடில் (Poodle)

  இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் சிறிய பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.

  ஆப்கன் ஹவுண்ட் (Afghan Hound)

  இந்த நாய்கள் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங்களைக் கொண்டவை. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.

  இவை அனைத்தும் பார்ப்பதற்கு மட்டுமல்ல, பழகுவதற்கும் பாசமான நாய் இனங்கள். குழந்தைகளை ஒருபோதும் அச்சுறுத்தாத நாய் இனங்கள் இவை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.
  • ஆன்லைன் விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.

  தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போராடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்வள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவத அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் மனலந பிச்சனைகளை ஏற்படுத்துவதோடு பல குற்றங்களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது.

  ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம் பள்ளி பாடங்களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளைகளை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.

  ஆன்லைன் கேம்கள் எனப்பொதுவாக கூறினாலும், குறிப்பிட்ட விபரீதான விளையாட்டுகளையே மாணவர்கள் அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.

  பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச்சிதறல், மனஅழுத்தம், படபடப்பு போன்ற மனநோய்களுக்கும், கோபம், பதற்றம்போன்ற நடத்தை சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.

  ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்து கொள்கிறார்கள். இதனால் கண்கள் பாதிக்கப்படும் சரியான கோணத்தில் அமராதபோது பகுத்துவலி முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல் தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

  தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும்.இதனால் அவர்கள் கோபப்பட்டாலும் சோர்வாக நடந்து கொளடாலும சலுகை அளிக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மாற்று வழிகளை காண்பிக்க வேண்டும். திரும்பவும்விடையாடத்தோன்றும் போதெல்லாம் இது தவறு என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தையுடன் உரையாடலில் ஈடுபடும் போது சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
  • குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும்.

  மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

  * அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

  * அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

  * அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  * குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

  * ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

  * நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

  * இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளை கவரும் விதத்தில் இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

  புத்தகங்களை கைகளில் புரட்டி படிக்க வேண்டிய வயதில் ஸ்மார்ட்போன்களில் அத்தனையையும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால் புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக ஒடிசாவில் படகு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

  அங்குள்ள பிதர்கனிகா தேசிய வன பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில்1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளை புத்தகங்களை படிக்க வைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த படகு நூலகம் நிர்வகிக்கப்படுகிறது. இதுகுறித்து பிதர்கனிகா கோட்ட வன அலுவலர் ஜே.டி. பதி கூறுகையில், ''குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இயற்கையுடன் ஒன்றிணைப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நூலகத்தின் நோக்கமாகும்" என்கிறார்.

  சிதிலமடைந்த நிலையில் இருந்த படகை புதுப்பித்து, குழந்தைகளை கவரும் விதத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள். படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சூழ்ந்து 30-க்கும் மேற்பட்ட அலமாரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் புத்தகங்களை குழந்தைகள் எளிதாக எடுத்து படிக்கும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

  இந்த படகு நூலகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தருகிறார்கள். நாட்டுப்புறக் கதைகள், சுயசரிதைகள், சிறுகதைகள், கலைக்களஞ்சியங்கள், அட்லஸ், அறிவியல் புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு, சூழலியல், சதுப்புநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் பிரசுரங்களும் இந்த படகு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும்.
  • மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள்.

  பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியுடன் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நடைமுறை கல்வியும் பல பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. சேமிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நேரடி வங்கி அனுபவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது, கர்நாடகாவில் இயங்கும் ஒரு அரசு பள்ளி. மாணவர்களே நடத்தும் அந்த வங்கியில் பணம் சேமித்தல், முதலீடு செய்தல், டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

  பெங்களூரு அடுத்த முள்ளூரில் இயங்கும் அரசு பள்ளியில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 39 வயதாகும் பள்ளி ஆசிரியர் சி.எஸ். சதீஷ் இந்த வங்கியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சதீஷ், வங்கியல் பணி பற்றிய அத்தியாவசிய நடைமுறைகளையும், பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்பினார். அதனை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு வங்கியை நிர்வகிப்பதுதான் சரியான நடைமுறை என்று முடிவு செய்தவர் பள்ளியிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.

  ஸ்கூல் பேங்க் ஆப் முள்ளூர் (எஸ்.பி.எம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வங்கியில் மாணவர்கள் சேமித்தல், காசோலை நிரப்புதல், பணத்தை வரவு வைத்தல், பணத்தை திரும்பப் பெறுதல், வட்டி பெறுதல் போன்ற செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 37 மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.''

  குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த வங்கிப்பணிகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பணத்தை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்கிறார், ஆசிரியர் சதீஷ்.

  மாணவர்கள் தாங்கள் எவ்வளவு பணம் சேமிக்கிறோம், தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை திரும்ப எடுத்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பாஸ்புத்தகமும் வழங்கப்படுகிறது. பணம் எடுக்க விரும்பினால் வங்கியில் நடைமுறையில் இருப்பதுபோல் செல்லானை நிரப்பி கொடுத்து பணத்தை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் இந்த வங்கிக்கு, வங்கிகளில் இருப்பது போலவே மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் லாக்கர் வசதியும் உள்ளது.

  "பள்ளிக்கூடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய பாஸ் புத்தகத்துடன் வருகிறார்கள். நாங்கள் ஒரு சீட்டை நிரப்ப கொடுப்போம். அதில் பணத்தை நிரப்பி கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் பணம் காசாளர் வித்யாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதை டெபாசிட் செய்வார்"என்கிறார், பள்ளி வங்கியின் மேலாளராக இருக்கும் தன்வி.

  மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் 100 ரூபாய் சேமித்தால் அவருக்கு பென்சில் பரிசாக வழங்கப்படும். 200 ரூபாய் சேமித்திருந்தால், போனஸாக பேனா கிடைக்கும். 300 ரூபாய் சேமித்தால் ஒரு நோட்புக்கை பெறுவார்கள். 500 ரூபாய் சேமித்ததும் 5 சதவீத வட்டி வழங்கப்படும். அவர்களின் சேமிப்பு தொகை ஆயிரம் ரூபாயை கடந்தால் அவர்களின் உண்மையான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

  ''இதுநாள் வரை பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தை நொறுக்குத் தீனிகளுக்கு செலவிட்டார்கள். இப்போது வங்கி அனுபவத்தை வழங்குவதோடு, சேமிப்பு மனப்பான்மையையும் எங்கள் பள்ளி வங்கி ஊக்குவித்து வருகிறது" என்கிறார் சதீஷ். மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை சுற்றுலா, பள்ளி ஆண்டு விழா, எழுது பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவிடுகிறார்கள்.

  மாணவி ஸ்ரீஷ்மா கூறுகையில், ''நான் 45 ரூபாயைச் சேமித்துள்ளேன். இன்னும் கூடுதலாக சேமித்து பள்ளியின் வருடாந்திர சுற்றுலா பயணத்திற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார். தன்வியின் தாயார் குலாபி கூறுகையில், ''குழந்தைகள்இடையே பெரிய வித்தியாசத்தை பார்க்கிறேன். வீட்டில் கொடுத்தனுப்பிய பணத்தை முன்பு சாக்லேட்கள், குளிர்பானங்கள் மற்றும் பிற நொறுக்கு தீனிகளுக்கு செல வழித்தனர். இப்போது வங்கியில் டெபாசிட் செய்ய பணம் கேட்கிறார்கள். பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பள்ளி சுற்றுலா பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளுக்கு இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo