என் மலர்
நீங்கள் தேடியது "practice"
- வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஒன்றியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் சார்பில், வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வித்தியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைந்த அளவில் பிறந்த குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.
- நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
- சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
சிவகாசி
சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. அரசன் மாடல் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பள்ளி தாளாளர் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அறிவரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் தினேஷ்குமார், ரவி, சுப்பிரமணியன், சிவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் அரசன் மாடல் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிவகாசி மற்றும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
- இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி நடைபெற்றது.
- ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடிகிறது.
மதுக்கூர்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் வேலாயுதின் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசரின் வழிகாட்டுதல்படி நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் 46 சத தழைச்சத்து கொண்ட யூரியா செய்யும் பணியை 4, சத தழைசத்துக் கொண்ட நானோயூரியா செய்கிறது.
விவசாயிகள் பொதுவாக பரிந்துரைப்படி ஏக்கருக்கு இட வேண்டியது 22 கிலோ என்ற போதிலும் நிலவும் பருவ சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா வரை செலவு செய்கின்றனர்.
தெளிப்பதற்கான செலவினம் தனியாக ரூ.300 ஆகிறது. ஆனால் நானோ யூரியா பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானது இதன் விலை ரூ.230, நானோ யூரியா, யூரியா போல வீணாக கரைவதும் இல்லை. ஆவி ஆவதும் இல்லை. நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை. நானோ யூரியா நேரடியாக பயிரினால் எவ்வித சேதம் இன்றி இலை வழி உரமாக நேரடியாக பயிரினா லா எடுத்து கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் நெம்மேலி கிராமத்தில் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்டனர்.
ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடித்து விடுகிறது. ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரியின் ஒத்துழைப்புடன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடனும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர்அன்புமணி கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து நானோ யூரியா தெளித்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.
நெம்மேலி கிராம முன்னோடி விவசாயிகள் பெரமையன், சேதுராமன், இருளப்பன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு இது போன்ற திட்டங்கள் தங்களுக்கு மிக உதவியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி தொழில்நுட்ப உதவியாளர் அருள் தாஸ் நன்றி கூறினார்.
- பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
- திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திட வேளாண்மைத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கை 2022-23 அறிவிப்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இரக மேம்பாடு, பகுதிக்கேற்ற சிறந்த இரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 3 முறை கண்காட்சி நடத்தப்படும்.
அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் இரகங்களை காட்சிப்படுத்தலாம். விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
வேளாண், தோட்ட க்கலை விவசாயிகள் தங்களது ரகங்களை காட்சிப்படுத்துவதற்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும், ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைந்த சிறந்த மருத்துவ பண்புகளை கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர் இரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்கிட வேண்டும்.
கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது.
- சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெற செய்த மாஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்பார்க் அகாடெமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டி களில் இம்மாணவர்கள் 13 தங்க பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 17 வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடமும் தமிழ்நாடு மாணவர்கள் (நாகப்பட்டினம்) 2வது இடமும் கர்நாடகா மாநிலம் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளனர்.
குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்த மாஸ்டர் பாண்டியனுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
- முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.
திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தபடும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஏழுமலை எடுத்துரைத்தார்.
காம்கோ கம்பெனி டீலர் சங்கரநாராயணன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கூறினார்.
முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.
- 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தாலுகா உளூர் மேற்கு கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
உளூர் மேற்கு கிராமத்தில் நீண்ட நாட்களாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு, அவர்களின் கோரிக்கையை ஏற்று 16 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நத்தம் வகைப்பாடுடைய நிலத்தில் 0.16.0 ஏர்ஸ் விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஓரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சியில் நரிக்குறவர் காலனி குடியிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 37 தொடக்கநிலை குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் மேல்நிலைப்பள்ளி மேல உளூரில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், சீருடை போன்றவை வழங்கப்பட்டு இக்குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த ஒரு இடையூறின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் '' ஊருக்கு ஒரு வனம்" திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஓரத்தநாடு தாசில்தார் சுரேஷ், ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவர் பார்வதி சிவசங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
- திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் செயலாளா்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடா்பான பயிற்சி குமரன் மகளிா் கல்லூரியில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஜான்பெனடிக்ட் அசோக், பட்டயக்கணக்காளா் விஷ்ணுகுமாா், தாராபுரம் சரக துணைப்பதிவாளா் மணி ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) தொடா்பாகவும், டிடிஎஸ் ரிட்டா்ன் பெறுவது தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கினா்.
இதில் திருப்பூா், அவிநாசி, பல்லடம், பொங்கலூா், குண்டடம், மூலனூா், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 கூட்டுறவு சங்கங்களின் செயலாளா்கள் பங்கேற்றனா்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
- பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்பொது பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித்தகுதியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20,000- த்தை தாட்கோ வழங்கும்.
இப்பயிற்சியினை வெற்றி கரமாக முடிக்கும் பட்சத்தில் AASSC ஏ.ஏ.எஸ்.எஸ்.சி -யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் புகழ் வாய்ந்த தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உடையார்பாளையம் ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது
- ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் உள்ள வேலப்ப செட்டி ஏரியில் தேசிய பேரிடர் மீட்புகுழு மற்றும் இயற்கை பேரிடர் கான கூட்டு மாதிரி செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். இதில் தேசிய பேரிடர் மீட்பு குழு டீம் கமாண்டர் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டினார்.இந்த பயிற்சி முகாமில் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித், துணைத் தலைவர் அக்பர் அலி கலந்து கொண்டனர்.
மேலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பேரூராட்சி நிர்வாக துறை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தேசிய மீட்பு குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் ஏரி, குளம், ஆறு உள்ளிட்டவற்றில் தவறி விழுந்த நபர்களை எப்படி மீட்பது, ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.மேலும் தவறி விழுந்தவர்களை எப்படி உயிர் காப்பது, அவர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பயிற்சியில் ஏராளமான தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நன்றி கூறினார்.
- பிப்ரவரி 6 -ந் தேதி முதல் 11ஆம் தேதி வரை தினசரி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
- ஏற்பாடுகளை சர்பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.நட்ராஜ் செய்திருந்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் நல வாரிய உறுப்பினர்களுக்கு இந்திய அரசு சிறு குறு தொழில் சம்பந்தமாக துறைவாரியாக இந்த மாதம் பிப்ரவரி 6 -ந் தேதி முதல் 11ஆம் தேதி வரை தினசரி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.நட்ராஜ் செய்திருந்தார்.
- 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆப்த மித்ரா - பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளார்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியின் முதற்கட்டமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது 300 தன்னார்வலர்களுக்கு 9 கட்டங்களாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மூலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
இயற்கை பேரிடர்களின் போது அவசர சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு உதவி வழங்கிடவும், தன்னார்வ கலாச்சாரத்தை ஊக்குவித்திடவும் கடினமான சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு சேவை செய்திடும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பணிகள் மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் அடையும் வரை உடனடி பதில் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் அனைவரும் மனித நேயத்துடன் மற்றும் மதிப்புடனும் நடந்து கொள்ளவேண்டும். தேசியம், இனம், பாலினம், கருத்துக்கள் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான பாகுபாடு இல்லாமல் கடமைகளை மேற்கொள்ளவேண்டும். தன்னார்வ தொண்டு புரிதலின் அவசியத்தை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 300 தன்னார்வலர்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் 12 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, சிறந்த பயிற்றுநர்களால் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயிற்சி பெற்றமைக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், ரெட் கிராஸ் சேர்மன் வரதராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






