என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையம் ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு செயல் விளக்க பயிற்சி
- உடையார்பாளையம் ஏரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது
- ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் உள்ள வேலப்ப செட்டி ஏரியில் தேசிய பேரிடர் மீட்புகுழு மற்றும் இயற்கை பேரிடர் கான கூட்டு மாதிரி செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். இதில் தேசிய பேரிடர் மீட்பு குழு டீம் கமாண்டர் சவுகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டினார்.இந்த பயிற்சி முகாமில் உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித், துணைத் தலைவர் அக்பர் அலி கலந்து கொண்டனர்.
மேலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பேரூராட்சி நிர்வாக துறை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தேசிய மீட்பு குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் ஏரி, குளம், ஆறு உள்ளிட்டவற்றில் தவறி விழுந்த நபர்களை எப்படி மீட்பது, ஆடு, மாடு உள்ளிட்டவை விழுந்தால் எப்படி மீட்பது பற்றிய ஒத்திகை நடைபெற்றது.மேலும் தவறி விழுந்தவர்களை எப்படி உயிர் காப்பது, அவர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பயிற்சியில் ஏராளமான தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நன்றி கூறினார்.






