search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர்கால மீட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்- கலெக்டர் வழங்கினார்
    X

    பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    பேரிடர்கால மீட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்- கலெக்டர் வழங்கினார்

    • 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
    • சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆப்த மித்ரா - பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளார்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியின் முதற்கட்டமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது 300 தன்னார்வலர்களுக்கு 9 கட்டங்களாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மூலம் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நன்முறையில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    இயற்கை பேரிடர்களின் போது அவசர சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு உதவி வழங்கிடவும், தன்னார்வ கலாச்சாரத்தை ஊக்குவித்திடவும் கடினமான சூழ்நிலைகளில் சமுதாயத்திற்கு சேவை செய்திடும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பணிகள் மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இப்பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் அடையும் வரை உடனடி பதில் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 6500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 300 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் அனைவரும் மனித நேயத்துடன் மற்றும் மதிப்புடனும் நடந்து கொள்ளவேண்டும். தேசியம், இனம், பாலினம், கருத்துக்கள் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான பாகுபாடு இல்லாமல் கடமைகளை மேற்கொள்ளவேண்டும். தன்னார்வ தொண்டு புரிதலின் அவசியத்தை புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 300 தன்னார்வலர்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பில் 12 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, சிறந்த பயிற்றுநர்களால் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    அவர்கள் பயிற்சி பெற்றமைக்கு அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், ரெட் கிராஸ் சேர்மன் வரதராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×