என் மலர்
நீங்கள் தேடியது "தோல் பராமரிப்பு"
- குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
- க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!
குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்
சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும்.
குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
அடிக்கடி குளிக்கவைத்தல்
சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.
மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்
குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும்.

வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது
தோல் நோய்களை புறக்கணித்தல்
பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.
வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்
வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்
குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.
- முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
- தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!
தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
சருமத்திற்கு ஈரப்பதம்...
வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.
சரும பிரகாசம்...
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன
புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நெகிழ்ச்சித்தன்மை
சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.
முகச்சுருக்கங்களை தடுக்கும்
சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.
முகப்பரு
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.
பிற தோல்நோய்கள்
புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.
- கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
- தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம்.
உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும்.
சரும பொலிவு
தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது.
சரும பாதுகாப்பு
சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும்.

உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்
பாடி லோஷன்
உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
முடி பராமரிப்பு
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
தோல் நோய்
கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது.
- அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
- இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.
அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.
இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.
கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.
செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.
இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.
அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.
- சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன.
- ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
ரெட் ஒயின் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாகும், சில ஆய்வுகள் மிதமாக உட்கொள்ளும் போது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
மருத்துவர்கள் கூறுகையில், "சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும். இருப்பினும், சிவப்பு ஒயின் தோலை சேதப்படுத்துகிறது, ஏனெனில் அது ரோசாசியாவை (தோல் நிலை), நீரிழப்பு மற்றும் ஹிஸ்டமினிக் எதிர்வினைகளை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உணர்திறன் சாத்தியத்தை அதிகரிக்கும்.
ஒயினில் உள்ள பாலிபினால்கள் திராட்சை மற்றும் பிற பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படலாம் என்றும் அது ஒயின் மூலம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
"ஆல்கஹால் ஆக்சிஜனேற்ற சேதத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் வயதாகிவிடுவதால், உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சிவப்பு ஒயினை தவிர்க்க வேண்டும். சிவப்பு ஒயினில் ஆக்சிஜனேற்றங்கள் இருந்தாலும், பொதுவாக, ஆல்கஹால் தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.
நீரேற்றம், சரியான தோல் பராமரிப்பு மற்றும் உகந்த தோல் நல்வாழ்வுக்கான அடித்தளமாக சத்தான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த சரும நன்மைகளுக்கு மதுவை நம்புவதற்குப் பதிலாக, சருமத்தைப் பராமரிப்பதில் எளிமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளைத் தழுவுவது நல்லது.
அதிகப்படியான மது அருந்துதல் தோல் நீரிழப்புக்கு வழிவகுக்கும், முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும். ஒரு சமநிலையான அணுகுமுறை, பல்வேறு ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உள்ளடக்கியது, உகந்த தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
மிதமான சிவப்பு ஒயின் நுகர்வு தோல் தொடர்பான சில நன்மைகளை அளிக்கும் போது, தனிநபர்கள் சீரான உணவு, நீரேற்றம், சூரிய பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒயின் குடிப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று பெரும்பாலான தோல் மருத்துவர்கள் கருதினாலும், தனிப்பட்ட உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெற தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் சிறந்தது.
- சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.
தோல் பராமரிப்புக்கு வரும்போது, இயற்கை மற்றும் பாரம்பரிய வைத்தியம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. குங்குமடி தைலம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட அத்தகைய ஒரு தீர்வு. அதன் சக்தி வாய்ந்த மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற குங்குமடி தைலம் ஒரு பிரபலமான ஆயுர்வேத எண்ணெய் கலவையாகும், இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில், குங்குமடி தைலம் என்றால் என்ன, அதன் பொருட்கள் மற்றும் பண்புகள், அது வழங்கும் நன்மைகள், அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வோம். தோல் பராமரிப்பு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான குங்குமடி தைலம் பலன்களைப் பற்றி ஆராய்வோம்.
குங்குமடி தைலம் என்றால் என்ன?
குங்குமடி தைலம், குங்குமடி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, இது பல்வேறு தாவரவியல் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகை எண்ணெய் கலவையாகும். இது பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்தும் திறனுக்காகப் புகழ்பெற்றது. முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து கதிரியக்க நிறத்தை ஊக்குவித்தல் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைப்பது வரை குங்குமடி தைலத்தின் பயன்பாடுகள் வேறுபட்டவை. இந்த ஆயுர்வேத எண்ணெய் வளமான வரலாற்றைக் கொண்ட பல்துறை தோல் பராமரிப்பு தீர்வாகும்.

பொருட்கள் மற்றும் பண்புகள்
குங்குமப்பூ, சந்தனம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் போன்ற சக்திவாய்ந்த பொருட்களின் கலவையை குங்குமடி தைலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் தனித்துவமான பண்புகளை வழங்குகிறது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகள், குங்குமடி தைலத்தை ஒரு சக்திவாய்ந்த தோல் பராமரிப்பு தீர்வாக மாற்றுகிறது . "குங்குமடி தைலத்தை ஒரே இரவில் பயன்படுத்தலாமா?" என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரே இரவில் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து புத்துயிர் பெறச் செய்து, காலையில் பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்குகிறது.
குங்குமடி தைலத்தின் பலன்கள்
குங்குமடி தைலம் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த உதவும் பல நன்மைகளை வழங்குகிறது. எண்ணெய் நிறமி மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இதனால் சருமம் கதிரியக்கமாகவும், சீரான நிறமாகவும் இருக்கும். கூடுதலாக, இது சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.

குங்குமடி தைலத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும் திறன் ஆகும். குங்குமப்பூ மற்றும் குங்குமப்பூ தைலத்தில் உள்ள மற்ற சருமத்தை பிரகாசமாக்கும் பொருட்களின் கலவையானது கரும்புள்ளிகள், நிறமி மற்றும் சீரற்ற தோல் நிறத்தின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக மிகவும் ஒளிரும் மற்றும் இளமை நிறம் கிடைக்கும்.
வயதான எதிர்ப்பு மற்றும் சுருக்கம் குறைப்பு
குங்குமடி தைலம் முதுமையைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த கலவையானது சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது. குங்குமடி தைலத்தின் வழக்கமான பயன்பாடு, உறுதியையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது, மேலும் சருமத்திற்கு இளமை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.
முகப்பரு மற்றும் தழும்பு கட்டுப்பாடு
குங்குமடி தைலம் முகப்பருவைக் கட்டுப்படுத்துவதிலும், தழும்புகளைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாடு பிரேக்அவுட்களைக் குறைக்கவும், தெளிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவும். குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.






