என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயிர்"

    • தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள்.
    • தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந்தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

    அதைத் தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. டோட்லா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பால் விலையை உயர்த்தி வருகின்றன.

    கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 78 ரூபாய் ஆகவும், டீ ஸ்பெஷல் பால் 68-ல் இருந்து 70 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் 66 ரூபாயில் இருந்து 68 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் 60 ரூபாயில் இருந்து 62 ஆகவும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ஆகவும் உயர்ந்துள்ளது.

    இதே போல தயிர் ஒரு கிலோ ரூ. 74-ல் இருந்து 76 ஆகவும் 450 கிராம் தயிர் ரூ. 38-ல் இருந்து ரூ.40 ஆகவும் இரு முறை சமன்படுத்தப்பட்ட தயிர் ஒரு கிலோ ரூ. 70-ல் இருந்து 72 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள். தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது. அரை லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆவின் பால் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் ஆவின் பாலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் வந்தவுடன் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. இதன் காரணமாக பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தனியார் பால் நிறுவனங்கள் பால் விவசாயி ளிடம் இருந்து அதிக விலை கொடுத்து பாலை வாங்குவதால் விலையை உயர்த்தி உள்ளனர் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும் போது, பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

    • எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம்.
    • தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    பெண்கள், முகத்துக்கும், கூந்தலுக்கும் தயிரைப் பயன்படுத்தி நன்மை பெறலாம். தயிர் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, மிக அழகு மற்றும் கூந்தல் நலத்துக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில், தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அதனால், சருமத்துக்கும், கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

    ஆகவே, தயிரை கூந்தல் மற்றும் முகத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம் ...

    முகத்துக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

    ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    தேன், வைட்டமின் பி6, போலேட் ஆகியவை நிறைந்தது. இவை அழகை இரட்டிப்பாக்குகின்றன. சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க தேன் உதவுகிறது. தேனைப் பயன்படுத்துவது சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    தயிரையும் தேனையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம், முகம் இழந்த பளபளப்பை மீண்டும் பெறும். இதற்காக, தயிரில் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்தால், அது பளபளப்பாக மாறும்.

    தயிர் ஸ்கிரப்:

    தயிர் ஸ்கிரப், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஸ்கிரப் தயாரிக்க தயிரில் அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

     

    சருமத்துக்கு தயிரின் நன்மைகள்:

    எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் முகத்துக்கு தயிரை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், முகச் சருமப் பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர், சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    தலைமுடிக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

    தலைக்கு குளிக்கும்போது ஷாம்பு போடுவதற்கு முன் தயிர் தடவ வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரதம் கிடைக்கும். குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர் தலைமுடியை மென்மையாக மாற்ற உதவுகிறது.

    தலைமுடிக்கு தயிர் பயன்படுத்துவதன் நன்மைகள்:

    தலைமுடிக்கு விலை உயர்ந்த ஷாம்புகளை உபயோகிப்பதற்குப் பதிலாக தயிரை பயன்படுத்துவது நல்லது. இது தலைமுடியை மென்மையாக மாற்றும். உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவும்.

    தயிரின் மிகப்பெரிய நன்மை, அது ஓர் இயற்கையான ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். மேலும் முடிக்கு ஊட்டமளித்து வலுப்படுத்தும்.

    • தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
    • வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * தயிர் கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

    * தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக் (நல்ல குடல் பாக்டீரியாக்கள்) ஏராளமாக உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டது.

    * தயிர் கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர்ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

    * இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

    * வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    * உடல் பருமன் குறையும்.

    * குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

    * அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

    • அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
    • பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தில் வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த கிராம மக்கள் 200 பேருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வின்போது, வந்திருந்தவர்களுக்கு உணவுடன் ரய்தா எனப்படும் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.

    அந்த பச்சடியை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது. அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.

    துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் 26 அன்று, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. அது ரேபிஸ் நோய் அறிகுறிகளுடன் இறந்ததைக் கண்ட கிராம மக்கள், அதன் பாலைக் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர்.

    தகவலறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், "பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுவரை யாருக்கும் பாதிப்பு அறிகுறி தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். 

    • பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
    • தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.

    தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?

    பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.

    எப்படி சாப்பிடலாம்?

    தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.

    இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    யார் சாப்பிடக்கூடாது?

    இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.

    குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?

    குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.

    சருமத்துக்கும் நன்மை பயக்குமா?

    குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

    • முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
    • தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!

    தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். 

    சருமத்திற்கு ஈரப்பதம்...

    வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.

    சரும பிரகாசம்...

    தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. 


    தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன

    புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு

    சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நெகிழ்ச்சித்தன்மை

    சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.

    முகச்சுருக்கங்களை தடுக்கும்

    சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.

    முகப்பரு

    தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.

    பிற தோல்நோய்கள்

    புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.

    • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

    மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    நல்லெண்ணை:-

    இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

    மஞ்சள் தூள்:-

    மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

    அரிசி மாவு:-

    நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

    பஞ்சாமிர்தம்:-

    இது உடல் நலம் தருகிறது.

    தயிர்:-

    மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

    பழ வகைகள்

    முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

    இளநீர்:-

    மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    விபூதியும் சந்தனமும்:-

    மக்களுக்கு அருள் தருகிறது.

    கலசாபிஷேகம்:-

    அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

    மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    திருவிழாக்கள்

    மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

    தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்.
    • தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தடுக்கும், தேன் முகம் மிருதுவாக இருப்பதற்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிப்பதற்கும் வழங்குகிறது.

    சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதுமானது.

    தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும். அதேசமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறட்சி தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராகவும் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற இந்த பேக் உதவி செய்யும்.

    • இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
    • குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

    * உடலை பலப்படுத்த விரும்புவோர் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

    * உறை ஊற்றிய பின் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது. இந்த தயிர் வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியை குறைக்கும்.

    * நன்கு புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

    * இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, ரத்தக் கொதிப்பு, காமாலை, தோல் நோய் ஏற்படும்.

    * மண்சட்டியில் உள்ள தயிர் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. புதிதாக வாங்கிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பிறகே தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.

    * தயிரை உப்பு மிளகிட்டு சாப்பிடலாம். சர்க்கரை, தேன், எசன்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றை கலந்தும் சாப்பிடலாம்.

    * தயிரை உபயோகித்து தலை முடியை சீர்செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

    * கடலைமாவுடன் தயிரை குழைத்து பூசிவர பருக்கள் மறையும். முகம் பொலிவடையும்.

    • உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான்.
    • செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும்.

    நாம் தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ. ஈ. சி. பி2, பி12 மற்றும் கரேடினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது. மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமாள அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை உடலின் ஆற்றலை அதிகரித்து தான் முழுவதும் உடலை நிரேற்றத்துடன் வைத்திருக்க உதவும், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

    தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல். வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

    காலையில் எழுந்தவுடன். உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் இது சிறு நீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

    உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது. சளி. ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும்.
    • தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

    தயிர் போலவே கெட்டியாக இருக்கும் யோகர்ட் சுவைத்திருக்கிறீர்களா...? அது மிகவும் சுவையானது, சத்தானது. அதுபற்றி தெரிந்து கொள்வோமா..!

    யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது புரதங்கள் மற்றும் கால்சியத்தின் அற்புதமான மூலமாகும். இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.

    சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது.

     யோகர்ட்டில் கால்சியம், புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-டி உள்ளிட்ட எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க இன்றியமையாத பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

    யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினைகளுக்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. யோகர்ட்டில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

    நமது உடலை பெருங்குடல், சிறுநீரக மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மையை யோகர்ட் கொண்டுள்ளது. யோகர்ட் கால்சியத்தின் வளமான மூலமாகும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். யோகர்ட் உட்கொள்வது, எலும்பு முறிவு மற்றும் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தை குறைக்கும்.

    யோகர்ட்டில் உள்ள அதிகப் புரதச்சத்து நம்மை நிறைவாக உணரவைத்து பசியை குறைக்கிறது. இதனால் நமது கலோரி நுகர்வு குறைகிறது. இது எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது.

     தயிருக்கும் யோகர்ட்டுக்குமுள்ள வித்தியாசம்

    பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாக தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில் தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது இலங்கை, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

    • செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா...
    • மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும்.

    இரவு நேரம் வந்தவுடன் என்ன உணவு சமைப்பது என்று வீட்டு பெண்களுக்கு ஒரு வித குழப்பம் ஏற்படும். செய்த உணவையே செய்து செய்து வெறுப்பா இருக்கா... அப்போ இதை டிரை பண்ணுங்க... மிகவும் சுவையாகவும் வித்தியாகமாகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 100 மிலி

    சின்ன வெங்காயம் - 6

    பூண்டு - 5 பல்

    முந்திரி - 4

    தக்காளி - 2

    பெரிய வெங்காயம் - 2

    சிவப்பு, பச்சை குடமிளகாய் - 2

    பட்டை, கிராம்பு, கடல் பாசி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - தேவையான அளவு

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் டிக்கா செய்வதற்கு வெட்டுவது போல் சதுர வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, முந்திரி, தக்காளி ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் 100 மிலி தயிர் சேர்ந்து அரைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை 10 நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


    ஒரு வாணலில் பட்டை, கிராம்பு, கடல் பாசி சேர்ந்து நன்கு வதக்கவும், அதனுடன் பொடியாக வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை போட்டு அதனை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் தயிர் சேர்ந்து அரைத்து வைத்திருந்த விழுதை இதனுடன் சேர்த்து நன்று வதக்கவும். அதனுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்ந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வதக்கி வைத்திருக்கும் குடமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக அடுப்பை அணைத்து கொத்தமல்லி சேர்க்கவும். இதோ சுவையான சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு ஏற்ற குடமிளகாய் தயிர் கிரேவி ரெடி. 

    ×