search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oats"

    • சாக்லேட் பார் மற்றும் ஓட்ஸ் வகை உணவு பொருட்களை குவேகர் விற்பனை செய்கிறது
    • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆய்வில் புகார் உறுதியாகவில்லை

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம், பெப்சிகோ (PepsiCo).

    பல உலக நாடுகளில், பல வகையான குளிர்பானங்கள் மற்றும் உடனடியாக உண்ண கூடிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம், பெப்சிகோ.

    பெப்சிகோவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், குவேகர் ஓட்ஸ் கம்பெனி (Quaker Oats Company).

    தானியங்களில் சக்தி நிறைந்த ஒன்றாக கருதப்படும் ஓட்ஸ் தானியத்தை விற்பதில் குவேகர் முன்னணி வகிக்கிறது.

    குவேகர், சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.

    சுமார் 24 பேருக்கு இவற்றை உண்டதால் உடல்நல குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (FDA) புகார்கள் வந்தன. சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா தொற்று குவேகர் தயாரிப்புகளில் இருப்பதாக புகார் எழுந்தது.

    இவ்வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றினால் காய்ச்சல், குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது.

    ஆனால், FDA அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதுவரை குவேகர் தயாரிப்புகளுக்கும் உடல்நிலை கோளாறுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதியாகவில்லை.

    இருந்தும், தாங்கள் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவேகர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.


    அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நிறுவனம் விற்பனை செய்த குவேகர் கிரானோலா பார், கேப்'ன் கிரன்ச் பார், கமேசா மரியாஸ் சீரியல், கேடோரேட் பீநட் பட்டர் சாக்லேட் புரோட்டீன் பார், மன்சீஸ் மன்ச் மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு தயாரிப்புகள் இவற்றில் அடங்கும்.

    மேலும், இவற்றை முன்னர் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்.
    • தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தடுக்கும், தேன் முகம் மிருதுவாக இருப்பதற்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிப்பதற்கும் வழங்குகிறது.

    சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதுமானது.

    தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும். அதேசமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறட்சி தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராகவும் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற இந்த பேக் உதவி செய்யும்.

    • ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவு உள்ளது.
    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருள்கள்

    ஓட்ஸ் - 3 கப்

    தயிர் - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    சோள மாவு - 2 ஸ்பூன்

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து, மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில், சிறிதளவு வெந்நீர் ஊற்றி, அதில் ஓட்ஸ் பொடி, தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறிய ஓட்ஸ் மாவில், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, தோசைக் கல்லில் மெல்லிய தோசை போல ஊற்றி வேகவைத்து, எடுக்க வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி.

    இதற்கு கார சட்னி, தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும்.

    தேவையான பொருள்கள் :

    ஓட்ஸ் - 3 கப்

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    சோள மாவு - 2 ஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தயிர் - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.

    * இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு.
    • இந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    இஞ்சி - ஒரு சிறு துண்டு

    பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

    செய்முறை:

    வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பை தனித்தனியாக போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

    மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

    குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

    • டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடலாம்.
    • மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

    தேவையானபொருட்கள்:

    ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி,

    கேரட் - சிறியது 1,

    பீன்ஸ் - 2,

    முட்டை கோஸ் - 25 கிராம்,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பூண்டு - 2 பல்,

    பச்சை மிளகாய் - 1(தேவைப்பட்டால்),

    வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி,

    எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்),

    மிளகு தூள் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதி வந்ததும் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

    இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

    சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி தயார்.

    தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்.

    எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

    • ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்.
    • சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    வேகமாக ஓடும் உலகில் காலை உணவை தவிர்ப்பதை காரணம் காட்டி பல ரெடி டு ஈட் உணவுகள் நுழைந்து விட்டன. கார்ன் ஃப்ளேக்ஸ், கப் நூடுல்ஸ், பாதி சமைத்த உணவுகளாக மாறிவிட்டது. அதிலும் சத்து, எடை குறைப்பு என்ற பெயரில் நம் ஊர் உணவையே மறந்து விட்டோம்.

    அப்படி தொடங்கியது தான் ஓட்ஸ் மோகம். போலந்து, ஆஸ்திரேலியா, மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் விளைவது தான் ஓட்ஸ். அதை இங்கே இறக்குமதி செய்ய அதன் நன்மைகளை அடுக்கி விட்டனர்.

    இதன் விளம்பரங்களை கண்டு நாமும் சமையல் அறையில் அதற்கு ஓர் இடத்தை கொடுத்து விட்டோம்.

    ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயம். எடை குறைப்புக்கு ஓட்ஸை உட்கொள்வது நல்லது தான். ஆனால் அது விரைவில் செரிமானம் ஆவதால், பசிக்கு நாம் அதிகம் சாப்பிட வாய்ப்பும் உள்ளதாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!

    அதற்கு சுவை இல்லாததால் சக்கரை ,ஸ்ட்ராபெரி, வாழை என ஃப்ளேவர்களை சேர்த்து விட்டனர். சுவைக்காகப் பல விஷயங்களை அதிகமாக ஓட்ஸோடு சேர்த்தால், ஓட்ஸின் பயன் முழுமையாக உடம்புக்குக் கிடைக்காது.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம்.

    அதைவிட கம்பு, சோளம், திணை, வரகு, சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. இவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. விலையும் குறைவு!

    100 கிராம் கம்பில், 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது, உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் எளிதில் குறைக்கும். ராகி உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

    எது எப்படியோ எப்பவும் வீட்டில் எண்ணெய் இல்லாமல் ஃப்ரெஷாக செய்யப்படும் இட்லிக்கு இணை எதுவுமில்லை. அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறேதிலுமில்லை.

    வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம்.
    வழக்கமாக பருகும் பாலுக்கு மாற்றாக ஓட்ஸை பாலாக தயாரித்து பருகலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 35 சதவீதம் கால்சியம், 25 சதவீதம் வைட்டமின் டி சத்து நிறைந்திருக்கிறது. பசும் பாலை விட இதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

    கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

    ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.
    ×