என் மலர்

  நீங்கள் தேடியது "Healthy Eating"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும்.
  • சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும்.

  பெருஞ்சீரகம் (சோம்பு) மற்றும் சீரகம் இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இவை இரண்டுமே மசாலா பொருட்கள்தான் என்றாலும் சில தனித்துவமான அம்சங்கள் அவற்றின் அடையாளத்தை வேறுபட வைக்கின்றன.

  பெருஞ்சீரகம் என்பது கேரட் குடும்பத்தை சேர்ந்த நறுமண தாவரமாகும். இது இனிமையான நறுமணத்தை கொண்டது. இதன் இலைகள், தண்டுகள், வேர்கள், விதைகள் என அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம். சீரகம் என்பது ஏபிஏசிஸ் குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது மசாலா பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

  பெருஞ்சீரகம் விதைகளுக்கும், சீரக விதைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்?

  பெருஞ்சீரக விதைகள் இனிமையான அதிமதுரம் சுவையை கொண்டிருக்கும். சீரக விதைகள் ஒருவித நறுமண வாசனையை கொண்டிருக்கும். பெருஞ்சீரகத்துடன் ஒப்பிடும்போது சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். மேலும் பெருஞ்சீரகம் விதைகள் பச்சை நிறத்தில் காணப்படும். சீரகம் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். சிலருக்கு இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பது போல் தெரியும். சீரகத்தை விட பெருஞ்சீரகம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்யப்படுவதால் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சீரக விதைகள் நன்றாக உலர வைக்கப்படுவதால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

  அளவில் வேறுபாடு

  இரண்டின் தோற்றமும், வடிவமும் ஒரே மாதிரியாக தெரியலாம். ஆனால் அளவு அடிப்படையில் அடையாளம் காண்பது எளிதானது. பெருஞ்சீரக விதைகளை விட சீரகம் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் எளிதாக வேறு படுத்தி விடலாம். சீரகம், பெருஞ்சீரகம் இரண்டும் 0.2 மி.மீ. முதல் 0.3 மி.மீ. வரையே இருக்கும்.

  சுவையில் வேறுபாடு

  பெருஞ்சீரகம் விதைகள் சீரக விதைகளை விட இனிப்பு சுவை கொண்டவை. இந்த இனிப்பு சுவை வாய் புத்துணர்ச்சிக்கு ஏற்றதாக அமையும். பல நூற்றாண்டுகளாக வாய் புத் துணர்ச்சிக்காக பெருஞ்சீரகம் பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

  சீரகம் பெரும்பாலும் குழம்புக்கு பயன்படுத்தப்படும் பொதுவான மசாலா பொருளாகும். மேலும் சீரகத்தில் மிளகு போன்ற கசப்பு சுவை சிறிது வெளிப்படும். பெருஞ்சீரகமோ சற்று இனிப்பான சுவை மூலம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இரண்டையும் அப்படியே கூட சாப்பிடலாம். எனினும் பெருஞ்சீரகம்தான் பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வேகவைத்தே உட்கொள்ளப்படுகிறது.

  வாசனையில் வேறுபாடு

  பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டும் நறுமணத்தில் வேறுபடுகின்றன. சீரக விதையின் மணம் காரமான குழம்பு வகைகளுக்கு மிகவும் ஏற்றது. அதேசமயம் பெருஞ்சீரகம் விதையின் நறுமணம் புத்துணர்ச்சிக்கு ஏற்றது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் கூட இனிமையான நறுமணத்தை கொண்டவை. அவை சாலட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

  பயன்களில் வேறுபாடு

  பெருஞ்சீரகம், சீரகம் இவை இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மசாலாப் பொருட்களாகும். பெருஞ்சீரகம் இயற்கையாகவே நறுமணத்தை பரப்பு வதால் அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் வாசனை திரவியத்தில் சேர்க்கப்படுகிறது. பல அத்தியாவசிய எண்ணெய்களில் இந்த மசாலாப் பொருட்கள் இரண்டுமே இடம்பெற்று உள்ளன. பெருஞ்சீரகம் இனிப்பு உணவுகளிலும், சீரகம் காரமான குழம்புகளிலும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

  சீரக விதைகளுக்கு மாற்றாக பெருஞ்சீரகம் விதைகளை பயன்படுத்தலாமா?

  முடியாது. ஏனெனில் இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் வெவ்வேறு சுவைகள் கொண்டுள்ளன. அவற்றின் வாசனையும் கூட மிகவும் வித்தியாசமானது. இரண்டின் சுவையும், பயன்பாடும் வேறுபடுவதால் ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றை கருதமுடியாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல.
  • அன்றாடம் நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்கத்திற்கு உதவும்.

  கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

  அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

  ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

  அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாப்பிடும் உணவின் சுவையை அதிகப்படுத்தும் தன்மை சட்னிக்கு உண்டு.
  • சிற்றுண்டி உணவு வகைகளில் சட்னி தவிர்க்கமுடியாதது.

  சட்னி வகைகளில் பெரும்பாலானவை சுவையோடு ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுபவை.

  புதினா சட்னி: கோடை காலத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. இதில் வைட்டமின்கள் பி, சி, டி ஆகியவை நிறைந்திருக்கின்றன. வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தையும் எளிமையாக்கும். பசி உணர்வை தூண்ட செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குமட்டலை போக்கும். உடல் வீக்கத்தை குறைக்க உதவும்.

  நெல்லிக்காய் சட்னி: நெல்லிக்காய் கசப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதனை சட்னியாக தயாரித்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

  கொத்தமல்லி சட்னி: எளிதாக தயார் செய்துவிடலாம் என்பதோடு சுவையும் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் சி, கே மற்றும் புரதங்களும் அதிகம் இருக்கின்றன. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். நீரிழிவு நோயாளிகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை தூண்ட உதவும். வாய்ப்புண் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் கொத்தமல்லி சட்னி சாப்பிடலாம்.

  தக்காளி சட்னி: தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவான அளவிலேயே உள்ளது. தக்காளி சட்னி இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும் தன்மை கொண்டது.

  வெங்காயம்-பூண்டு சட்னி: வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சட்னியை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இரத்தத்தில் கொழுப்பை ஒழுங்குபடுத்தும். பக்கவாதம் வராமல் தடுக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இது சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவைக்கும்.

  கருவேப்பிலை சட்னி: கறிவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் முழுமை பெறாது. இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. உணவுக்கு நறுமணத்தையும், நல்ல சுவையையும் ஏற்படுத்தி கொடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்டுகள், வயிற்றுப்போக்கு, இரத்தசோகை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இரைப்பை குடல் பிரச்சினையை தீர்க்கவும் உதவும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது.
  • "நொறுங்க தின்றால் நூறு வயது" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

  இன்றைக்கு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரை தேடி ஓடுகிறோம். மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகிறோம்.

  அந்த காலத்தில் மருந்துக்கு பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டனர்.

  அப்படி காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவு பழக்கங்கள், நமக்கு மிகப்பெரிய பொக்கிஷம். வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கிய பண்டிகை, திருவிழா என்றாலும் வாழை இலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஓட்டல்களும் இதை பின்பற்றுகின்றன. அவ்வாறு வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவ குணம் கொண்டதாகும். செரிமானத்துக்கு உதவுவதாகும்.

  ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவு பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடைய தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறுவது இதன் காரணமாகத்தான்.

  உணவை நன்கு மென்று சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்சைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்க தின்றால் நூறு வயது" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமில சுரப்பால் உருவாகக்கூடிய குடல்புண்ணுக்கு இதுவே மருந்தாக இருக்கும்.

  பொதுவாக பந்தியில் உணவு உண்ணும் போது இனிப்பு, சாதம், சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உணவை சாப்பிடுவது நல்லது என கூறுகிறார்கள். இதன் மூலம் நமது உணவை செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்சைமை நீர்க்க செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

  காலையில் குளிர்ந்த நீர் 2 தம்ளரும், இரவில் படுக்கும் முன் 3 தம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடலுக்கு நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை.
  • எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது.

  உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை உட்கொள்கிறார்கள். அது செரிமானத்திற்கு உதவும், சருமத்திற்கு நன்மை பயக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உணவு நல்லது என்று குறிப்பிடப்பட்டால், அதை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது. உண்மையில், எலுமிச்சை நீரை அதிகமாக பருகினால் பக்க விளைவுகள் ஏற்படும்.

  எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒரு நபர் எலுமிச்சை சாறை அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொண்டால் அதிலுக்கும் அமிலத்தன்மை காரணமாக பல் சிதைவை சந்திக்க நேரிடும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாக வெளிப்படுவதை தவிர்க்க ஸ்ட்ரா பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ, வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையோ பின்பற்றலாம். எலுமிச்சை சாறுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும். எனவே எலுமிச்சை சாறு பருகியவுடன் பற்களை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  ஒற்றைத்தலைவலி: சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை தூண்டும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோ அமைன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே, தொடர்ந்து தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை சாறு உட்கொள்வதை குறைக்க வேண்டும். சிட்ரஸ் பழங்களுக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

  வயிற்று உபாதை: சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  வாய்ப்புண்: சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் அவை ஆறும் வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.

  நோய்க்கிருமிகள்: எலுமிச்சையின் தோல் பகுதிகள் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. உணவங்களில் பெரும்பாலும் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதுதான் நல்லது. தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். தினமும் இரண்டு எலுமிச்சை பழங்கள் பயன்படுத்தலாம். அதுபோல் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உட்கொள்ளலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.
  • புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

  நமது பாரம்பரிய சமையலில் 'புளி' முக்கிய பங்கு வகிக்கிறது. அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதால் ரசம் இல்லாத விருந்தை நமது கலாசாரத்தில் பார்ப்பது அரிது. புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது நம்மில் பலர் அறிந்திராத அறிவியல் பூர்வ உண்மை.

  புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும். இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  இதில் உள்ள பிளேவனாய்டு மற்றும் பாலிபினால், உடல் செயல்பாடுகளைத் தூண்டி அதிக எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது. தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

  பிளேவனாய்டு கெட்டக் கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. புளியை உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைக் குறைப்பதோடு மட்டும் இல்லாமல், இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், கொழுப்பைக் கரைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

  புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் ஆண்டிசெப்டிக் பண்புகள் தொற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புளி வகைகளில் கலப்பு இனத்தை சேர்க்காமல், நாட்டு வகை அல்லது மலபார் புளியை (குடம்புளி) சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறப்பாக எடையை குறைத்து பலன்களை பெறலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிடுவது தவறான பழக்கம்.
  • ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது.

  பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும். ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான். ஆப்பிளின் தோலில் பெக்டின் என்னும் சேர்மம் காணப்படுகிறது. அது தூக்கமின்மை, நேரம் தவறி சாப்பிடுவது காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும்.

  காலையில் ஒரு ஆப்பிளை உட்கொண்டால் அது குடல் இயக்கத்தை தூண்டிவிடும். அதில் இருக்கும் பெக்டின் பெருங்குடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பெக்டின் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு வழிவகை செய்யக்கூடியது. காலை வேளையில் ஆப்பிளை சாப்பிடும்போது உடல் முழுவதும் இருக்கும் நச்சுக்களை அப்புறப்படுத்த துணை புரியும்.

  ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பலரும் உட்கொள்கிறார்கள். அது தவறான பழக்கம். ஆப்பிளின் தோல் பகுதியில்தான் பெக்டின் இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு சாப்பிடுவது முழு பலனை தராது. குடலுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. அதே வேளையில் ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது. அதன் தோல் பகுதியை நன்றாக கழுவ வேண்டும்.

  ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மெழுகு தேய்க்கப்படுவதாக கூறப்படுவதால் தோல் பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டுத்தான் உட்கொள்ள வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது.
  • ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம்.

  இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

  ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

  ''சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

  ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

  நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழ்மை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்" என அந்த ஆய்வு முடிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.
  • நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.

  பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்.

  பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார்லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

  அதேபோல நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும்.

  குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை பியூட்ரிக் அமிலமாக மாற்றி உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாக மாற்றுகின்றன.

  நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

  பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதய வியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும்.

  ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

  பார்லியில், உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது.

  செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதமும் உள்ளன. காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

  இதில் மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது. வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது.

  எப்படி சாப்பிடலாம்..?

  பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம். கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது.
  • உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும்பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

  முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

  சுரைக்காய்:- உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

  உருளைக்கிழங்கு:- மலச்சிக்கலை போக்கும்.

  வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

  வாழைப்பூ:- மலச்சிக்கலை போக்கும்.

  வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

  குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்.

  சவ்சவ்:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

  வெண்டைக்காய்:- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

  கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

  சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

  எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிலர் புரோட்டின் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
  • நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம்.

  இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் புரத சத்தை நேரடியான உணவில் இருந்து பெற விரும்புவதில்லை. அதற்கு பதிலாக புரோட்டின் பவுடர் என்று கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடரை வாங்கி பருகுகிறார்கள். அதிலும் ஜிம்முக்கு போகும் இளைஞர்கள் இதற்கென்று பெரும் செலவு செய்கிறார்கள். இது உண்மையில் நல்லதா?

  புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட பொருட்களின் கூட்டு சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிப்பதற்கும், காயம், புண் போன்றவற்றை ஆற்றுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாக புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களை தயாரிக்கவும் இது தேவை.

  நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தை பெறலாம்.

  இப்படி இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், பிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், புரோட்டின் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை.

  சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று புரோட்டின் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இதுவும் தவறு. இவர்களுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச் சத்து கூடுதலாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்டவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்கப்படாமல் உட்கொள்ள வேண்டும்.

  இது சத்துபானம் தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதய நோய்க்கு பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும். ஜிம்முக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளை கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இறைச்சி, மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
  • இறைச்சி, மீன் வகைகளில் கொரோனா வைரஸ் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும்.

  கொரோனா வைரஸ் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தப்படும் இறைச்சி, மீன் வகைகளில் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

  கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் சால்மன் வகை மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இறைச்சி மற்றும் மீன் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், பிரீசரில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் ஆராய்ச்சியாளர்கள் சேமித்துவைத்தனர்.

  அப்படி குளிர்ந்த நிலையில் வைக்கப்படும் இறைச்சி வகைகளில் வைரஸ்கள் வளரக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார், ஆராய்ச்சியாளர் பெய்லி. தென்கிழக்கு ஆசியாவில் பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சி பொருட்கள் வைரஸ் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார், பெய்லி.

  இதேபோன்ற சூழலில் வைரஸ் உயிர்வாழ முடியுமா, இல்லையா என்பதை ஆராய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் சொல்கிறார். ஆய்வின் முடிவில் குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி வகைகளில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவிட்-2 வைரஸ் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.