என் மலர்

  நீங்கள் தேடியது "Fruits Vegetables"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிடுவது தவறான பழக்கம்.
  • ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது.

  பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும். ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான். ஆப்பிளின் தோலில் பெக்டின் என்னும் சேர்மம் காணப்படுகிறது. அது தூக்கமின்மை, நேரம் தவறி சாப்பிடுவது காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும்.

  காலையில் ஒரு ஆப்பிளை உட்கொண்டால் அது குடல் இயக்கத்தை தூண்டிவிடும். அதில் இருக்கும் பெக்டின் பெருங்குடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பெக்டின் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கு வழிவகை செய்யக்கூடியது. காலை வேளையில் ஆப்பிளை சாப்பிடும்போது உடல் முழுவதும் இருக்கும் நச்சுக்களை அப்புறப்படுத்த துணை புரியும்.

  ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பலரும் உட்கொள்கிறார்கள். அது தவறான பழக்கம். ஆப்பிளின் தோல் பகுதியில்தான் பெக்டின் இருக்கிறது. அதனை நீக்கிவிட்டு சாப்பிடுவது முழு பலனை தராது. குடலுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது. அதே வேளையில் ஆப்பிளை அப்படியே சாப்பிடவும் கூடாது. அதன் தோல் பகுதியை நன்றாக கழுவ வேண்டும்.

  ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மெழுகு தேய்க்கப்படுவதாக கூறப்படுவதால் தோல் பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டுத்தான் உட்கொள்ள வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது.
  • ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம்.

  இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

  ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

  ''சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

  ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

  நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழ்மை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்" என அந்த ஆய்வு முடிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது.
  • உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும்பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

  முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

  சுரைக்காய்:- உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

  உருளைக்கிழங்கு:- மலச்சிக்கலை போக்கும்.

  வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

  வாழைப்பூ:- மலச்சிக்கலை போக்கும்.

  வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

  குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்.

  சவ்சவ்:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

  வெண்டைக்காய்:- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

  கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

  சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

  எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.
  • ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.

  ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.

  1. செரிமானத்தை மேம்படுத்தும்

  பப்பாளி பழத்தில் புரதத்தை ஜீரணிக்க உதவும் சைமோபாபைன் மற்றும் பபைன் போன்ற என்சைம்கள் இருப்பதால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெறும். மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உண்டு. மேலும் பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

  2. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்

  புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அது ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பீட்டா கரோட்டினுடன் இணைந்து அத்தகைய புற்றுநோயை தடுக்கக்கூடியது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்துக்கு ஆரோக்கியம் சேர்ப்பதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

  3. இதயத்தைப் பாதுகாக்கிறது

  பப்பாளி, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதற்கும் ஊக்குவிக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.

  4. மூளையை பாதுகாக்கும்

  மூளை செல்களை சிதைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் நோய், அல்சைமர். அறிவுசார் திறன்களை இழக்க செய்துவிடும் ஒருவகை நரம்பியல் கடத்தி நோயும் கூட. பிரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளுக்கு இடையே சம நிலையின்மை நிலவுவதன் விளைவாக செல்கள் சேதம் அடைகின்றன. பப்பாளி மற்றும் புளித்த பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம், ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.

  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது.

  6. கண்களை பாதுகாக்கும்

  உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக கண்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பது முக்கியமானது. பப்பாளி, தசை சிதைவு போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதுமட்டுமல்லாமல் பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது கார்னியாவை பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருப்பதால் விழித்திரை சிதைவை குறைக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

  7. வலியை குறைக்க உதவும்

  இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் பப்பேன் என்ற நொதி பப்பாளியில் இருக்கிறது. இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், சில வகையான வலிகளை குறைக்கவும் உதவும். மேலும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட பாபாயின் இருப்பதால், கீல்வாதம் காரணமாக ஏற்படும் மூட்டு வலியை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால் குமட்டல் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.
  • சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

  கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

  தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 பழங்கள் குறித்து பார்ப்போம்.

  1. வாழைப்பழம்: இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் இந்த பிரச்சினைகள் தலைதூக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் அதனை சாப்பிடுவது நல்லது.

  2. சிட்ரஸ் பழங்கள்: இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்ப பெற்றிருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி நல்லது. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் செரிமானத்தை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்கவும் உதவும்.

  3. அவகேடோ: இந்த பழத்தில் அதிக போலேட் உள்ளது. வைட்டமின் சி, பி, கே, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படும். மேலும் அவகேடோ பழத்தில் உள்ள பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் தசை பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். பொதுவாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு காரணமாக காலில் பிடிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவை பூர்த்தி செய்து விடலாம். குமட்டல் பிரச்சினையையும் கட்டுப்படுத்தி விடலாம்.

  4. ஆப்பிள்: நார்ச்சத்துள்ள இந்த பழம் அதிக அளவு வைட்டமின் சியையும் கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பெக்டின் ஆகியவையும் உள்ளன. பெக்டின் என்பது ஆப்பிளில் காணப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆப்பிளில் இருக்கும் அதிக சத்துக்களை பெறுவதற்கு அதனை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது. இருப்பினும் தோல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.

  5. தர்பூசணி: தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் தாதுக்களும், நார்ச்சத்துகளும் உள்ளன. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. தசைப்பிடிப்புகளையும் போக்க உதவும்.

  பிளாக்பெர்ரி, கிவி, மாம்பழம், கொய்யா, பேரிக்காய், மாதுளை, திராட்சை, செர்ரி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

  கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 காய்கறிகள்குறித்து பார்ப்போம்.

  கர்ப்ப காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகள்

  1. பச்சை இலை காய்கறிகள்: முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.

  2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் அதில் இருக்கிறது.

  3. வெள்ளரி: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான மலச்சிக்கல் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

  4. தக்காளி: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. தக்காளியை அளவோடு பயன்படுத்துவதன் மூலம் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

  5. கத்திரிக்காய்: கத்தரிக்காயும் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது, ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன.
  • கிவி பழத்தில் வைட்டமின் “ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது.

  கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

  சரும நலம் கிவி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

  கிவி பழத்தில் வைட்டமின் "ஈ " சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

  இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் செய்கிற சக்தி கிவி பழத்திற்கு உண்டு.

  பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கிவி பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது.

  கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் கிவிபழம் பேருதவி புரிகிறது.

  நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. கிவிபழம் சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

  அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கிவி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

  ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கிவி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் "எ" மற்றும் "ஈ" சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.
  • கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

  கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது.

  "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்களே அதுபோன்று நல்ல சத்துக்கள் நிரம்பிய கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.

  கேரட், அதிகமான சத்துக்கள் அடங்கியது. உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. அதுவே தேவையான அளவை விட அதிகமாக உண்ணும்போது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

  அதாவது ஒரு நாளைக்கு போதுமான அளவு

  கேரட்சாறு- 60 மி.லி (அல்லது)

  கேரட் பொரியல் 1கப் (அல்லது)

  கேரட் சாலட் 1கப் எடுத்து கொள்வது நல்லது.

  சர்க்கரைநோய் உள்ளவர்கள் கேரட் அளவுடன் சாப்பிடுவது நல்லது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கேரட் உண்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

  வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருந்தால் கேரட் உண்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் பழத்தை எல்லா நேரமும் சாப்பிடுவது நல்லதல்ல.
  • ஆப்பிள் பழத்தின் தோல் பகுதியில் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை ஆப்பிளுக்கு இருக்கிறது. எனினும் ஆப்பிள் பழத்தை எல்லா நேரமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஆப்பிள் பழத்தை காலை வேளையில் சாப்பிடுவதுதான் சிறந்தது.

  தற்போது நிறைய பேர் தூக்கமின்மை, தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களால் அவதிப்படுகிறார்கள். அதனால் செரிமான செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. அதனை சீர்படுத்த ஆப்பிள் பழத்தை காலை வேளையில் சாப்பிடுவதே சிறந்தது. ஆப்பிள் பழத்தின் தோல் பகுதியில் பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அவை குடல் இயக்கங்கள் சீராக செயல்பட வழிவகை செய்யும். மேலும் காலை வேளையில் மற்ற பழங்களை விட ஆப்பிள் சாப்பிடுவது குடல் இயக்கத்துக்கு நலம் சேர்க்கும்.

  ஆப்பிளில் இருக்கும் பெக்டின், உடலில் உள்ள லாக்டிக் அமிலத்தை பாதுகாக்க உதவும். பெருங்குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவும். அத்துடன் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும். மதிய வேளையில் உணவு இடைவெளியின்போது ஆப்பிள் சாப்பிடலாம்.

  மாலை வேளையிலோ, இரவிலோ ஆப்பிள் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளுக்கும் எதிராக திரும்பி குடல் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடும்போது வாயு பிரச்சினை உருவாகி அதிகாலை வேளையில் அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கும் ஏற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது.
  • நெல்லிக்காயில் வைட்டமின் சி 600 மில்லி கிராம் உள்ளது.

  வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் 'சி' 600 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது. ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது. தலை முடி உதிராமல், வளர்ந்து, நரை முடி தோன்றுவதை தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.

  நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் வைட்டமின் 'சி' சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

  நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக்கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன.
  • மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது.

  மாம்பழத்தை சாப்பிட்டதும் பெரும்பாலானோர் அதன் கொட்டையை குப்பைத்தொட்டியில் வீசி விடுகிறார்கள். சிலர் மண்ணில் புதைத்து மரமாக வளர்க்க முயற்சிப்பார்கள். மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. அவற்றுள் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருக்கின்றன.

  மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி, தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக்கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

  உலரவைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத் தூளை உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இந்த தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை தானாகவே அதிகரிக்கவும் வைத்துவிடும். இது தவிர ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்தவும் துணைபுரியும்.

  இந்த தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு தூளை கலந்தும் பருகலாம். சுவைக்காக சிறிது தேனையும் சேர்த்துக்கொள்ளலாம். அதுபோல் எலுமிச்சை சாறுடனும் இந்த தூளை கலந்து பருகலாம். மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது.

  மாங்கொட்டை பருப்பு தூளில் இருக்கும் வைட்டமின் சி, ஸ்கர்வி நோயை கட்டுப்படுத்தக்கூடியது. இரு பங்கு வெல்லம், 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு பங்கு மா விதைத்தூளை கலந்து சாப்பிட்டு வருவது உடல் நலனை மேம்படுத்தும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜூஸ் முதல் கேக் வரை வெவ்வேறு வழிகளில் மாம்பழங்களை ருசிக்க முடியும்.
  • மாம்பழங்களில் பைடிக் அமிலம் எனப்படும் ஒருவகையான ஊட்டச்சத்தும் உள்ளடங்கி இருக்கும்.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த மாம்பழ சீசன் வந்துவிட்டது. ஜூஸ் முதல் கேக் வரை வெவ்வேறு வழிகளில் மாம்பழங்களை ருசிக்க முடியும். மாம்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை விட தண்ணீரில் அரை மணி நேரமாவது மாம்பழங்களை ஊற வைத்துவிட்டு பின்பு கழுவி உண்பதே சிறந்தது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான காரணங்களை பார்ப்போம்.

  பெண்கள் மாம்பழங்களை உட்கொள்வது முகப்பரு போன்ற சில தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவற்றை தவிர்க்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதுதான் சரியானது. இந்த நடைமுறையின்போது மாம்பழங்களின் தோல் பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்குகள், ரசாயனங்கள் அகற்றப்படுவதை தவிர அறிவியல் ரீதியாக வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  மாம்பழங்கள் இயற்கையாகவே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மை கொண்டது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு வித்திடும் தெர்மோஜெனீசிஸ் உற்பத்திக்கு மாம் பழங்கள் வழிவகுக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழத்தை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனீசிஸ் வீரியத்தை குறைக்க உதவும்.

  பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. தலைவலி, கண் மற்றும் தோல் எரிச்சல், சுவாசக் குழாய் எரிச்சல், குமட்டல் போன்ற பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது அவற்றின் ரசாயனங்களின் வீரியம் குறைந்துவிடும். மேலும் மாம்பழத்தின் தண்டு பகுதியில் வெளிப்படும் பாலின் தன்மையையும் கட்டுப்படுத்திவிடும்.

  தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை ரசாயன கலவையான பைட்டோ கெமிக்கல்கள் மாம்பழங்களில் வலுவாக அமைந்திருக்கும். 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றின் செறிவு அளவை குறைக்கலாம். மேலும் அதிகப்படியான கொழுப்பையும் நீக்கிவிடலாம். மாம்பழங்களில் பைடிக் அமிலம் எனப்படும் ஒருவகையான ஊட்டச்சத்தும் உள்ளடங்கி இருக்கும்.

  இது ஆரோக்கியத்திற்கு நலமும் சேர்க்கும், கேடும் விளைவிக்கும் தன்மை கொண்டது. இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உடலில் இருந்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஊட்டச்சத்து எதிர்ப்பு மருந்தாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. எனவே மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதிகப்படியான அமிலத்தை அகற்றிவிட முடியும்.