என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana"

    • தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது
    • கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது. இப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில், தங்கம் விலை குறைய வேண்டும் என பக்தர் ஒருவர் வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர் திருவிழாவின் போது பக்தர் ஒருவர் "ஏழைகளும் வாங்கும் அளவிற்கு தங்கம் விலை குறைய வேண்டும்" என வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்த புகைப்படம் வைரலானது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.
    • வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை

    வங்கதேசத்தில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் லிட்டன் சந்திர கோஷ் (55) என்ற இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவபன் மியா (55), அவரது மனைவி மஜேதா (45), அவர்களது மகன் மாசூம் மியா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாசூம் மியா ஒரு வாழைப்பழத் தோட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போயுள்ளது. இதனால் அதை கடைகளில் தேடியுள்ளனர். அப்போது லிட்டன் சந்திர கோஷின் உணவகத்தில் அவற்றை மாசூம் கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் கொலையில் முடிந்துள்ளது.

    கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிட்டனை அடித்தும், உதைத்தும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று உள்ளூர் ஊடகமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

    • நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    • சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான்.

    நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பளபளப்பான, தெளிவான முகம் உடல்நலனை பிரதிபலிக்கிறது
    • அனைத்து தோல் நோய்களுக்கும் மஞ்சள் தீர்வாக உள்ளது.

    நமது சருமம், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தாண்டி, நமது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். பளபளப்பான மற்றும் தெளிவான முகம் உங்கள் உடல்நலனை பிரதிபலிக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன. நமது சருமம் பெரும்பாலும் இதன் விளைவுகளை பிரதிபலிக்கிறது. பளபளப்பான சருமத்தைப் பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆரோக்கியத்தை பற்றியதும். சரும ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். என்னதான் நாம் சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அழகுக்காக வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கை பொருட்கள் தரும் அழகை அதனால் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த முக்கிய மூலப்பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    மஞ்சள்

    மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்திற்கு காரணமான இதில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்திற்கு பளபளப்பை வழங்கவும், கண்ணின் கருவளையத்தை போக்கவும், வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.

    தேன்

    தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராகும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்தில் உள்ள வடுக்களை மறைக்க தேன் உதவுகிறது. சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

    ஆரஞ்ச் ஜுஸ்

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.


    இயற்கை பொருட்கள் தரும் அழகை எதனாலும் ஈடுகொடுக்க முடியாது.

    எலுமிச்சை

    எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. இது நமது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நமது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

    தயிர்

    லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர், சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் பழுப்பு மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலில் ஏற்படும் தீக்காயங்களைத் தணித்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

    பாதாம்

    பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது நமது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

    வாழைப்பழம்

    வாழைப்பழம் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. 

    பப்பாளி

    பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் வடுக்கள் குறையும். பப்பாளி ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகான பளபளப்புடன் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது. 

    • ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாழைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோன்று வாழைகள் பயிரிட்டு இருந்தனர்.

    ஆனால் கடந்த மாதம் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

    இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால் உரிய விலை கிடைக்கவில்லை.

    கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:-

    ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.25-ல் இருந்து ரூ.35க்கு மட்டுமே விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.

    இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டி ருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம்

    செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    அதேபோல் இரு சக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்றகூலி தொழி லாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். கடைகளுக்கு செல்லும் சிலர் குடைகளைப் பிடித்துக் கொண்டு சென்றனர் . கார்கள், வேர்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் சாலையில் செல்லும்போது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.

    விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வகை யான பண பயிர்கள் சாகு படி செய்துள்ளனர். வாழை தோட்டங்களில் மழை வெள்ளம் சூழுந்து குளம்போல் காணப்ப டுகிறது. இதனால் வாழை அழுகும் சூழ்நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு யூனியனில் உள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர்.

    இவர்கள் வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால், வாழை இலைகள் சீக்கிரமாகவே மஞ்சள் நிறமாகி, பழுத்து வீணாகி வருகின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து நெல்லை தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் தலைமையில் களக்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சண்முகநாதன், தோட்டக்கலை அலுவலர் இசக்கி முத்து, உதவி அலுவலர் கிளாஸ்டன் ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் களக்காடு பகுதிக்கு விரைந்து வந்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அதிகாரிகளை இலைக்கருகல் நோயால் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

    வாழையில் இலைக்கருகல் நோயை பார்வையிட்ட அதிகாரிகள், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாட்டால் 'சிக்கோடக்கா' என்கிற இலைப்புள்ளி நோய் வாழைப்பயிரை தாக்கி யுள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பயிர்களை காப்பாற்ற என்ன மருந்து கலவையை வாழைப்பயிர்கள் மீது தெளிக்க வேண்டும் என்கிற விளக்கத்தையும் அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு தெரி வித்தனர்.

    இலைக்கருகல் பாதிப்பால் வாழையின் மகசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால், வாழை பயிர் செய்த விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக இலைக்கருகல் நோய் பாதிப்புக்கு உள்ளான வாழை பயிர் செய்துள்ள விசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    வாழையில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. விவசாயப் பெருமக்கள் தங்களது விவசாயம் சார்ந்த உரிய ஆவணங்களுடன் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வேளாண் துறையில் மனு கொடுத்து, ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அதேநேரம், தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஊக்கத்தொகை சிறிய தொகைதான். இது, அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விடாது. அதனால், இதுபற்றி முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

    அதேவேளையில், வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி வாழைப்பயிர்களை பாதுகாக்குமாறு விவசாயப் பெருமக்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
    • வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இங்குள்ள சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. கிராமத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    நள்ளிரவு நேரத்தில் யானை வருவதை அறிந்த கிராம மக்கள், வனத்துறை யினர் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொண்டும் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    மக்கள் விரட்டும்போது, வனப்பகுதிக்குள் செல்லும் யானை, மீண்டும் நள்ளிரவு நேரத்தில் கிராமத்துக்குள் வந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வனத்துறை யினரும் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி கண் விழித்து யானையை விரட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால், தார் காட்டில் இருந்து நீதிபுரம் வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

    தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், உணவு தேடியும் யானை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் யானையை அடர் வனப்பகு திக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

    • 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

    • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
    • ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.

    நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.

    வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.

    ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.

    வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.

    சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×