என் மலர்

  தர்மபுரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி அருகே 12 கிராம மக்கள் சேர்ந்து விழா நடத்தினர்.
  • மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நடந்தது.

  காரிமங்கலம்.

  தருமபுரி மாவட்டம் முக்களம் ஊராட்சி பெரியமுக்குளம் ஓபுளிக்கு உட்பட்ட சீகலஅள்ளி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 12கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது.

  தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

  மஹாபாரத சொற்பொழிவில் 18-ம் நாள் 18-ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அருள் ஜோதி நாடக சபா கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் ,பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா் .இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்றனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்- லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
  • அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என்று புகார் கூறுகின்றனர்.

  பாப்பிரெட்டிப்பட்டி,

  தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கொண்டு பொம்மிடி நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலை வேலை என்பதால் வேலைக்கு சென்று திரும்பிவர்கள் கூட்டத்தால் பேருந்து நிரம்பி வழிந்தது. இந்த டவுன் பஸ் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, வழியாக மருக்காலம்பட்டி ஏரியை தாண்டி சென்று கொண்டிருந்தது.

  டவுன்பஸ்சை பொம்மிடி வினோபாஜி தெருவைசேர்ந்த டிரைவர் மாது ராஜ்(56) மெணசியை சேர்ந்த சேது (54) கண்டக்டராகவும் இருந்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் இருந்து சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரி டவுன் பஸ் மீது பயங்கரமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதியது.

  இதில் டவுன் பஸ் வலது புறமாக பயங்கர சேதமானது இதனால் பயணிகள் அனைவருக்கும் தலை.கால் மற்றும் உடல் முழுவதும்காயம் ஏற்பட்டது சிலர் பேருந்தி ல் இருந்து தூக்கி விசப்பட்டதில் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டது

  பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். பேருந்து ஓட்டுனரும் லாரி ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். அவர்களை பொதுமக்கள் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து இடிபாடுகளை அகற்றி மீட்டனர்.

  இதில் பஸ் டிரைவர் மாதுராஜ், லாரி டிரைவர் செந்தில், மெனசியை சேர்ந்த அழகரசன் (55), அமுதா (30), கடத்தூரை சேர்ந்த நர்ஸ் வினோதினி (26) ஆகிய 6 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கை, கால்களில் பலத்த காயமடைந்தனர்.

  உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கையில் இந்த பேருந்து பொம்மிடி அரசு போக்குவரத்து கழக பணிமனை சொந்தமானது எனவும் இந்த பணிமனையில் 44 பேருந்துகள் உள்ளதாகவும் பராமரிப்பு பணியை சரிவர செயல்படாததால் இந்த பணிமனையில் பேருந்துகள் பல இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றது எனவும் குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒகேனக்கல் பகுதியில் மலைப்பகுதியில் விபத்து திருச்சி அருகே விபத்து என பல விபத்துக்களையும் ஏற்படுத்தி பல உயிர்களை பலி வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  எனவே தருமபுரி மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனைக்கு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு மனித உயிர்களை காக்கும் விதத்தில் தரமான பேருந்துகளை வழித்தடங்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி அருகே எஸ்.டி.பி.ஐ. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பா.ஜ.க.வினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

  பாலக்கோடு,

  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை வெளியிட்ட பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் பைரோஸ் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதில் உ.பி யோகி அரசின் புல்டோசர், காட்டுத்தர்பாரை நிறுத்த கோரியும், மத்திய பாஜக மோடி அரசு பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

  சிறப்பு அழைப்பாளர் களாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் முஹம்மத்உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ்அஹமத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அதிக்குல்லா, முன்னாள் மாவட்ட தலைவா் ஜாவித், செயற்குழு உறுப்பினர் ஜிலான், துணை செயலாளர் ஹைதர், பொருளாளர் நிஜாம், செயற்குழு உறுப்பினர் அலி, செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக், ஜமாத் நிர்வாகிகள், மௌஹல்லாவாசிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் நகர செயற்குழு உறுப்பினர் தஜ்மல் நன்றி தெரிவித்தார்.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • இதனால் பொதுமக்கள் சுற்றுலா போல வந்து ரசிக்கின்றனர்.

  தருமபுரி,

  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தது. இவ்வலுவலகம் மூலம் இரு மாவட்டங்களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பணிகள் நிர்வகிக்கப்பட்டன. பின்னர் 2016-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்துக்கென தனி அலுவலகம் பிரிக்கப்பட்டு தருமபுரி அப்பாவு நகர் பகுதியில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வந்தது.

  இந்நிலையில், இந்த அலுவலகத்துக்கென அதியமான்கோட்டை புறவழிச் சாலையில் ஏ.ரெட்டிஅள்ளி ஊராட்சி பகுதியில் சோகத்தூர் அருகே மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டது, கடந்த 2021 நவம்பர் முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. 33 சென்ட் பரப்பளவு கொண்ட வளாகத்தில் அலுவலகங்களுக்கென 2500 சதுர அடி பரப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதர காலியிடங்கள் முழுவதும் சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

  ஒருபுறம் நொச்சி, சிறியா நங்கை, கருந்துளசி, சீனித்துளசி உள்ளிட்ட மூலிகைச் செடிகள் தோட்டம். மற்றொருபுறம் வாழை, கொய்யா, நெல்லி, அத்தி, மா, பலா, சீத்தா, கொடுக்காப்புளி, கடுக்காய் என பழ மரத்தோட்டம், அலுவலக முகப்பில் புல் தரையுடன் கூடிய மலர் மற்றும் அலங்கார தாவரங்கள், வாகன நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் கூண்டுகளில் புறா, நாட்டுக்கோழி, வாத்து, முயல் போன்ற வளர்ப்பு உயிரினங்கள், இவைதவிர, பிரதான சாலையில் இருந்து அலுவலகம் வரை செல்லும் சாலையை ஒட்டி இருபுறமும் நாட்டு ரக மரக்கன்றுகள், அதேபோல அலுவலக மதில் சுவரை ஒட்டிய காலியிடத்தில் வலது மற்றும் இடது புறங்களில் மூன்றடுக்கு வரிசையில் நாட்டு ரக மரக்கன்றுகள், இவையனைத்தும் சேர்ந்து இந்த அலுவலக வளாகத்துக்கு ஒரு சூழல் பூங்கா போன்ற தோற்றத்தை உருவாக்கித் தந்துள்ளது. இவையனைத்தும், கடந்த 6 மாத காலங்களில் உண்டாக்கப்பட்ட மாற்றங்கள் ஆகும்.

  இவைமட்டுமன்றி பொருளாசையின் தீமைகள், அன்பின் பலம், அறிவுத் தேடலின் முக்கியத்துவம், அறத்தின் வலிமை, சூழலின் அவசியம் போன்றவற்றை 'நறுக்'கென உணர்த்தும் வகையிலான வாசகங்களும், தலைவர்களின் பொன்மொழிகளும் அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் உட்பகுதி சுவர்கள் என பல இடங்களிலும் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

  தொழிற் சாலைகளுக்கான அனுமதி, உரிமம் புதுப்பிப்பு, சூழல் பிரச்சினைகள் தொடர்பான புகார் போன்ற தேவைகளுக்கானவர்கள் மட்டுமே இந்த அலுவலகத்தை நாடும் நிலை மாறி, மேற்கண்ட சூழலால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து பார்வையிட்டு, ரசித்துச் செல்லும் இடமாக மாறியிருக்கிறது. சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம். அலுவலகத்தை நாடி வரும் அனைவரும் 10-க்கும் மேற்பட்ட மூலிகை பொடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை பருகாமல் செல்ல முடிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் பிரத்தியேக ஐஸ் க்ரீம் உபசரிப்பு.

  மேலும், மாவட்ட அரசுப் பள்ளிகளின் 600 ஆசிரியர்களுக்கு சூழல் முக்கியத்துவம் குறித்து இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 251 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இவ்வாறான பயிற்சியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்தலைமுறைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுரை கூறியுள்ளார்.
  • புத்தகம் வசிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

  தருமபுரி,

  தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, இப்புத்தக திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமைவகித்தார். பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

  விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, புத்தகத் திருவிழாவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

  பின்னர் செய்தியாளர் களிடம் அவர் பேசிய தாவது:-

  இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டும். சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம். மாணவப் பருவம் என்பது ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தப்பட வேண்டிய பருவமாகும். அவ்வாறு நல்வழிப்படுத்த கல்வி மட்டுமே சிறந்ததாக இருக்கும். அதற்கு புத்தகங்களை படிப்பது மிக மிக அவசியம். நவீன செல்போன்களும் சமூக ஊடகங்களும் சாதாரணமாகி உள்ள இன்றைய சூழலில் அவைகளுக்கு அடிமையாகி விடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது இன்றைய சூழலில் இளம் தலைமுறையினருக்கு மிக மிக அவசியமாகும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

  இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ ர் செல்வம்,தெரிவித்தார்.

  விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு யசோதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பரமேஷ்வரி, தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உட்பட இன்னாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி கல்வி இயக்கக தருமபுரி மண்டல இணை இயக்குநர் ராமலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) தனலட்சுமி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள், தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன், பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, பாரதி புத்தகாலயம் அறிவுடைநம்பி உட்பட குழு பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடத்தூர் பேரூராட்சியில் தூய்மைப்பணி இயக்கம் நடந்தது.
  • பேரூராட்சி தலைவர்,கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

  பாப்பிரெட்டிப்பட்டி,

  தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 15 வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில் 8, 9,மற்றும் 10வது வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் தீர்த்தகிரி ,கவுன்சிலர்கள் முனிராஜ், சரவணன், கார்த்திக், சபியுல்லா, மயில்சாமி, மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் மோகன், சதீஷ்குமார் , பச்சியப்பன் மற்றும் தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்,

  அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து குப்பைகளை வீடுகளில் சேகரித்து பணியாளரிடம் வழங்கவேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினார்.
  • 2 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், அரூர் நகரப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த, திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச சேர்ந்த மணி என்பவருடைய மகன் யுவராஜ் (24), அரியமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மகன் விக்னேஷ் (எ) விக்கி (20), அரூரை அடுத்த கோணம்பட்டி பகுதியை சேர்ந்த மாரி என்வருடைய மகன் ராமகிருஷ்ணன் (28) ஆகிய 3 பேரும் கடந்த மே மாதம் 15-ந் தேதி அனுமந்தீர்த்தம் அருகே கையும் கலவுமாக பிடிக்கப்பட்டனர்.

  அப்போது இவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், அரைக்கிலோ வெள்ளிப் பொருள்கள், அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த பின்பு சிறையில் அடைத்தனர்.

  இந்த நிலையில் யுவராஜ், விக்னேஷ் (எ) விக்கி ஆகிய இருவர் மீதும் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்ளதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி அருகே 6 வழி சாலை அமைக்கும் பணிக்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி வீடு மற்றும் தொழிற்சாலை இடிக்கப்பட்டது.
  • இதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தருமபுரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து, தருமபுரி மாவட்டம் தடங்கம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான நில எடுப்பு பணி மற்றும் நிலத்திற்கான பணம் வழங்காததால் முறையாக முடிக்கப்படவில்லை என அதிகாரிகளை கண்டித்து மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் தருமபுரியை அடுத்த சோகத்தூர் பகுதியில் நேற்று சாலை அமைக்கும் பணிக்கு வீடு, கடை மற்றும் அலுமினியம் பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை பணியாளர்கள் இடித்தனர்.

  நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமலும், முன்னறிவிப்பு ஏதுமின்றி இவற்றை இடித்ததால் பொக்லைன் வாகனத்தை மக்கள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரியில் ரெயிலில் அடிபட்டு ஜவுளி கடை அதிபர் உயிரிழந்தார்.
  • இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி ரயில் நிலையம் அடுத்த பிடமனேரி ஜங்சன் குடியிருப்பு பகுதியில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்ததுள்ளனர்.

  அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் உள்ளூர் போலிசார் சடலத்தை கைப்பற்றி அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.ர் அப்போது பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆதார் கார்டை வைத்து சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் இறந்து கிடந்தவர், தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியைச் சேர்ந்த சென்ன கேசவன் மகன் முகேஷ் குமார் (39). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகேஷ் குமார் விருதாச்சலத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருவதாகவும், நேற்று மனைவியிடம் பெங்களூருக்கு டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் சம்பந்தமாக செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளது ம்தெரியவந்தது.

  தர்மபுரியில் உள்ள இப்பகுதிக்கு முகேஷ் குமார் எதற்காக வந்தார் ?் முகேஷ் குமார் வியாபார நஷ்டத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வியாபார போட்டியின் காரணமாக எதிரிகள் யாரேனும் பின் தொடர்ந்து வந்து அடித்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிரகு முகேஷ் குமாரின் இறப்பு குறித்து தகவல் வெளியாகும். டெக்ஸ்டைல்ஸ் அதிபர் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரி அருகே வீட்டில் தனியாக உள்ள பெண்களை கொள்ளையர்கள் குறிவைக்கின்றனர்.
  • போலீசார் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

  காரிமங்கலம்,

  காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

  இதுகுறித்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

  காதிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் பெண்களிடம் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் பெண்கள் உறவினர் மற்றும் நண்பர் போல் நடித்து அவர்களை திசை திருப்பி ஏமாற்றி வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த தங்க நகைகளை திருடிச் செல்வது தற்போது நடந்து வருகிறது.

  குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு முன்பின் அறிமுகமில்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

  மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பொதுமக்கள் தங்களது பங்களிப்புடன் தெருக்கள் மற்றும் வீதி நுழைவாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தை ஹரீஷ் உயிரிழந்தான்.
  • கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்றது எதற்காக? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி அருகேயுள்ள கம்பைநல்லூர் உடசல்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிக் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மனைவி கலைவாணி(26). இவர்களுக்கு ஹரீஷ் (4) மற்றும் கதிர்வேல் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் நேற்று கலைவாணி தனது வீட்டின் முன்பு உள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் திடீரென தூக்கி வீசிவிட்டு அவரும் குதித்தார்.

  இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தாய் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தை ஹரீஷ் உயிரிழந்தான். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து போலீசார் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்றது எதற்காக? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print