search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து"

    • அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது.

    தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உயர்ந்துள்ளது.

    390 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 90.01 அடியாக உயர்ந்துள்ளது.

    அதன்மூலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 28,856 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரித்த வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், மேட்டூர் அணையை நீர் வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படுவதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று மதியம் முதல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 1000 கனஅடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.83 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக ஒகே னக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடி ப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதி யான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நீர்வரத்தால் தரு மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 3000 கனஅடியாக வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக சரிந்து இன்று காலை நிலவரப்படி வினா டிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டி ருக்கிறது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.

    நாளை முதல் பள்ளிகள் திறப்பாலும், கோடைவிடு முறை முடிவதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிக ளவில் தங்களது குழந்தை களுடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் பிலிகுண் டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    • திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது.

    இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கணி, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    மேலும் போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.

    ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 48.10 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 48.39 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 292 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 472 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1790 மி. கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 621 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடி. வரத்து 280 கன அடி. இருப்பு 328 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 88 கனஅடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வராகநதிக்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கும்பக்கரை, மேகமலை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராட வந்து வனத்துறை கட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    பெரியாறு 9.6, தேக்கடி 21.8, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 4.4, போடி 3.2, வைகை அணை 74.8, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 31, பெரியகுளம் 4.6, அரண்மனைபுதூர் 1.8, ஆண்டிபட்டி 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

    வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை தாழ்வு மண்டலாக மாறுகிறது.

    இதன் எதிரொலியால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது.

    நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,357 கன அடியாக உயர்ந்துள்ளது.

    பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, தொடர்ந்து கடந்த 20 நாட்களாக வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து தற்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நேற்று வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • நீர் இருப்பு 21.10 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்பட 15 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது .இதைத்தவிர மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 கன அடியில் இருந்து 79 கன அடியாக அதிகரித்துள்ளது.

    குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.10 டி.எம்.சி.யாக உள்ளது.

    • தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.
    • தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    ஓகேனக்கல்:

    கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா மக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் திடீரென நீர் வரத்து இரு தினங்களுக்கு முன்பு அதிகரித்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு வினாடிக்கு 150 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வினாடிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்கின்றன. 

    • மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.
    • ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 28-ந் தேதி நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக பதிவானது. 29-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 150 கனஅடியாகக் குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அளவுடன் நீர்வரத்து நீடித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

    கர்நாடகா மாநில குடிநீர் தேவைக்காக அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து மீண்டும் 400 கனஅடியாக குறைந்து வந்தது. இதன்காரணமாக மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.

    இன்று விடுமுறை நாள் என்பதாலும், கோடை வெயில் அதிகரித்து உள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    • உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.
    • ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4-வது நாளாக இன்று வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது . காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக தென்படுகின்றன.

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றின் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துக் கொண்டே வந்தது.

    இதனால் கடந்த 4 தினங்களாக வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது.

    மேலும் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக உள்ளது. 

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. குடிநீ ருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.99 அடியாக உள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து 17 நாட்களாக இருந்து வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 30 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 3.51 அடியாக குறைந்து உள்ளது.

    ×