என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல் விடுமுறை"
- 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
- வானகரம், மதுரவாயல் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு.
சென்னை:
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டது.
இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த தால் சென்னையில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
பொங்கல் விடுமுறைக்கு பிறகு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இதனால் வெளியூர் சென்ற மக்கள் சென்னைக்கு சனிக்கிழமை முதல் புறப்பட்டு வரத் தொடங்கினார்கள்.
தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் புறப்பட்டு வந்தனர். சொந்த வாகனங்களில் சென்றவர் களும் 2 நாட்களாக சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று தாம்பரம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று மாலையில் இருந்து சாலைகளில் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. தேசிய நெடுஞ் சாலையில் வேகமாக வந்த வாகனங்கள் பின்னர் அச்சரப்பாக்கம், ஆத்தூர் சுங்கச் சாவடியில் கடந்து செல்ல திணறியதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
தொடர்ந்து மேல் மருவத்தூர், மதுராந்தகம் வரை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்திலேயே வாகனங்கள் செல்ல முடிந்தது.
அதனை தொடர்ந்து பரனூர் சுங்கச்சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கப்பெரு மாள் கோவில், கிளாம் பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் இன்று காலை யில் இருந்து கடுமையான நெரிசல் காணப்பட்டது.
கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு வந்த அரசு பஸ்களில் இருந்து இறங்கிய மக்கள் ஆட்டோ, மாநகர பஸ், மின்சார ரெயில்களில் மாறி சென்றனர். பெருங் களத்தூரிலும் பலர் இறங்கி மாறியதால் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் முடங்கின.
மேலும் வெளியூர் சென்ற வர்கள் மின்சார ரெயிலில் ஏறி தங்கள் பகுதிகளுக்கு சென்றதால் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வண்டலூர் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடு வந்த ஆம்னி பஸ்களால் பூந்தமல்லி, வானகரம், மதுரவாயல் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இத னால் வானகரம் மதுரவாய லில் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போலீசார் நகருக்குள் செல்ல அனு மதிக்கவில்லை.
மதுரவாயல்-கோயம் பேடு சாலையில் வாகனங் கள் நெரிசலில் சிக்கியதால் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் தடுத்து நிறுத் தப்பட்டன. போரூர் சுங்கச் சாவடி வழியாக செல்ல அறிவுறுத்தினர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதிக்கு வரக்கூடிய அரசு, ஆம்னி பஸ்கள் சிரமப் பட்டன.
வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தாம்பரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி யது. மேலும் மெட்ரோ ரெயில்களிலும் காலையில் இருந்து கூட்டம் அதிகரித்தது. கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை வந்த அரசு பஸ்கள், ஆம்னி பஸ் களால் நெரிசல் உண்டானது. மேலும் தென் மாவட்டங் களில் இருந்து வந்த ரெயில் களில் வந்து இறங்கிய பயணிகளால எழும்பூர், கிண்டி ரெயில் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்ட்ரல் நிலையத்திற்கு வந்த ரெயில் நிலையங்களி லும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சென்னையில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் இன்று பரபரப்பாக காணப்பட்டது.
- தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கம்.
- பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில் ஏற்பாடு.
வரும் திங்கட்கிழமை அதிகாலை தாம்பரம் - காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To facilitate convenient travel for passengers returning from Southern #TamilNadu after #Pongal celebrations, #ChennaiDivision of #SouthernRailway will operate special EMU services with 12-Car rakes on Monday, 20.01.2025, between #Tambaram–#Kattangulattur–Tambaram. pic.twitter.com/Tf20jxePuZ
— DRM Chennai (@DrmChennai) January 18, 2025
- விடுமுறை முடிந்த நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால் விமானத்தை தேர்வு செய்யும் மக்கள்.
பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் விமானத்தில் பயணிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது.
அதேபோல திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது.
சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
- அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
- தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
தனியார் டிராவல்ஸ்களில் சாதாரண நாட்களில் இருக்கும் டிக்கெட் விலையை விட 2 முதல் 3 மடங்கு வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் ரூ. 800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ பஸ்களில் சென்னை செல்ல ரூ.3 ஆயிரத்து 700 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. நாளை நெல்லையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.4 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டாலும் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துவரும் நிலையில், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருவார்கள். தமிழகம் முழுதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலையும் குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.
பழனி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் பழனி அடிவாரப் பகுதியில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசல் குறைந்துள்ளது. எனவே இதே நடைமுறையை தொடர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பஸ்கள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வாகன நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது ஓட்டல் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதும், கூடுதல் விலை வசூலிக்கப்படுவதும் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு செல்கின்றனர். எனவே இதனையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும்.
- சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 982 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம்.
* கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லவும்.
* திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும்.
* கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை வரை தடை.
* பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
* ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது.
- கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள். 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
வண்டலூர அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பூங்கா நிர்வாகம், சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து. அனைத்து பார்வையாளர்களின் வசதியையும் உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
* பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச Wi-Fi வசதியும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பண பரிவர்த்தனைகளுக்கு தனி கவுன்டர்கள் இருந்தன. மேலும், தனி டிக்கெட் கவுண்டர்களும் அமைக்கப்பட்டது.
* இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு 8000- மேற்பட்ட பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. வாகன நிறுத்ததுமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது.
* சுமார் 6000-க்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.
* கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவ குழு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இதை. 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயன்படுத்தினர். ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
* பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து CCTV அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன.
* 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள். 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 NCC மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.
* பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன.
* பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும். வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்திருந்தது.
* அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட்டமாக அமைய சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடு செய்து பார்வையாளர்களின் மனதில் நீங்காத நினைவை உறுதி செய்தது.
இவ்வாறு பூங்கா இயக்குனர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- சிறப்பு ரெயிலானது மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது (ரெயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (15-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.
இந்நிலையில், விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.
இதனால், சென்னை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக இயக்கப்படாததால், சுமார் 1.30 மணி நேரமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.
- புதுச்சேரியில் ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15-ந்தேதி விடுமறை.
- தற்போது ஜனவரி 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாளும் புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும்.
விடுமுறையை சரிசெய்யும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை.
- 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.
- 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
- அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.
மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.