search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "penalty"

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
    • அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.

    மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர்
    • ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடையோராக காற்றாலையுடன் லாரி நிற்பதால், அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த செய்தி மாலை மலரில் படத்துடன் வெளியானது.

    இதனையடுத்து வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மொத்தம் 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியது, நீளமான காற்றாலை இறக்கைகள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் வரி செலுத்தாத வாகனங்கள் என 15 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி என ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் இந்த வாகன தணிக்கை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
    • அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.

    உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.

    ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.

    பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    • லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிராணிகள் வதை தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான போலீசார் லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு

    இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவி உள்பட 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட கோர்ட்டு 8 டிரைவர்களையும் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விஸ்வ நாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

    அபராதம்

    இருதரப்பு வாதங்க ளையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவிக்கு ரூ.5 ஆயிரம், ஓலப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமிக்கு ரூ.4.800, ஈரோடு மணிகண்டனுக்கு ரூ.4,200, சத்தியமங்கலம் முருகேசனுக்கு ரூ.6 ஆயிரம், குணசேகரனுக்கு ரூ.6,600, ஈரோடு ஜெபருல்லா என்பவருக்கு ரூ.2 ஆயிரம், நீலகிரியை சேர்ந்த கலிமுல்லாவுக்கு ரூ.3 ஆயிரம், கேரளாவை சேர்ந்த ரகிம்மோன்ட் என்பவருக்கு ரூ.3,200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மொத்தமாக 8 டிரைவர்களுக்கும் ரூ.34 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
    • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

    கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

    இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.

    ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.

    • கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட வன அதிகாரி கஷ்யப்ஷஷாங் ரவி உத்தரவு படி ஏற்காடு வனச்சரக அதிகாரி முருகன் தலைமையில் வனவர்கள் குஞ்சய் , சக்திவேல், தமிழரசன் மற்றும் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாழவந்திைய சேர்ந்த ரெங்கராஜ் (59) என்பவர் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

    பின்னர் சந்தன மரக்குற்ற வழக்கு பதிவு செய்து 2 பேருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக்காட்டில் சந்தன மரம் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தர விட்டார். அதன்படி நகராட்சி துப்புரவு அலு வலர் ரவீந்திரன் தலைமை யில் துப்புரவு ஆய்வாளர் சையது காதர், களப்பணி யாளர் மகேஸ்வரி, பசுவை வாரிய மேலாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சத்யராஜ், பாலகிருஷ்ணன், அன்புதுரை, தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர் பரிமளா, பசுவை வாரிய பணியாளர் சந்துரு மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் ரோடு பகுதி யைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் ஆட்டோவில் ஒருமுறை பயன்படுத் தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாதிக் பாஷாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதோ அல்லது மொத்த மாக விற்பனை செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என அறிவிப்பு.
    • வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் அபராதம்.

    சென்னையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகனங்களுக்கான வேக வரம்பை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னையில் இலகு ரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கி.மீ வரை செல்லலாம் என்றும்,

    இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 50 கி.மீ., ஆட்டோக்கள் அதிகபட்சம் 40 கி.மீ., வேகம் வரை செல்லலாம் என்றும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வேக வரம்பை மீறி செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள் வேக வரம்பை மீறினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது.

    வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் அபராதம் செலுத்தப்படும்.

    வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×