search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "customers"

    • பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    • அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஸ்மாட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம். கேலக்சி மாடல் ஃபோன்கள் மற்றும் நோட் மாடல் ஃபோன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.



    இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    கேலக்சி மாடல் ஃபோன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


    இதன்படி கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் ஃபோன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற ஃபோன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதால் வாடிக்கையாளர்கள் இடையே ஏமாற்றமும் நிலவிவருகிறது.

    • இந்நிலையில் ஷில்பா உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்
    • அதிக வருமானம் கிடைக்கிறது ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார். 

    மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. 

    இந்நிலையில்ஷில்பா தனது நடிப்பு தொழிலை விட இந்த உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன.

    கடந்த நிதியாண்டில் தனது ஹோட்டல் தான் ஜிஎஸ்டி தொகையை அரசுக்கு செலுத்தியதில் முதலிடத்தில் இருந்தது. ஹோட்டல் தொழில் தனக்கு மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.

    • கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செல்போனில் அழைத்த சில நிமிடங்களில் பைக் டாக்சி வந்து நிற்கிறது. அதிலும் டிரைவர்களாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பிரபல பைக் டாக்சி நிறுவனத்தின் கீழ் பெண்கள் பலர் பைக் ஓட்ட தொடங்கியுள்ளனர்.

    இதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.

    மேலும் திருமணமான பெண்கள் கணவரின் மது பழக்கத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவும் பைக் டாக்ஸி ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

    பைக் டாக்சி தொழிலில் குடும்பத்தை நடத்த தேவையான வருமானம் கிடைக்கிறது. எங்கள் நிறுவனம் ஒதுக்க கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றி சென்று விடுகிறோம்.

    இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை தருகிறார்கள். வேலையை சுற்றியுள்ள ரகசியம் காரணமாக இது போன்ற சம்பவங்களை போலீசில் புகார் அளிப்பது சவாலாக உள்ளது.

    இது போன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

    மேலும் பல பெண்கள் பைக்டாக்சி ஓட்ட தயாராக இருந்தாலும் இது போன்ற இக்கட்ட சூழ்நிலையால் அவர்கள் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர்.

    பெண்கள் ஒட்டும் பைக் டாக்ஸியில் செல்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உணர முடியும் என்பதால் தற்போது பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.

    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது.
    • அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது. இதனை தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் இல்லாததால்ஏ.டி.எம்மில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் ஏ.டி.எம்மிற்குவரும் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்கு ள்ளா கினர்.மேலும் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இருளை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் ஏ.டி.எம்.முக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக ஏ.டி.எம். உள்ளே மின் விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ரூ.999 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.
    • பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குகிறது.

    அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி வரை பிரீடம்-75 என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாரத்பைபர் இணைப்பு மாதம் ரூ.449 மற்றும் ரூ.599 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.275 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.

    மேலும் மாதம் ரூ.999 திட்டத்தை தேர்ந் தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம். குறிப்பிட்ட சில தரைவழி பிராட்பேண்ட் திட்ட இணைப்புகளுக்கு வைபை மோடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதிய பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

    தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கை–யாளர்கள், தங்களது தொலைபேசி எண்களை மாற்றாமலேயே பாரத் பைபர் திட்டத்திற்கு எந்த வித அதிக கட்டணங்களும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம்.

    மேலும் சலுகையாக மாதாந்திர கட்டணத்தில் ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். புதிதாக இணைப்புகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிர்மாண கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

    புதிய பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம்கார்டு இலவசமாக வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • மரங்களை வெட்டி காகித ஆலைக்கு அனுப்பியதற்கான தொகை ரூ. 5 லட்சம் அமலநாதனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம நபர் ஒருவர் கீழே தங்கள் பணம் நூறு ரூபாய் கிடப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அமல–நாதன் (வயது 62). இவருக்கு வல்லம்-சென்னம்பட்டி சாலையில் தோப்பு உள்ளது. அங்கு ஆர்.எஸ்.பி. மரம் வளர்த்து அந்த மரங்களை வெட்டி தமிழ்நாடு காகித நூல் ஆலைக்கு அமலநாதன் அனுப்பி தொழில் செய்து வந்துள்ளார். அவ்வாறு மரங்களை வெட்டி காகித ஆலைக்கு அனுப்பியதற்கான தொகை ரூ. 5 லட்சம் அமலநாதனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    அந்த பணத்தை எடுப்பதற்காக வல்லம் பஸ் நிலையம் அருகே வங்கிக்குசென்று ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு பணப்பையை தனது சைக்கிளில் மாட்டிவிட்டு கிளம்ப உள்ள நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் கீழே தங்கள் பணம் நூறு ரூபாய் பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி கண்ணிமைக்கும் நேர த்தில் சைக்கிளில் மாட்டி யிருந்த பணப்பையை எடுத்து க்கொண்டு வேகமாக தப்பியுள்ளார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபர் கொள்ளை–யடித்து வந்த–வரை மோட்டார் சை க்கிளில் ஏற்றிச்சென்றதாக தெரி–கிறது. நடந்த சம்பவத்தை வங்கி வாசலில் நின்று கொண்டி–ருந்த வாடிக்கையாளர்களிடம்– கூறி மர்ம ஆசாமிகளை தேடியுள்ளனர். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் வங்கிக்கு நேரில் வந்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் வங்கி உள்புறம், நுழைவு‌ வாயில் மற்றும்‌ சுற்றியுள்ள‌ பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்கா–ணிப்பு கேமராவில் பதிவாகி‌ உள்ள‌ காட்சி–களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து அமலநாதன் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த வங்கி முன்பு ஏராளமான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுமார் 8000 வாடிக்கையாளர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மற்றும் தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் நகைக்கடன் மற்றும் பல்வேறு தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.

    இந்த வங்கியில் முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறுதொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் வழங்கும் விழா வங்கியில் நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

    விழாவில் வங்கியின் தலைவர் பொறுப்பு அன்பரசு மறைஞாயநல்லூர் செவ்வாழை மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி மகளிர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் ரத்தினவேல், கண்ணன், மகாராஜான் நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வங்கி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தலைமை அஞ்சலக சேவைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.
    • ஆதார் சேவைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு பாராட்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 30-6-2022 வரையிலான முதல் காலாண்டுக்குரிய நுகர்வோர் மன்றம் கூட்டம் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மன்ற த்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற முக்கிய வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தஞ்சாவூர் தலைமை அஞ்சலக சேவை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக தஞ்சை தலைமை அஞ்சலக த்தின் தோற்றத்தில் ஏற்பட்டு ள்ள மாற்றத்தையும், வாடி க்கை யாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கனி வான சேவையையும் பாராட்டினர்.

    ஆதார் சேவைக்கு வருகி ன்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்த தலைமை அஞ்சலக நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார்கள்.மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடிய பார்ச ல்களை தலைமைஅஞ்சல கத்திலேயே சிறப்பாக பேக்கிங் செய்துமற்றும் பதிவு செய்து அனுப்பும் சேவையை பாராட்டினார்கள். முடிவில் அஞ்சலக ஊழியர் எஸ்.சித்ரா நன்றி கூறினார்.

    பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேடசந்தூர் அருகே பால் வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார். #Plasticban
    திண்டுக்கல்:

    தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நேற்று முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, வணிகர்கள் மாற்று வழியை கையாண்டு வருகின்றனர்.



    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒரு பால் வியாபாரி, பாலித்தீன் பைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களை வழங்குகிறார்.

    வேடசந்தூர் அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 39). பால் வியாபாரி. இதற்காக வேடசந்தூர்-வடமதுரை சாலையில் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருசிலர் பாத்திரம் கொண்டு வருவது இல்லை.

    மேலும் பாலித்தீன் பைகளில் பால் வாங்கி செல்வோரும் உண்டு. இதற்கிடையே தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது. இதனால் தனபால் தனது வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பைகளை வழங்குவதை நிறுத்தினார். அதேநேரம் வழக்கத்தை மாற்றி திடீரென பால் வாங்குவதற்கு பாத்திரம் கொண்டு வரும்படி வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்து விடுவார்கள் என தனபால் நினைத்தார்.

    மேலும் பாலித்தீன் பையை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் உறுதியாக இருந்தார். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரம் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று பால் வாங்க வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை (தூக்குவாளி) வழங்கினார். அதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பாலின் அளவுக்கு ஏற்ப எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கி அசத்தினார்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பாத்திரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தினார். #Plasticban
    திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதளம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே மூலசத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இஙகு சுற்று வட்டார 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேமிப்பு உள்ளிட்ட கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை திட்டம், அரசின் உதவித் தொகை ஆகியவற்றுக்கும் இதே வங்கியில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வரவு செலவு வைத்துள்ளனர்.

    கடந்த 1 மாதமாக இணைய தளம் முடங்கியுள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினசரி 10 முதல் 15 நிமிடம் வரையே இணையதளம் இயங்குகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    எனவே ஏமாற்றத்துடன் செல்லும் பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் வங்கியிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது என புலம்புகின்றனர்.

    இந்த வங்கியில் 13 பேர் வேலை பார்த்து வந்தனர். படிப்படியாக 7 ஆக குறைத்து தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தினசரி வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

    இணையதளம் முடங்கியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தினசரி பொதுமக்கள் பணம் எடுக்க மற்றும் கணக்கில் செலுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×