நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு

இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு
Published on

நெற்குப்பை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com