என் மலர்
நீங்கள் தேடியது "garbage"
- அதிராம்பட்டினத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடத்தினர்.
- 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்து, கொசுமருந்து அடித்தனர்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகராட்சி சார்பில் தினந்தோறும் அதிகாலையில் ஒவ்வொரு வார்டிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில் இன்று காலை அதிராம்பட்டினம் 9 வது வார்டில் குப்பைகள் சுத்தம் செய்தல், கால்வாய் சுத்தம் செய்தல், மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் போன்ற ஒட்டுமொத்த பணிகள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, களப்பணி உதவியாளர் பத்மினி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் சந்தானம், 9வது வார்டு உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
- குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
- குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
வேதாரண்யம்நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடற்கரையில் தூய்மை பணி மேலும் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று வேதாரணியம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது எப்படிஅதில் இருந்து உயரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்திநகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர் மக்கும் குப்பை மக்காத குப்பைதரம் பிரிப்பது எவ்வளவு சிரமங்கள் உள்ளன குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறி த்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி ஊழியக்காரன்தோப்பு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஈசானி யத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வர் மு.மரகதம் மற்றும் சுகாதார ஆய்வர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விழிப்பு ணர்வு செயல்விளக்கம் அளித்தனர்.
அப்போது 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.கஸ்தூரிபாய் மற்றும் 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்றனர்.
- மதுரையில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது.
- இதனால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.
மதுரை
தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகள் அதிகரித்தாலும் அதற்காக எந்த வசதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை.
விரிவாக்க பகுதியான அவனியாபுரம், வில்லா புரம், வண்டியூர், திருப்ப ரங்குன்றம் போன்ற பகுதி களில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை வசதி போன்றவை கொண்ட வரப்படவில்லை.
மேலும் வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. மாந கராட்சி சாா்பில் குப்பை களை சேகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் 90 சதவீதம் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் 100 சதவீதம் மனித உழைப்பை நம்பியே உள்ளது.
இதன் காரணமாக மாநகராட்சியில் குப்பைகள் முழுவதும் அகற்றப்படு வதில்லை. இதனால் முக்கிய சாலைகள், தெருக் கள் என அனைத்து பகுதி களிலும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. பண் டிகை காலங்களில் வழக் கத்தை விட குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. இத னால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மதுரையில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வாழை மரம், மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு முதல் குவியல் குவியலாக குப்பை தொட்டியில் பொதுமக்கள் போட ஆரம்பித்தனர். சிலர் நடுரோட்டிலும் குப்பைகள் கொட்டுவதை பார்கக முடிகிறது.
இதன் காரணமாக இன்று காலை மதுரை நகரம் குப்பை காடாக காட்சியளித்தது. குறிப்பாக பெரியார் பஸ்நிலையம், மாசி வீதிகள், ஜெய்ஹிந்துபுரம், மகால் பகுதிகள், ஜீவா நகர், செல்லூர், அண்ணாநகர், பி.பி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் பகுதியில் குப்பைகள் தேங்கின.
பணியாளர்கள் பற்றா குறையால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததாலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் இன்னும் அதற்கான முன்னெடுப்பை தொடங்க வில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி தற்போது சுகாதார சீர்கேட்டில் உள்ளது.
- 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
- வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி யின் அனைத்து கோட்டங்க ளிலும் மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடர் நிகழ்வின் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் தலைமை வகித்தார்.
ஆணையர் சரவணகுமார் , மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது குப்பைகள் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி உருவாகிறது.
"எனது குப்பை எனது பொறுப்பு" என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பரப்புரையயளர்கள் மூலமாக 51 வார்டுகளிலும் உள்ள வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு ஆண்டாக ஜெபமாலை புரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லாத வகையில் தூய்மை பணியாளர்கள் இணைந்து கொண்டு தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் செயல்பட 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் பணியானது மகத்தான பணி என்று பாராட்டினர்.
இதனை யடுத்து 14 கோட்டங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் லெட்சுமி, மாரியாயி, பாலகிருஷ்ணன், உலகநாதன், ராஜ்குமார், சுசிலா, சண்முகம், கணபதி, முத்துசாமி, முருகேசன், குருசாமி, கனகவள்ளி ஆகியோருக்கு மாலை அணிவித்து கீரிடம் சூட்டி நினைவு பரிசினை வழங்கினர்.
- வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
- குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சி சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த குப்பைகள் அவ்வபோது ஏரி ஊட்டப்படுவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் விளை நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருவதாக கூறுகின்றனர்.
தினமும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலம் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீனாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் செய்யப் உள்ளோம் என்றார்.
- அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
- அரசு பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
- தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். ஆணையர் நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
செந்தில் செல்வி:-
பாதாள சாக்கடை திட்டம் மன்னார்குடியில் நிறை வேற்ற உள்ள நிலையில் அதில் இணைப்பு பெறும் வீடுகளு க்கான வைப்புத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.
பாரதிமோகன்:-
பழங்கள் ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பழக்கடைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
திருச்செல்வி:-
தனது வார்டுக்கு உட்பட்ட ஆர்.பி. சிவம் நகரில், குப்பை எடுத்து வரும் வாகனங்களை எடை போடுவதற்கான நிலையத்தை அமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
கலைவாணி:-
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
எனவே, அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
ஏபி.அசோகன்:-
ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் டெண்டர் வைக்கப்பட்டு ள்ளது. அதில் உள்நோக்கம் உள்ளது.
சுமதி:-
எம்.ஜி.ஆர் நகர், தெற்கு வீதி, வடம்போக்கி தெரு ஆகியவற்றில் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்து தர வேண்டும்.
ஐஸ்வர்யலட்சுமி:-
தெருக்களில் குப்பை எடுப்பதை குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சங்கர்:-
கம்மாள தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சூர்யகலா:-
குன்னோஜி ராஜபாளையம் தெருவில் குடிநீர் இணைப்பை விரிவுபடுத்த வேண்டும்.
ராஜாத்தி:-
மீன் மார்க்கெட் கழிவுகளை அப்புறப்படுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பாலமுருகன்:-
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை இரு பக்கமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன்:-
அந்தோணியார் கோவில் தெருமழைநீர் வடிகாலை சீரமைத்து தர வேண்டும்
துணைத் தலைவர் கைலாசம்:-
பாமணி சுடுகாடு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே உள்ள வாய்க்காலுக்கு இருபுறமும் சுவர் கட்டி சீரமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு நகர்மன்ற தலைவர் சோழராஜன் பதிலளித்து பேசும்போது:-
உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்க ப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.
- செட்டித்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்குளம் உள்ளது.
- அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோ ட்டை அடுத்த அதிராம்பட்டினம் செட்டி த்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளக்கு ளம் உள்ளது.
இந்நிலையில், இந்த வெள்ளக்குளம் பல ஆண்டுக ளாக தூர்வாரப்ப டாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த குளத்தில் தான் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளித்து செல்வார்கள்.
ஆனால், தற்போது அந்த குளம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னே ற்ற கழக நகர செயலாளர் வைத்தீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
- நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.