பொங்கலூர் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் - பொதுமக்கள் பாதிப்பு

நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட இடம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வீரபாண்டி :

திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை வழியாக பொங்கலூர் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன தணிக்கை செய்யும் இடத்திற்கு போகும் இடத்தில் குப்பை கொட்டியுள்ளார்கள்.இந்த இடம் திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்டது. குப்பையை எடுத்து 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பலவகையான கழிவுகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் வருகின்றன.

இந்த தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது . இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குப்பையை உடனடியாக அகற்றியும் குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com