என் மலர்
நீங்கள் தேடியது "Assault"
- 27 சதவீத சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியதாக தெரிவித்தனர்
- சிறுவர்களில் 24 சதவீதம் பேர் தனியே நடந்து செல்ல அச்சப்படுவதாக ஒப்புக்கொண்டனர்
இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் 27 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முறையாவது பாலியல் தாக்குதலுக்கோ அல்லது தொந்தரவிற்கோ ஆளானதாக தெரிவித்துள்ளனர்.
நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும், இணையதளங்களில் எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்கள் கவனத்தை பாதிப்பதாகவும் அவர்களனைவரும் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பலர் தாங்கள் எப்போதும் மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருப்பதாக கூறினர்.
பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பற்று உணர்வதாக பல சிறுமிகள் கூறினர். உடுத்தும் உடை, உடல் தோற்றம் மற்றும் முக அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டல்களும் பகிரங்கமாக செய்யப்படுவதாக கவலையுடன் பல சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இறுக்கமான உடையணியும் போதெல்லாம் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர்.
பின்னால் யாராவது தொடர்கின்றனரா என எப்போதும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் வீடு அல்லது பள்ளி நோக்கி செல்ல மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும் சில சிறுமிகள் கூறினர்.
ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இக்கருத்து கணிப்பில் 24 சதவீத சிறுவர்களும் பாதுகாப்பின்மையை உணர்வதாக ஒத்துகொண்டுள்ளனர். கும்பலாக குழுமியிருக்கும் பிற சிறுவர்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து கூறினர்.
இன்ஃப்ளுயன்ஸர்கள் (influencers) எனப்படும் சமூக வலைதளங்களில் பதின் வயதினருக்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருபவர்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், கருத்து கணிப்பில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விழாவில ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.
- தடுக்க வந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை கொள்ளைக்காடு பகுதியை சேர்ந்த நான்கு நபர்களாக ஒன்று சேர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மொய் விருந்தோடு, காதணி விழாவும் நடத்தியுள்ளனர்.
மொய் விருந்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.
இந்நிலையில், மொய் விருந்தில் சாப்பிட வந்த நெய்வேலியை சேர்ந்த ஆறுமுகம் (வயது26), குமரேசன்,(27), இருவரும் கூடுதலாக ஆட்டுக்கறி கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.
இருப்பினும் ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த நாற்காலியை துாக்கி வீசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது,
அங்கிருந்த வேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளர்.
ஆனால், ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த கல்லால் சுரேஷை தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க வந்த சிலரையும் கண் மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சுரேஷின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் மொய் விருந்து நடத்தியவர்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போலீசார் ஆறுமுகம், குமரேசன், இருவரையும் நேற்று கைது செய்தனர் மொய் விருந்து நிகழ்ச்சியில் இரண்டு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
- இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார்.
- ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ. வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு. இவரது மகன் ரவிச்சந்திரன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வாசுதேவனூர் கிராமத்தில் இருந்து வீ.கூட்ரோடு சென்று மீண்டும் அவரது வீட்டிற்கு செல்ல இவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது பெட்ரோல் டேங்க்கை மூட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியரான அதே கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரது மகன் நல்லதம்பி (வயது 22) என்பவர் இருசக்கர வாகனத்தை முன்னால் தள்ளுமாறு சொல்லி ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டார்.
- மற்றொரு சம்பவத்தில் மகனும் சிக்கினார்.
மதுரை
மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் வரதராஜன். இவர் மதுரை ஆயுதப்ப–டையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் புதிய அரசு மருத்துவமனை பின்புறம் நின்று கொண்டு அந்த பகுதியில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனர்.
உடனே அந்த பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களும் தாங்கள் அணிந்து இருந்த ஹெல்மெட்டை கழற்றி, போலீஸ்காரர் மணி கண்டனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்கச்சென்ற தலைமைக் காவலர் வரதராஜனையும் சரமாரியாக தாக்கி உள்ள னர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது இருவரும் சிவகங்கை மாவட்டம் சிதலூரை அடுத்த பில்லூரை சேர்ந்த நிறைகுளம் என்பவரது மகன்கள் அண்ணன், தம்பிகளான பிரவீன்குமார் (வயது 27) மற்றும் நவீன்குமார் (24) என்று தெரிய வந்தது. அவர்களை போலீ சார் கைது செய்தனர்.
மதுரை போக்குவரத்து திட்ட பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான்துரை (59). இவரது மகன் ஆரோக் கிய ஜெயமுத்து. இவர் திருமங்கலம் சியோன் நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவர் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராகவும் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களில் தந்தை, மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினையில் மனவருத்தம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மகனை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு தந்தை சென்றுள்ளார்.
அங்கு தந்தை ஜான் துரையை ஆபாசமாக பேசிய மகன் அவரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஜான்துரை சுப்பிரமணியபுரம் போலீ–சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் ஆரோக்கிய ஜெயமுத்துவை கைது செய்தனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுந்தர பெருமாள் கோவிலில் இந்த பஸ் நிற்காது.
- படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் மனுநீதிச்சோழன் (வயது 28). டிரைவர். இந்நிலையில், இவர், கடந்த 29-ந் தேதி தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வர தனியார் பஸ்சில் ஏறி உள்ளார்.
அப்போது அந்த பஸ் கண்டக்டர் வலங்கைமான் அனந்தமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் (39), சுந்தர பெருமாள் கோவிலில் இந்த பஸ் நிற்காது, கீழே இறங்கவும் என கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மனுநீதிச்சோழன் செல்போன் மூலம் சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சுந்தரபெருமாள் கோவிலுக்கு அந்த தனியார் பஸ் சென்ற போது, மனுநீதிச்சோழனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பஸ்சை மறித்து கண்டக்டர் ராஜலிங்கத்தை தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ராஜலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனுநீதிச் சோழனின் உறவினர்களான சுந்தர பெருமாள் கோவில் அண்ணாநகரை சேர்ந்த பன்னீர் மகன் பரணி (25), மதியழகன் மகன்கள் கலையரசன் (32), கலையமுதன் (27), செல்வ விநாயகம் மகன் லட்சுமணன் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மனுநீதிச்சோழன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- ராமர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார்.
- ஊழியர் ராமரை தாக்கினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார். இவர் நேற்று மாலை வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியை செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரிசையில் நிற்காமல் வந்தனர். தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்கள்.
அப்போது பணியில் இருந்த ராமர், வரிசையில் வரும்படி கூறினார். இதையடுத்து வரிசையில் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள், எங்களையே வரிசையில் வர சொல்கிறாயா எனக் கேட்டு ஊழியர் ராமரை தாக்கினர்.
இதில் காயமடைந்த ராமரை, அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை க்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து. 2 வாலிபர்களை அடை யாளம் கண்டனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், பெட்ரோல் பங்க் விற்பனையாளரை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
- நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய சகோதரர் சிவசங்கர். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிவசங்கர் திடீரென்று முனுசாமி வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரிதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.
- சபரியை அதே ஊரை சேர்ந்தவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ச.செல்லம்பட்டு ஊராட்சியில் கடந்த மாதம் 21-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிக்கு வராத 10-க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு வந்ததாக முறைகேடாக பதிவு செய்து அரசு பணத்தை கைப்பற்ற திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபரி(வயது35) சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேற்பார்வையாளரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருந்த சபரியை அதே ஊரை சேர்ந்த முத்தமிழரசன், கோகுலன், ரகுராம், கவியரசன், தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் ஆபாசமாக ேபசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரி கொடுத்த புகாரின் பேரில் முத்தமிழரசன் உள்பட 6 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மயக்கம் தெளிந்த பல பெண்களுக்கு என்ன நடந்தது என நினைவில்லை.
- புகார் அளிக்கப்பட்டதையடுத்து டாக்டர் செங்கை மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.
அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி புரிந்தவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவரது இல்லம் அஸ்டோரியா பகுதியில் உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் டாக்டர் செங். அங்கு அவரை மயக்கமடைய செய்திருக்கிறார்.
மயக்கம் தெளிந்து அப்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. ஆனால் தனக்கு என்ன நடந்தது என அவருக்கு நினைவில்லை.
அங்கு அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில் டாக்டர் செங் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. இவை மட்டுமின்றி டாக்டர் செங் மேலும் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அதில் பதிவாகியிருந்தது.
இது குறித்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து டாக்டர் செங்கை அந்த மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.
இந்த விசாரணையின் போது டாக்டர் செங்கின் அலைபேசி, லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டாக்டர் செங், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையிலும், வீட்டிலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஃபென்டனில், கீடமைன், எல்எஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உட்பட பல போதை மருந்துகளும் சிக்கின.
தற்போது அவர் மீது சுமார் 50 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோதமாக பிறரை கண்காணிப்பது உட்பட பல பிரிவுகள் அடங்கும்.
விசாரணையில் டாக்டர் செங் பெண்களை திரவ மயக்க மருந்துகளின் மூலம் மயக்கமடைய செய்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
வீடியோவில் உள்ள பதிவுகளின்படி சில பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது.
மருத்துவமனையில் டாக்டர் செங் துன்புறுத்திய ஒரு பெண் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்களை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதாகவும், தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.