search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quad Summit"

    • ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது.
    • அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்றார்.

    ஹிரோஷிமா:

    ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் கூறுகையில், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் மிகவும் பிரபலமாகி விட்டீர்கள். குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

    • அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது.
    • நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம்.

    ஹிரோஷிமா:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான முக்கிய தளமாக குவாட் உருவெடுத்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு என்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது. ஆக்கப்பூர்வமான கொள்கை மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் முன்னேறி வருகிறோம்.

    சுதந்திர மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் செயலாற்றி வருகிறோம். உலகளாவிய நன்மை, மக்கள் நலன், அமைதி மற்றும் வளத்திற்காக குவாட் அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.

    2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
    • ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    சிட்னி:

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    ஜப்பானில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் தொடராது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்.

    அந்த மாநாட்டில் நாங்கள் 4 பேரும் ஒன்றாக ஆலோசிக்க முயற்சிப்போம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு தரப்பு கலந்துரையாடலை நடத்த முயற்சிப்போம்.

    இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் அடுத்த வாரம் சிட்னிக்கு வருகை தருவது இன்னும் சாத்தியமாக உள்ளது. நாங்கள் குவாட் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அதை பற்றிய கூடுதல் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

    பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு மிகவும் வரவேற்கத்தக்க விருந்தினராக வருவார். மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின.
    • கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது.

    சிட்னி:

    பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின.

    கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டின் முடிவில் இந்தோ-பசுபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்க குவாட் அமைப்பு முடிவு செய்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் மே 24-ம் தேதி குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முதல்முறையாக நடத்த உள்ளது என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

    ஜப்பான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்களுக்கு பிரதமர் மோடி நிணைவுப் பரிசு வழங்கினார்.
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் நிறைவு பெற்றது. இதனல் அவர் தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார்.

    இந்நிலையில், ஜப்பானில் குவாட் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.
    டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனித்தனியாக பரிசு வழங்கினார்.
    டோக்கியோ:

    ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார்.

    அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பைப் பரிசாக வழங்கினார்.

    சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி, உத்தர பிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை பாரம்பரியம். சஞ்சி என்பது காகிதத்தில் கையால் டிசைன்களை வெட்டும் கலை. இந்த ஓவியம் இப்பகுதியின் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ கோவில்களில் அதிகம் காணப்பட்டது. இந்த சஞ்சி கலை ஓவிய தொகுப்பு, தேசிய விருது பெற்ற கலைஞரால், மதுராவிலிருந்து வரும் தாக்குராணி மலைகளை பற்றிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.

    இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி கோண்ட் கலை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

    கோண்ட் ஓவியங்கள் மிகவும் போற்றப்படும் பழங்குடியினரின் கலை வடிவங்களில் ஒன்றாகும். கோண்ட் என்ற வார்த்தை கோண்ட் என்ற சொல்லிலிருந்து வந்தது, அதாவது பச்சை மலை. இதையடுத்து, விரைவில் இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

    மேலும், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியை பரிசாக வழங்கினார்.

    இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி உள்ளது.

    வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் என இன்று உலகம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலிருந்தும் மனித குலத்தைக் காப்பாற்றுவதற்கு புத்தர் காட்டிய பாதையில் உலகம் பயணிக்க வேண்டும். புத்தரின் ஆசீர்வாதத்தைப் பெறும் அளவுக்கு இந்தியா அதிர்ஷ்டசாலி.

    கொரோனா தொற்று காலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடியான சமயத்திலும் இந்தியா உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உதவியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கியது.

    இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை எந்த வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை உலகம் உணர்ந்து வருகிறது. இந்த திறனை வளர்ப்பதில் ஜப்பான் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. உலகில் நடக்கும் 40 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என தெரிவித்தார்.

    ×