என் மலர்
நீங்கள் தேடியது "Modi"
- வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பூஜா கெலாட் தெரிவித்தார்.
- பூஜாவின் வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கல பதக்கம் வென்றார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூஜா கெலாட், வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என விரும்பியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தார். மேலும் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பூஜா கெலாட்டின் உருக்கமான பேச்சை அறிந்த பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். வெற்றி கொண்டாடப்படவேண்டியது என்றும், வருத்தப்பட வேண்டிய தருணம் இல்லை என்றும் கூறி உள்ளார் பிரதமர்.
பூஜாவின் வெண்கல பதக்கம் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், அவரது வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மம்தா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இரு தலைவர்களும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தலைவர்களும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
- காமன்வெல்த் விளையாட்டில் அவர் பங்கேற்றது யாருக்கும் தெரியாது.
- அரசின் ஆதரவு தேவை என அச்சிந்தா சகோதரர் கோரிக்கை.
காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நமது அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ள பிரதமர், இது குறித்து புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது சாதனை, எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் பங்கேற்றது யாருக்கும் தெரியாது, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை என்றும், எங்களுக்கு அரசு ஆதரவு தேவை என்றும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்திருந்தார்.
- இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம் என மோடி பாராட்டு
சென்னை:
அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்து இருந்தார்.
உலக தடகள சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-
காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையிலும் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி கடுமையாக இருந்தபோதும் நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக கடுமையாக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணமாகும். வருங்காலங்களில் நீரஜ் சோப்ரா இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 2-ம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுக்கள்.
உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-
நீரஜ் சோப்ராவின் சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்களில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.



