என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என்னென்ன முடிவுகளுக்கு மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லவேண்டும் - சு.வெங்கடேசன்
    X

    'என்னென்ன முடிவுகளுக்கு மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் சொல்லவேண்டும்' - சு.வெங்கடேசன்

    • என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
    • அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்

    அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25%-லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக டிரம்ப் கூறிவந்தவாறே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்கள் உட்பட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.

    அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×