'பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டம்'... ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டு!

நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறிறேன்2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் முதல் நிகழ்வு
'பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டம்'... ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டு!
Published on

நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரின் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் முதல் நிகழ்வு என்று கூறப்படுகிறது. பிரதமர் இருக்கைக்கு அருகில் சென்று நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஓம் பிர்லாவின் இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com