என் மலர்
நீங்கள் தேடியது "Udhayanidhi"
- முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
- திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.
சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.
- ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம்.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் வரும் 28ம் தேதி 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
- கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
- தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
- காவிரி படுமை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது.
தஞ்சையில் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-
தஞ்சயைில் 200-ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக அதிகரித்துள்ளது. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை.
காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது. அதனால், நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி.
- மாரடைப்பு காரணமாக பொன்னுசாமி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.
பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று - பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த திரு. கு.பொன்னுசாமி MLA அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!" என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பொன்னுசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் அல்லது மூத்த அமைச்சர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்த செலுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது
பொன்னுசாமி பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- 2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம்
- அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர்- தியாகராய நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வட்ட, பாக திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், அதற்கு இளைஞர் அணி ஆற்றிவரும் பணிகளை எடுத்துக்கூறியும் உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!" என்று தெரிவித்துள்ளார்.
'அரசியல் புரிதல் இல்லாமல் கூச்சல் எழுப்பும் கூட்டம்' என்று த.வெ.க. தொண்டர்களை தான் திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் விஜயை உதயநிதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
- 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.
எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
- குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.
குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு.
- அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
கோவையில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவே திரும்பி பார்க்கும் திட்டம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக செயல் படுத்தப்படுகிறது.
எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பட்டா என்பது ஆவணம் மட்டும் அல்ல, அது உங்களுக்கான நிலத்தின் மீதான உரிமை.
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 9.6 ஆக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
- இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வாழை
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
- இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- படகு போட்டியில் ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். 1 மாதம் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2வது பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






