என் மலர்
நீங்கள் தேடியது "Krishnamachari Srikkanth"
- ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
- சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.
இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.
சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.
ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது.
- தற்போதைய பார்ம் வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஷ்ரேயஸ்-க்கு அணியில் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது. தற்போதைய FORM வைத்து பார்த்தால் ஷ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த IPL-ல் 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.. பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
என ஸ்ரீகாந்த் கூறினார்.
- ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
- கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன்.
மும்பை:
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 'ஒயிட்வாஷ்' ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் 37 வயதான கேப்டன் ரோகித் சர்மா (6 இன்னிங்சில் 91 ரன்), விராட் கோலி (6 இன்னிங்சில் 93 ரன்) ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடர் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போதே யோசிக்க தொடங்கி விட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா சோபிக்காவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஏற்கனவே அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டார். ரோகித் சர்மாவுக்கு தற்போது வயதாகி விட்டது. அவர் இளம் வீரர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தில் ரோகித் சர்மாவை பாராட்டியாக வேண்டும். நியூசிலாந்து தொடரை இழந்ததும் தொடர் முழுவதும் தான் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் சரியாக செயல்படவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். நம் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இது ஒரு மனிதனுக்கு நல்ல தகுதியாகும். தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதன் மூலம் அது அவருக்கு அதில் இருந்து மீள்வதற்கு உதவிடும் என்று கருதுகிறேன்' என்றார்.
மேலும் ஸ்ரீகாந்த் கூறுகையில், 'விராட் கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் நன்றாக ஆடுவார். அங்கு ரன் குவிப்பது அவரது பலங்களில் ஒன்று. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போதே கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது' என்றார்.






