search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "test cricket"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
    • ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.

    இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.

    எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்காளதேச அணியின் மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
    • இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோ கிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மிர்பூரில் தொடங்கியது. காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. யாசிர் அலி, எபடோட் ஹொனசர் ஆகியோருக்கு பதில் மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

    டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹொசைன் களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். இதில் 5-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் பவுண்டரி அடித்தார்.

    தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதனால் வங்காளதேச அணியின் ரன் வேகம் மெதுவாக இருந்தது.

    15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெட் விழுந்தது. ஜெய்தேவ் உனத்கட் பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாகீர் ஹசன் 15 ரன் எடுத்தார். அடுத்த ஓவரில் 2-வது விக்கெட் விழுந்தது. அஸ்வின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் (24 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்கள், நூருல் ஹசன் 6 ரன்கள் மற்றும் தஸ்கின் அகமது 1 ரனில் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்காளதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 118 ரன்கள் தேவைப்படுகிறது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மத்துல்லா ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் ஆண்ட்ரு பால்பிர்னி 82 ரன்னிலும், கெவின் ஓ பிரையன் 52 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், யாமின் அஹமத் சாய் 3 விக்கெட்டும், வகார் சலாம்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

    இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் 118 ரன்கள் தேவை என்பதால் எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. #AFGvIRE
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரகமத் ஷாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்துள்ளது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் விளையாடிய டாக்ரெல், முர்டாக் ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், இசனுல்லா ஜனாத்
    இறங்கினர்.

    ஜனாத் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரகமத் ஷா நிதானமாக விளையாடினார். ஷசாத் 40 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும் பொறுப்புடன் ஆடினார், இருவரும் அரை சதமடித்தனர். ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #AFGvIRE
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் கொண்டு வர எம்.சி.சி. கமிட்டி பரிந்துரைத்துள்ளது. #MCC #FreeHit #TestCricket
    லண்டன்:

    கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கமிட்டியில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி பரிந்துரைக்கும் விதிமுறைகளை தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெரும்பாலும் அங்கீகரிக்கிறது.

    மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன் முடிவில் சில பரிந்துரைகளை இந்த கமிட்டி முன் வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்து வீசிய புகாருக்காக கேப்டன் என்ற முறையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இரண்டரை நாட்களில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீச்சு புகார் கூறுவதா? என்று முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கெடிகாரம் (டைமர் கிளாக்) பொருத்தப்படும். ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். கவுண்ட்டவுன் ஜீரோவை எட்டும் போது பேட்டிங் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

    இதே விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணியை தண்டிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ரன் வழங்கப்படும். விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதே நேரம் முறை பின்பற்றப்படும். ஆனால் ஆடுகளத்தில் (பிட்ச்) இருந்து வீரர்களின் ஓய்வறை இருக்கும் தூரத்தை வைத்து இந்த கால அளவில் மாற்றம் இருக்கும்.

    ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும். இதனால் சுவாரஸ்யம் அதிகமாகும். அத்துடன் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் பிரீஹிட் முறை கொண்டு வரப்பட்டதும் நோ-பால் வீசுவது வெகுவாக குறைந்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் சமீபத்திய செயல்பாட்டை பார்க்கும் போது, 45 ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி ஒரு நோ-பால் கூட வீசவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 11 நோ-பால்களை வீசியிருக்கிறது. எனவே ‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டிலும் நோ-பால் வீசப்படுவது குறையும்.

    தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் (பகல்-இரவு டெஸ்டை தவிர்த்து) ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். டியூக்ஸ் வகை பந்தை இதற்கு முயற்சித்து பார்க்கலாம்.

    மேற்கண்டவாறு கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இதை செயல்படுத்துவது குறித்து ஐ.சி.சி. விரைவில் முடிவு எடுக்கும். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்ததும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில், 196 ரன்களை சேஸிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    அதன்பின்னர், இலங்கை முதல் இன்னிங்சை விளையாடியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடித்தார். ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, 68 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. டு பிளிசிஸ்-ஐ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 128 ரன்னில் சுருண்டது. இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    தென்ஆப்பிரிக்கா அணி ஒட்டுமொத்தமாக 196 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோவும், குசால் மெண்டிசும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். இறுதியில் 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெர்னாண்டோ 75 ரன்னும், மெண்டிஸ் 84 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
      
    இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்காவை 2-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது இலங்கை அணி. மேலும், தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையையும் இலங்கை அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SAvSL
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #SAvSL
    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.

    மார்கிராம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, குயின் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.



    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால், தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
     
    இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ, காசன் ரஜிதா ஆகியோர் 3 தலா விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. #SAvSL
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo