search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wicket"

    • கனவுகளை உருவாக்குவது சென்னையின் சொந்த பையன் அஸ்வின்ராவ்.
    • ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வீரர் அஸ்வினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சாதனைகளை முறியடித்து, கனவுகளை உருவாக்குவது சென்னையின் சொந்த பையன் அஸ்வின்!

    ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார். இது ஒரு உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது.

    கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாகப் பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள்.

    எங்கள் சொந்த ஜாம்பவான்களுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
    • 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

    ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே நடந்த ஆட்டத்தில் 3 விக்கெட் விழ்த்திய ரஷீத்கான் 20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை இம்ரான்தாகீருடன் இணைந்து பெற்றார். #ImranTahirs #RashidKhan
    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் ஆட்டம் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காள தேசம் 19 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ரஷீத்கான் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ரஷீத்கான் 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் விக்கெட்டை எடுத்த போது அவர் 50-வது விக்கெட்டை தொட்டார். 31 போட்டியில் அவர் 52 விக்கெட் எடுத்து உள்ளார்.

    இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை இம்ரான்தாகீருடன் (தென் ஆப்பிரிக்கா) இணைந்து பெற்றார்.



    அஜந்தா மெண்டீஸ் (இலங்கை) 26 ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருக்கிறது.#ImranTahirs #RashidKhan
    ×