என் மலர்
நீங்கள் தேடியது "ரஞ்சி டிராபி"
- ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார். கர்நாடக அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மயங்க் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கிருத்திக் கிருஷ்ணா 36 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா அணி 93.3 ஓவரில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது.
- கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- அந்த அணியின் மேலும் 5 வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. ஷுபம் பண்டிர் சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பரஸ் டோக்ரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமது 61 ரன்னில் வெளியேறினார். கண்ணையா வாத்வான் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன்கள் குவித்துள்ளது. ஷகில் லோத்ரா 57 ரன்னும், அபித் முஷ்டாக் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரும், கர்நாடக அணிகளும் மோதின.
- டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய ஷுபம் பண்டி சதமடித்து 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் அடித்தனர்.
இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய கர்நாடகா அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.
இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.
- முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமும், கே எல் ராகுல், ஸ்மரன் ரவிசந்திரன் சதமடித்தனர்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். கே.எல்.ராகுல் 141 ரன்னும், தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மரன் ரவிசந்திரனும் சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர், கிருதிக் கிருஷ்ணா தலா 60 ரன்னும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லக்ஷய் ராஜேஷ் 58 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்களும் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஆதித்யா ராவத் அதிரடியாக ஆடி 38 பந்தில் 45 ரன் எடுத்தார்.
இறுதியில், உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கர்நாடக அணி சார்பில் வித்யாதர் பாட்டீல், விஜயகுமார் வைஷாக் தலா 3 விக்கெட்டும், ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 503 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஸ்மரன் ரவிசந்திரன் இந்த இன்னிங்சிலும் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். கிருதிக் கிருஷ்ணா 52 ரன்னில் வெளியேறினார்.
நான்காம் நாள் முடிவில் கர்நாடக அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கர்நாடக அணி இதுவரை 802 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
- ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜம்மு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதிப் குமார் 146 ரன்கள் குவித்தார். ஜம்மு அணி தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் தரப்பில் முகமது சமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
26 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய பெங்கால் அணி 99 ரன்னில் சுருண்டது. ஜம்மு அணியில் நபி தார், சுனில் குமார் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஜம்மு அணி களமிறங்கியது.
அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் 24-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது உத்தரகாண்டை எதிர்கொள்கிறது.
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன
- முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்தார்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தியது. 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார். சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஸ்மாரன் ரவிசந்திரன் நிதானமாக ஆடி சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர் 60 ரன்னிலும், கிருதிக் கிருஷ்ணா 60 ரன்னிலும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இன்னும் 587 ரன்கள் பின்தங்கியுள்ளது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- பெங்கால் முதல் இன்னிங்சில் 328 ரன்களும், ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களும் சேர்த்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் வெற்றிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டிகள் கடந்த 15-ந்தேதி தொடங்கின. மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணியில் பெங்கால்- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்கால் முதல் இன்னிங்சில் சுதிப் குமார் கராமி (146) சதத்தால் 328 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
16 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 99 ரன்னில் சுருண்டது. அக்யூப் நபி, சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பெங்கால் அணி 99 ரன்களில் சுருண்டதால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 126 இலக்கை எட்டினால் ஜம்மு-காஷ்மீர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
- முதல்நாள் ஆட்ட முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தார்.
- இரட்டை சதம் அடித்த தேவ்தத் படிக்கல் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. கர்நாடகா- உத்தரகாண்ட் இடையிலான போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது. உத்தரகாணட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கர்நாடகா முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் கே.எல். ராகுல் மற்றும் தேவ்தத் ஆகியோர் சதத்தால் 2 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்திருந்தது.
தேவ்தத் படிக்கல் 148 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதம் விளாசினார். 144 பந்தில் சதம் அடித்த படிக்கல், 288 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கருண் நாயர் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரவிச்சந்திரன் ஸ்மாரன் சதம் அடித்து விளையாடி வருகிறார். கர்நாடகா 174.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்துள்ளது.
கே.எல். ராகுல் நேற்றைய ஆட்டத்தில் 211 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
பெங்காலில் உள்ள கல்யாணியில் நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பெங்கால் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 49 ரன்னில் அவுட்டானார்.
சுதீப் சாட்டர்ஜி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகினர். ஷபாஸ் அகமது 42 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய சுதீப் குமார் கராமி சதமடித்து 136 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் கர்நாடக 355 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து கே எல் ராகுலுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 148 ரன்னுடனும், கருண் நாயர் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.






