என் மலர்
நீங்கள் தேடியது "Jammu kashmir"
- கடுமையான விஷம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இந்த மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நூருல் ஹபீப், ஷகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், பேரன் சஜத் அகமது ஆகியோர் ஹபீப்பின் வீட்டில் இறந்து கிடந்தனர். ஷகினாவின் மற்றொரு மகள் ரூபினா, மகன் ஜாபர் சலீம் ஆகிய இருவரும் அதை ஒட்டி உள்ள வீட்டில் இறந்து கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. கடுமையான விஷம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில்தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்தார்,
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீரி பண்டிட்கள் மீதான அட்டூழியங்கள் இன்றும் தொடர்வது வெட்கக் கேடானது. பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைக் கூட கொன்றுவிடுகிறார்கள். இந்தியாவுடன் நிற்கும் அனைவரையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறீர்களோ, அவ்வளவு குறையும். இந்த தீவிரவாத மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது.
- காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இது கடந்த 2019-ல் 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும், 2021-ல் 229 ஆகவும் குறைந்துள்ளன.
கடந்த 2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 80 ஆகவும், 2020-ல் 62 ஆகவும், 2021-ல் 42 ஆகவும் குறைந்துள்ளது.
2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 39 ஆகவும், 2020-ல் 37 ஆகவும், 2021-ல் 41 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
- சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் 100 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திராப்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.
இதுதொடர்பாக காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு படை தொடர்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சி மற்றும் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இழுக்கும் செயலும் தொடருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 158 பயங்கரவாதிகள் இன்னும் உள்ளனர்.
அவர்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் (83 பயங்கரவாதிகள்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தவிர ஜெய்ஷ் பயங்கரவாதிகள் (30 பேர்) மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் (38 பேர்) உள்ளனர் என பதிவிட்டுள்ளனர்.
- புல்வாமா மாவட்டம் டிராப்கம் பகுதியில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவ்வகையில் நேற்று புல்வாமா மாவட்டம் டிராம்கம் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாகிகளை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில்,
லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவர்கள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த ஆண்டுதான் இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்ததும் தெரியவந்தது.
இந்த ஆண்டில் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐஜி விஜய குமார் தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
- புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்தது.
- பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் என்கவுன்டரின்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையினர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், " கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கை நடந்து வருகிறது" என்றார்.
- தோடா, கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பள்ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, காஷ்மீரின் பதேர்வா நகரில் மோதலைத் தூண்டும் வகையிலான வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
- ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
- பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினர் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் 8 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தடுப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான துபைல், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்துக்குள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள்.
அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊடுருவிய பயங்கவாதிகள், 9 பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர்.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு பூஞ்ச் மாவட்டம் பிம்பர்காலி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாக தெரிய வந்தது. உடனே அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். அந்த பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படியுங்கள்...38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு