ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்

ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

பாராமுல்லாவில் உள்ள ஶ்ரீநகர்-பாரமுல்லா-உரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தன.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com