search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gun shoot"

    • 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது.
    • தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

    அப்போது அங்கு 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது. அவர்கள் துறைமுகத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அங்கிருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறி துடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், இதன்காரணமாக அங்கு கடந்த மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
    • கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என கூறப்படுகிறது.

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • சீனா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.
    • இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளது.

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 20 புள்ளிகள் மட்டுமே எடுத்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 6-வது பதக்கம் இதுவாகும். உலக போட்டியில் பலமுறை தங்கப்பதக்கம் வென்று இருக்கும் அரியானாவை சேர்ந்த 21 வயதான மானு பாகெரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

    இந்த போட்டியில் ஜெர்மனி வீராங்கனை டோரீன் 30 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியு டு 29 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

    நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் சீனா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    • சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    • சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார்.

    262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்ற 52 பேரில் இருந்து தகுதி சுற்று மூலம் டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    • மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை.
    • வாலிபருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர்.

    ஜெர்மனி பலரைன் நகர் அருகே உள்ள அன்ஸ்பக் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த கத்தியால் ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக குத்தினான்.

    இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இதைபார்த்த மற்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் அந்த மர்ம வாலிபர் கத்தியால் ஆக்ரோஷத்துடன் கத்திக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதனை பார்த்து அவனை பிடிக்க முயன்றனர்.

    அவன் கத்தியால் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பி ஓடினான். உடனே போலீசார் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மர்ம மனிதன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தான்.

    மர்ம ஆசாமி கத்தியால் குத்தியதில் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் யார்? என்று தெரியவில்லை. அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவனுக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என ஜெர்மனி போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தான் நடத்திய தாக்குதலை பேஸ்- புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது.
    • தாக்குதல் நடத்தியவர் டென்னசி மாகாண எல்லை வழியாக ஆர்கன்சாசுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. டென்னசி மாகாணம் மெம்பிஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    அந்த வாலிபர் ஒரு கடைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தான் வந்த வாகனத்தை மற்றொரு கார்மீது மோதினார். பின்னர் அந்த காரில் ஏறி தப்பி சென்றார்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த சிலரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர். விசாரணையில் அவர் 19 வயதான எசேக்கியேல் கெல்லி என்பதும், அவர் தான் நடத்திய தாக்குதலை பேஸ்- புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு பொது மக்களை உஷார்ப்படுத்தினர். சந்தேகப்படும் நபர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தாக்குதல் நடத்தியவர் டென்னசி மாகாண எல்லை வழியாக ஆர்கன்சாசுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய எசேக்கியேல் கெல்லியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
    • 2 வயது சிறுவன் தனது பெற்றோர்களின் துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

    புளோரிடா:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புளோரிடாவில் வாழ்ந்து வந்த ரெஜி மாப்ரி - மேரி அயலா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

    இவர்களின் 2 வயது மகன் தனது பெற்றோரின் 'லோட்' செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனது பெற்றோரும் துப்பாக்கியை கவனிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் துப்பாக்கியை வைத்து தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அப்போது துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து தந்தை ரெஜி மாப்ரி தரையில் விழுந்தார்.

    விஷயம் அறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே ரெஜி மாப்ரி உயிரிழந்தார். முதலில் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் அந்த தம்பதியினரின் 2 வயது சிறுவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் விளையாடி கொண்டிருந்த எஜமானரை எதிர்பாராதவிதமாக அவரது நாய் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை வளர்த்து வந்தார்.

    ‘லாப்ராடார்’ இனத்தை சேர்ந்த அந்த நாயுடன் சோபாவில் அமர்ந்தபடி இருந்தார். துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய் திடீரென அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 ‘எம்.எம்.’ ரக துப்பாக்கியை பறித்தது.

    எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் பிஸ்டலை இழுத்தது. அதனால் துப்பாக்கிவெடித்து ரிச்சர்ட் ரெமி உடலில் குண்டு பாய்ந்தது.

    இதனால் குண்டு காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அவசர உதவி மையத்தின் 911 என்ற நம்பருக்கு போன் செய்தார். அப்போது எனது நாய் சுட்டுவிட்டது உதவிக்கு வாருங்கள் என அழைத்தார்.#tamilnews
    ×