காதல் விவகாரம்- சிறுமியை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு

சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காதல் விவகாரம்- சிறுமியை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், வழக்கம்போல் சந்தி்தது பேசியுள்ளனர்.

அப்போது, சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இளைஞர், தனது சித்தப்பா வீட்டில் இருந்த ஏர்கன் எடுத்து வந்திருந்த நிலையில், ஆத்திரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், சம்பந்தப்பட்ட சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com