என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடகா"
- இந்தியாவில் இந்தத் தடையை கொண்டுவரும் முதல்மாநிலம் கர்நாடகா.
- அடுத்த 90 நாட்களுக்குள் தடை நடைமுறைப்படுத்தப்படும்
கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்திலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சட்டப்பேரைவையில் வெளியிட்டார். அடுத்த 90 நாட்களுக்குள் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இன்றுகாலை கர்நாடக அரசு, பட்ஜெட் தாக்கலின்போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில அறிவிப்பும் வந்துள்ளது.
சிறுவர் மற்றும் சிறுமிகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் போதை (Mobile Addiction), மனநலப் பாதிப்புகள் மற்றும் கல்வித் தரக் குறைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே இதுபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவரும் முதல் மாநிலமாக கர்நாடகா உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆந்திரா அதனை பின்பற்றியுள்ளது.
- திட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உண்டு
- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, மாநிலத்தில் உள்ள பல்வேறு நதிப் படுகைகளில் பாசனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குதல் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை அறிவித்தார்.
அதில் முக்கியமான ஒன்று மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய சித்தராமையா, "இத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நமது மாநிலத்திற்குக் கிடைத்த மிக முக்கியமான சட்ட ரீதியான வெற்றி" எனக்கூறினார்.
மேலும் மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்செய்யப்பட்டு, அதனுடன் வனத்துறை அனுமதிக்கான முன்மொழிவு ஆகியவையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த நிபுணர் குழுக்கள் எடுக்கும் முடிவிலேயே இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என சித்தராமையா கூறியுள்ளார். அதேசமயம் திட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், அது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் நீதிபதிகள் முன்னர் குறிப்பிட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த டிசம்பரில் இத்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் அறிவித்தார்.
- புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு.
கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் அறிவித்தார்.
மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அவையில் தெரிவித்தார்.
முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
"புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு" என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.
முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
- இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளா
- தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சுஷ்மா (35) Dell நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக முன்பு பணியாற்றி வந்தவர்.
இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தன்னைசமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மா தனது குடும்பத்தினரிடம் முன்பே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரைப் கைது செய்த போலீசார், தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர்.
- மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமும், நிதி சுதந்திரமும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.
- குடியரசின் ஒற்றுமை என்பது, ஒற்றைத்தன்மையால் அல்ல, மாறாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையால்தான் நிலைபெறுகிறது
மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வின் முதல் பாக அறிக்கை கடந்த மாதம் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு கர்நாடகா முழு ஆதரவு தருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
"கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்டமன்ற விவகாரங்களில் அதிகரித்து வரும் மத்தியமயமாக்கல், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உத்தேசித்திருந்த அந்த நுட்பமான சமநிலையைச் சிதைத்துள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமும், நிதி சுதந்திரமும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை ஆகியவற்றில்தான் இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஆலோசித்து, நமது கூட்டாட்சி கட்டமைப்பில் சமநிலையை மீட்டெடுப்பதற்கு, 'மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' (Inter-State Council) போன்ற ஒரு வலுவான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குமாறு ஒன்றிய அரசை நான் வலியுறுத்துவேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட கர்நாடகா தயாராக உள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சித்தராமையாவின் இந்த ஆதரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
"தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையின் முதல் பாகம் மீதான வரவேற்பிற்கு சித்தராமையாவுக்கு நன்றி. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவையும், கூட்டாட்சியை மீட்டெடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் அங்கீகாரத்தையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல, 'இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு குடியரசின் ஒற்றுமை என்பது, ஒற்றைத்தன்மையால் அல்ல, மாறாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையால்தான் நிலைபெறுகிறது.' என தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார். கர்நாடக அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மயங்க் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கிருத்திக் கிருஷ்ணா 36 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா அணி 93.3 ஓவரில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது.
- கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார்.
ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் தொண்டாகிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜம்மு காஷ்மீர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கம்ரான் இக்பால் 6 ரன்னில் வெளியேற சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யாவர் ஹாசன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்னும் அப்துல் சமத் 61 ரன்னும் கன்ஹையா வாதவன் 70 ரன்னும் சாஹில் லோத்ரா 72 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர்.
173.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஜம்மு காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.
- அதிகாலை வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மணீஷ் பாண்டே (23), லட்சுமிசிராமதி (27), ரேகா பூகே மற்றும் 2 வயது குழந்தை ஹலகி பாண்டே ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஜகமண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
- கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது
கர்நாடக மாநிலத்தில் மதம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதற்காக, நான்கு மாதக் கர்ப்பிணித் தங்கையை அவரது அண்ணன் கோடாரியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மீனாட்சி. இவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கணவருடன் புதன்கிழமையன்று (பிப்.18) மீனாட்சி, கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு வந்துள்ளார். இதையறிந்த அவரது அண்ணன் மஞ்சுநாத்(35) விழா நடக்கும் இடத்திற்கு வந்து மீனாட்சியை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
நிகழ்வில் இருந்த விருந்தினர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். இதனால் மேலும் காயங்கள் தவிர்க்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீனாட்சியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புகாரின் அடிப்படையில் அலவண்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர்.
இது போன்ற கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் அடித்தனர்.
இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய கர்நாடகா அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.
இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.
- முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமும், கே எல் ராகுல், ஸ்மரன் ரவிசந்திரன் சதமடித்தனர்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். கே.எல்.ராகுல் 141 ரன்னும், தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மரன் ரவிசந்திரனும் சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர், கிருதிக் கிருஷ்ணா தலா 60 ரன்னும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லக்ஷய் ராஜேஷ் 58 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்களும் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஆதித்யா ராவத் அதிரடியாக ஆடி 38 பந்தில் 45 ரன் எடுத்தார்.
இறுதியில், உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கர்நாடக அணி சார்பில் வித்யாதர் பாட்டீல், விஜயகுமார் வைஷாக் தலா 3 விக்கெட்டும், ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 503 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஸ்மரன் ரவிசந்திரன் இந்த இன்னிங்சிலும் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். கிருதிக் கிருஷ்ணா 52 ரன்னில் வெளியேறினார்.
நான்காம் நாள் முடிவில் கர்நாடக அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கர்நாடக அணி இதுவரை 802 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.






