என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boyfriend"

    • இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பேருந்து நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
    • இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் பைக்கில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
    • இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.

    இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

    • தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார்.
    • புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து காதலனின் பேச்சை கேட்டு அவரும் இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளார். தீபன்ராஜ் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகில் உள்ள சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தீபன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
    • மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.

    நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.

    இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

    • அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.

    • மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி.

    இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார்.

    அப்போது தோழியின் உறவினரான 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். அந்த வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    இதில் மாணவி கர்ப்பமானார். அந்த வாலிபர் கருவை கலைக்குமாறு கூறினார்.

    மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்.

    மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
    • பெரிய கடை வீதி போலீசார் ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள கவரிங் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் சரவணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். பின்னர் வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இளம்பெண் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பெரியகடை வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.

    அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறிய ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    கோவை:

    திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

    அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர்.

    அப்போது அவரிடம், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.

    முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது.

    அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம்.

    ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.

    இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.

    பிரசாந்தும், செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் சம்மதத்தின் பேரில் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.

    கடந்த 5-ந் தேதி பிரசாந்தின் காதலியான தன்யாவுக்கு பிறந்த நாள். காதலியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றார். கேக்குடன் சென்று தன்யாவை வெளியே வரும்படி கூறி அழைத்தார்.

    நள்ளிரவில் வந்து சத்தம் போட்டதால் தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை கண்டித்தனர். அப்போது அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தனர்.

    இதற்கிடையே தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார். யாரிடமும் பேசாமல், தனி அறைக்குள் முடங்கி கிடந்தார். பெற்றோர் ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் அடையவில்லை.

    காதலன் இறந்த துக்கத்தை எண்ணி நாள்தோறும் கவலையடைந்தார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து வருந்தினார். இதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

    மகள் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், மீண்டும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் அவரது பெற்றோர் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.

    அவர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால் தன்யாவுக்கு உதவியாக அவரது பாட்டியை வைத்து விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

    நேற்று தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். மாணவி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக அவரின் பாட்டியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு சென்றனர்.

    வீட்டில் தன்யாவும், அவரது பாட்டியும் மட்டுமே இருந்தனர். தன்யாவுக்கு தனது காதலன் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. அவன் சென்ற இடத்திற்கே சென்று விடுவது என நினைத்து தான் முதலில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பெற்றோர் காப்பாற்றி விட்டனர். இதனால் மீண்டும் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியது.

    உடன் பாட்டி இருந்ததால், அவரை வெளியில் அனுப்ப முடிவு செய்த தன்யா, தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வா என்று தெரிவித்து, அவரை வெளியில் அனுப்பி வைத்தார்.

    பாட்டியும் பேத்தி கூறியதை உண்மை என நம்பி மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டார். பாட்டி சென்ற பின்னர் தனது அறைக்குள் சென்ற தன்யா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தன்யாவின் பாட்டி, மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தன்யாவை காணவில்லை. இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியானார். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்ததும் பாட்டி கதறி அழுதார். மேலும் தனது மகனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலன் கொல்லப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த இளம்பெண் முதல் முறை தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்த நிலையில், 2-வது முறையாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
    • அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.

    காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காதலனுடன் இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரெபேக்காள். இவர்களுக்கு சாந்தி(வயது21) என்ற மகளும், ஐசக் என்ற மகனும் உள்ளனர். சாந்தி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி மற்றும் ஐசக் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். ரெபேக்காள் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, சாந்தி வீட்டில் இல்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அப்போது ஐசக்கின் செல்போனுக்கு ஒரு நபர் போனில் அழைத்தார். அவர் சாந்தியை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துக்கொண்டு பாலக்காடு செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர். 

    ×