தனது செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலி

பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்துள்ளனர். பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அவரை ப்ளாக் செய்துள்ளார்.
தனது செல்போன் நம்பரை பிளாக் செய்த காதலனை கத்தியால் குத்திக்கொன்ற காதலி
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததற்காக காதலன் பிரசாத்தை (25) காதலி ரோஷினி (22) கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்துள்ளார்.

தன்னை பிளாக் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரோஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com