என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cell Phone"
- உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.
இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.
- செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
புதுச்சேரி:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் மாலிக் (வயது 26). இவர் அரியாங்குப்பம் பகுதியில் தங்கி அங்குள்ள டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 18-ந் தேதி புதுவை கடலூர் சாலையில் வேலை முடித்துவிட்டு நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.
மணவெளி சாராயக்கடை யில் அருகே உள்ள பகுதியில் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கு 17 வயது கொண்ட 2 சிறுவர்களும் சேர்ந்து மாலிக்கை தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
படுகாயம் அடைந்த மாலிக் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது உள்ளூர் வாலிபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 20), வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
- பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.
- கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் ஆற்றுக்கு தெற்கு பகுதியில் சுமார் 250 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த ப்படக்கூ டிய பணி நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது.
தற்போது 128 கேமிராக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சி.சி.டி.வி. கேமிராக்கள் கண்காணிப்பு அறையில் பதிவுகள் பார்க்க க்கூடிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் பயிற்சி பள்ளி ஆசிரியை யாக பணியாற்றும் காவலிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை சத்தியமங்க லம் பஸ் நிலையத்தில் 6-ம் எண் பஸ்சில் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டார்.
பின்னர் மீண்டும் அந்த பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். அங்கு சி.சி.டிவி. கேமிராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமிரா பதிவுகளை போலீ சார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியை தவறவிட்ட செல்போனை மூதாட்டி ஒருவர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.
அந்த மூதாட்டி தனது வீட்டிற்கு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றார். அந்த 2 கிலோ மீட்டரும் 25 கேமிரா க்களில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
பின்னர் போலீசார் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனை ஆசிரியை ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
- கலியமூர்த்தி தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார்.
- தங்கையா என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம்.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ( வயது 62). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார். அந்த சமயம் அவ்வழியாக வந்த முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த தங்கையா (80). என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் செல்போனை தொலைத்த கலியமூர்த்தியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்போனை ஒப்படைத்த முதியவர் தங்கையாவின் கைகளால் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். செல்போனை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரின் செயலை முத்தையாபுரம் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
- கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
- திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.
சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.
இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
- போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.
- உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலூர்:
கடலூர் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ரஞ்சிதா (31). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதா புதுவை மாநிலம் கன்னிய கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால் கணவர் தங்கவேல் கண்டித்துள்ளார்.
இதனால் ரஞ்சிதா கோபித்து கொண்டு வில்வநகர் பாப்பா தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரஞ்சிதா பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், ேதாழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ரஞ்சிதாவின் கணவர் தங்கவேலு புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ரஞ்சிதாவை தேடி வருகிறார்கள்.
- சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் மாவட்ட சிறை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை கண்காணித்த போது கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குபதிவு செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட கோவை காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (29), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட கணபதி சிங் (45) ஆகியோர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது.
இருவரிடம் இருந்த செல்போன்களை சிறைக் காவலர்கள் எடுக்க முயன்ற போது செல்போன் தர மறுத்து அவர்களிடம் 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுதமிடம் இருந்து ஒரு பட்டன் செல்போன், சிம் கார்டு, 2 பேட்டரிகள், இயர் போன் ஆகியவற்றையும், கணபதி சங்கிடமிருந்து ஒரு சிம் கார்டையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கண்காணிப்பாளர் சிவகுமார் அளித்த புகாரின் பெயரில் கோபி போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டு, பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதில் சிறை காவலர்கள் யாரேனும் இவர்களுக்கு உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
- தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமி நாதசாமி கோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலு க்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு செல்ல தடைவி தித்து உத்தர விட்டுள்ளது.
இந்த உத்தரவு நாளை (திங்க ட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.எனவே, கோவிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி கொண்டு வருவதை தவிா்க்க வேண்டும்.
மேலும், கொண்டு வருபவா்கள் தங்களது கைப்பேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலின் தெற்கு கோபுர வாசலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு தரிசனம் முடிந்து செல்லும் போது பெற்றுக்கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சேஷாத்திரி (வயது 30). முடி வெட்டும் தொழிலாளி. இவர் புதுவை யில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தாத்தா கடந்த மாதம் இறந்துவிட்டார். அவருக்கு 30-ம் நாள் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக இவரது உறவி னர்கள் டி.குமாரமங்க லத்திற்கு வந்திருந்தனர். வழி பாடு முடிந்து சென்னையை சேர்ந்த உறவினர்கள் நேற்று நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் சேஷாத்திரி வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டு சென்றனர். இதனால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் இறங்கிய உறவி னர்கள் சேஷாத்திரிக்கு போன் செய்தனர். செல்போ னை கொண்டு வந்து தரு மாறு கோரினர்.
இதையடுத்து இன்று அதிகாலை 4.30 செல்போனை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சேஷாத்திரி சென்றார். அப்போது திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பேங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான தகவலின் பேரில் திரு வெண்ணைநல்லூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேஷாத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சேஷாத்திரியின் உறவி னர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.