என் மலர்
இந்தியா

குழந்தைகள் அதிகமாக செல்போன் பார்த்தால் இதயத்திற்கு ஆபத்தா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
- ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இந்த ஆய்வை வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்நிலையில், செல்போன் திரைகளை (screens) அதிக நேரம் பார்ப்பதால் குழந்தைகளுக்கு இதய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (Journal of the American Heart Association) இந்த ஆய்வை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக நேரம் செல்போன் மற்றும் தொலைக்காட்சி திரைகளைப் பார்ப்பதால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற இதய வளர்சிதை மாற்ற ஆபத்துக்கள் அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.
அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.






