என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    IPL 2025: CSK Vs RCB போட்டியின்போது 36 செல்போன்கள் திருட்டு - 7 பேர் கைது
    X

    IPL 2025: CSK Vs RCB போட்டியின்போது 36 செல்போன்கள் திருட்டு - 7 பேர் கைது

    • கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    Next Story
    ×