என் மலர்
நீங்கள் தேடியது "Case registration"
- தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
- பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணிக்கு பண்ருட்டியிலிருந்து சேலம் மெயின் ரோட்டில். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொளப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தர்மசீலன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ரு ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தர்மசீலன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
- இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 15-பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 15 பேரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மாற்றுத்திறனாளி சுப்பிரமணி அண்ணி மாது (வயது 29) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 16-ந் தேதி கழிவறையின் உள் பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஜன்னல் மற்றும் மரப்பலகைகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணி அண்ணி மாதுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பிளஸ்-2 மாணவி. இவர் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில் பார்த்த பொழுது அரிதா இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கம் தெரிந்த இடங்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்தபோது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
- தனியார் ஆஸ்பத்திரியில் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் உல.பாலசுப்பிரமணியன் (வயது 47).
இவர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்தபோது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் உங்களிடம் பேச வேண்டும். நாங்கள் வெளியே காத்திருக்கிறோம் என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது காரில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே சென்றார்.
அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காரில் ஏறினர்.
திடீரென அவர்கள் பாலசுப்பிரமணியத்தை சரமாரியாக தாக்க தொடங்கினர்.
பின்னர் அவர்களில் ஒருவர் காரை ஓட்டி கொண்டு சென்றார்.
தொடர்ந்து ஓடும் அந்த கும்பல் பாலசுப்பிரமணியத்தை தாக்கியவாறு சென்றுள்ளனர்.
தொடர்ந்து திருவையாறு பகுதியில் காரை நிறுத்தி விட்டு செல்போன், பர்ஸ்சை பறித்து கொண்டு தப்பினர்.
இதையடுத்து பலத்த காயங்க ளுடன் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு வந்து மனைவி வளர்மதியிடம் நடந்த விவரங்களை கூறினார்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வளர்மதி தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் பெண் ஒருவரின் மகன் சந்தோஷ் (வயது 23) என்பவர் சிலருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை காரில் கடத்தி சென்று தாக்கியதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சந்தோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
சந்தோஷ் பிடிப்பட்டால் தான் இந்த வழக்கின் உண்மை தன்மை தெரியவரும்.
இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
- இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஆனந்தி (வயது 18) இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை சக்திவேல் புகார் அளித்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறனர்.
- பரமேஸ்வரி (வயது 20). திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார்.இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காவில்லை
- இவரின் தாய் போலீசில் புகார் கொடுத்தார்,
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அன்னகாரன்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பரமேஸ்வரி (வயது 20). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேந்தநாட்டைச் சேர்ந்த கணேசனுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. பரமேஸ்வரிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது பரமேஸ்வரியின் கணவர் திருமணமான 7 மாதத்தில் இறந்து விட்டார். இதனால் பரமேஸ்வரி தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 27ம் தேதி 6 மணிக்கு வீட்டில் இருந்தர் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால்ப ரமேஸ்வரியின் தாய் விஜயலட்சுமி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்தார். இதில் விசூர், மேற்கு தெரு முத்துவேல் (25) ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரியை தேடி வருகின்றனர்.
- நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
- இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன்கள் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வானூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் மணி கண்டன் (வயது 25), ஞான மணி (28). இவர்கள் 2 பேரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். தற்போது திண்டி வனத்தில் கட்டிடவேலை செய்தனர். நேற்று இரவு வேலை முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பரங்கிபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வானூர் அருகே மொரட்டாண்டி டோல்கேட் பகுதியில் சென்றபோது அந்த வழியாக லாரி குறுக்கே சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மணி கண்டன் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். ஞானமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான மணிகண்டன் உடலை கைப்பற்றி புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அனுமந்தல் கிராமம் ராமன் மகன் பிச்சப்பிள்ளை (வயது 44) இவர் நைனார்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு, கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிலள இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
- விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
- இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது
கடலூர்:
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
. இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.