search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Arani"

  • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
  • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

  வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

  இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

  அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

  கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு சடங்குகளில் ஈடுபட்டனர்.
  • அனைவரும் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

  ஆரணி:

  கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

  கேரளாவை போன்று இங்கும் நரபலி கொடுக்கப்படலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் கதவை உடைத்தனர். தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர். 


  காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

  ஆரணி அருகே பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியபாளையம்:

  ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு அய்யனார் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நேதாஜி. இவர்களது வீட்டுக்கு நடுவே மாமரம் உள்ளது. இதில் துணி காயப்போட கயிறு கட்டும் போது இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நேதாஜி கத்தியால் சர்மிளாவை வெட்டினார். இதில் சர்மிளா காயம் அடைந்தார்.

  இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேதாஜியை கைது செய்தனர்.

  திருவண்ணாமலை-ஆரணி தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK
  திருவண்ணாமலை:

  பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது.

  மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த அ.தி.மு.க.வினரிடம் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

  நேற்று திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

  திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த நேர்காணலில் வனரோஜா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் உள்பட 43 பேர் பங்கேற்றனர்.

  ஆரணி தொகுதிக்கு நடந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா உள்பட 57 பேர் கலந்து கொண்டனர்.

  2 தொகுதியில் போட்டியிட 100 பேர் ஆர்வமுடன் இருப்பது அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. #ParliamentElection #ADMK

  ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ஆரணி:

  ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

  இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

  இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணி அருகே பைக் விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணி:

  சேத்துப்பட்டு அருகே உள்ள நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 46). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர்.

  ஜெயசந்திரன் இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆரணியில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். விண்ணமங்கலம் அருகே பைக் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

  இதில் பலத்த காயமடைந்த ஜெயசந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணி:

  ஆரணி பாச்சா உடையார் தெருவில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு கோவில் வாளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

  இந்நிலையில் நேற்றிரவு கோவில் பூசாரி சுப்பிரமணியம் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார்.

  இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

  இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணியில் பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியபாளையம்:

  ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் நிவேதா (வயது 21) என்ஜினீயர். இவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிவிட்டு நேற்று கடைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

  இதுகுறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் மனோகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் என்ஜினீயரை தேடி வருகிறார்கள்.

  ஆரணி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆரணி:

  ஆரணி அடுத்த விலைகிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 30) கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு ஆரணியில் நடந்த உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.

  பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் சேத்துப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இது குறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீசார் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டிற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
  பெரியபாளையம்:

  பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் - பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

  இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

  அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.