என் மலர்

  நீங்கள் தேடியது "Woman Missing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

  கோவை:

  மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தாரணிபிரியா (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

  இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர். கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.

  சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார். அவரை மனோஜ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

  பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

  காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது தகராறு ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
  • இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

  அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

  அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
  • இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம் திருவாக்க வுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.
  • பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

  சென்னை:

  பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32).

  கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண் திடீர் மாயமானார்
  • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  திருச்சி:

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுகந்தி மீரியம்(வயது 30 ). இவர் ராஜேசை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்துள்ளனர். மத்திய பஸ்நிலையத்தில் சுகந்தி மீரியம் கழிவறைக்குச் சென்றார்.பின்னர் திரும்பி வரவில்லை இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேன்மொழி கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

  கடலூர்:

  கோண்டூர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தேன் மொழியை அவரது மகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேன்மொழியை கண்டு பிடிக்கும்படி அவரது மகள் கடலூர் புதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் கார்த்திகா(24).
  • கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  திருச்சி

  அரியமங்கலம் நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது42) இவரது மகள் கார்த்திகா(24) பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

  இந்நிலையில் கார்த்திகாவிற்கு அவருடைய பெற்றோர் திருமண நிச்சயம் செய்த நிலையில் கடந்த 13 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கார்த்திகாவின் தந்தை மகேந்திரன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி அம்மாள். இவரது மகன் மணிகண்டன் (வயது38) கொத்தனாராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ந்தேதி மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  இது குறித்து பழனியம்மாள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்
  • குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர்.

  உடன்குடி:

  ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 51) சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர். ராஜேஸ்வரி (21) எம்.ஏ. பட்டதாரி.

  இந்நிலையில் தசரா திருவிழாவிற்கு வந்தவர்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். திடீரென அதிகாலையில் கண் விழித்துப் பார்க்கும் போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இதுகுறித்து கதிரேசன் அளித்த புகாரின் பேரில் குலசே கரன்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூரில் வீட்டை விட்டு சென்ற பெண் மாயமானார்.
  • ண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

  கடலூர்:

  கடலூர் புதுப்பாளையம் புதுகுப்பம் போலீஸ் காலனி பகுதியில் உள்ள பகவந்தர் நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால். அவரது மகள் உதயமலர் (வயது 34) இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த வேணுகோபால், தனது மகள் உதயமலரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் உதயமலர் கிடைக்கவில்லை. இது குறித்து உதயமலரின் அண்ணன் ராஜ்குமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதய மலர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை செய்து உதயமலரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆன்லைன் மூலம் அறிமுகமாகி திருமணத்திற்காக கழுத்தை நீட்டிய பெண் மறுநாளே கம்பி நீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் லாரி டிரைவரை ஏமாற்றி, பணம் நகைகளுடன் முதல் இரவிலேயே மூட்டை கட்டிய பெண் குறித்து விசாரணை நடத்தினர்.

  எடப்பாடி:

  சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா.

  இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். ரம்யா ஓராண்டுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. செந்தில் தனது மகனையும் தன்னையும் கவனித்துக் கொள்வதற்காக மறுதிருமணம் செய்திட முடிவு செய்து பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தார்.

  இந்த நிலையில், நண்பர்கள் மூலமாக ஜோடி ஆப்-ல் பதிவு செய்தால் உடனடியாக வரன் கிடைக்கும் என்ற தகவல் அறிந்த செந்தில், தனது முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படத்தை ஜோடி ஆப்-ல் பதிவு செய்தார்.

  இந்நிலையில் அதே ஆப்-ல் லதா என்னும் பெண் கன்னியாகுமரி அருகே உள்ள மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் எனவும், தான் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த வரன் வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த செந்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி வந்த செந்தில் ஒரு கட்டத்தில் அந்த பெண் தனது உண்மையான பெயர் கவிதா எனவும் தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும், அது தொடர்பாக கணவர் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் தன்னையும் தனது தாயாரையும் அவர்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறி செந்திலிடம் புலம்பியுள்ளார். இதுகுறித்து உனது தாயாரிடம் கேட்கிறேன் செல்போனை அவரிடம் கொடு என செந்தில் கூறிய போது, தனது தாயார் ஊமை எனவும் அவரும் தன்னால் அவதிப்பட்டு வருவதாக கூறி அந்த பெண் அழுதுள்ளார்.

  இதை உண்மை என நம்பிய செந்தில் பல்வேறு கட்டங்களாக அந்த பெண் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு செந்திலை வரவழைத்த அந்த பெண், தான் ஊரில் இருந்து வந்துள்ளதாகவும், உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

  இதனை நம்பிய செந்தில் சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்தார். பின்பு அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த செந்தில் தனது மனைவியின் நகை மற்றும் வீட்டில் இருந்த பீரோ சாவியை தனது புது மனைவியிடம் ஒப்படைத்து அழகு பார்த்துள்ளார்.

  மேலும் அவரை அருகில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு அழைத்துச் சென்று அங்கு ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையும் திருமண பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

  பகல் முழுவதும் செந்திலுடன் சிரிக்க சிரிக்க பேசிய அந்த பெண் இரவானதும் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கொங்கணாபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று பின் சோர்வாக வந்து வீட்டில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

  அதிகாலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், நகை, பணத்துடன், செந்திலின் புது மனைவியும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது அம்மா ஞாபகம் அதிகமாகி விட்டதாகவும், அதனால் தான் நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் உடனடியாக ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன். ஒரு சில தினங்களில் அம்மாவையும் உடன் அழைத்து கொண்டு வந்து விடுகிறேன் எனக்கூறி சமாதானம் செய்துள்ளார்.

  தொடர்ந்து மாதக்கணக்கில் சாக்குபோக்கு சொல்லி வந்த அந்த பெண், செந்திலின் ஆதார் அட்டையை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளார்.

  பல வழிகளில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் லாரி டிரைவரை ஏமாற்றி, பணம் நகைகளுடன் முதல் இரவிலேயே மூட்டை கட்டிய பெண் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கோவை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் இதுபோல் பலரை மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

  இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆன்லைன் மூலம் அறிமுகமாகி திருமணத்திற்காக கழுத்தை நீட்டிய பெண் மறுநாளே கம்பி நீட்டிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சொர்ணலெட்சுமிக்கும், சரவணமுருகனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
  • சரவணமுருகன் பல்வேறு இடங்களில் தேடியும் சொர்ணலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சொர்ணலெட்சுமி (வயது34). இவருக்கும் வெள்ளாங்குழியை சேர்ந்த சரவணமுருகனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

  இந்நிலையில் கடந்த மாதம் இவரது தந்தை அருணாசலம் இறந்தார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள சொர்ணலெட்சுமி சேதுராயபுரத்திற்கு வந்தார். அதன் பின்னர் வெள்ளாங்குழிக்கு புறப்பட்டு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வெள்ளாங்குழி செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

  இதையடுத்து அவரது கணவர் சரவணமுருகன் பல்வேறு இடங்களில் தேடியும் சொர்ணலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது சகோதரர் நம்பிராஜன் (29) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சொர்ணலெட்சுமியை தேடி வருகிறார்.